பறவைகளும் மனிதர்களும்
காலையில் கதிரவன் உதித்தவுடன்
பறவைகள் கூட்டை விட்டு புறப்படுகின்றன
எதற்கு?
கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கும்
தனக்கும் இரை தேடுவதற்கு
தானும் உண்டு தன் குஞ்சுகளுக்கும்
உணவை ஊட்டுவித்து ஆனந்தமாக சுற்றி திரிந்து
மீதும் இரவில் கூட்டிற்குள் உறங்கிவிடுகின்றன
அவைகளுக்கு வேறு சிந்தனை இல்லை
இந்த உலகில் உயிரோடு இருக்கும் வரை
இந்த செயலைஓயாமல் செய்துகொண்டிருக்கின்றன
மனிதர்களும் இதையேதான் செய்கிறார்கள்
ஆனால் பறவைகள் தங்கள் குஞ்சுகள் வளர்ந்து தானே
பறக்க தொடங்கியதும் அதன் பெற்றோர்களுக்கும்அதற்கும்
தொடர்பு அற்றுப்போகிறது
ஆனால் மனித இனம் மட்டும் பந்தத்தில் சிக்கி
உடலிலிருந்து உயிர் போகும் வரை பிறர் உயிரை
எடுப்பதும் பிறருக்காக உயிரை விடுவதுமாக
துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறது
குழந்தைகளிடம் நேசத்திற்கு பதிலாக
பாசம் காட்டினால் மோசம்தான் போக நேரிடும்.
வேஷம் கலைந்துபோகும்
துவேஷம் உண்டாகும்
எனவேதான் பற்று வைக்காதீர்கள் என்று
ஞானிகள் சொல்லுகிறார்கள் .
ஏனென்றால் காலபோக்கில் நம்மையறியாமல்
பலவித பற்றுக்களில் நாம் சிக்கிகொள்கிறோம்
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் போல
வெளிவர வழி தெரியாமல் விழி பிதுங்கி
மரணத்தை தழுவும் பூச்சிகள்போல
மனிதர்களும் ஏக்கத்துடனும் நிம்மதியற்றும்
உயிரை விடுகிறார்கள்.
சேற்றில் சிக்கிய யானை போல் வெளியே
வரமுடியாமல் மேலும் மேலும் சேற்றுக்குள்
அமிழ்ந்து போய் தவிப்பதுபோல்
கனவிலும் நனவிலும் நாம் துன்பப்படுகிறோம்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் நாம்
மகிழ்ச்சியாக வாழ இறைவன் அளித்திருக்கிறான்.
அதை நாம் அனுபவித்தது போக மிகுதியானவற்றை
மற்றவர்க்கு அளித்துவிட வேண்டும்
அவ்வாறு செய்யாவிடில் நாம் துன்பத்தை
வேண்டி வரவழைத்து கொள்வது போலாகும்
என்பதை உணர வேண்டும்.
பிறருக்கு கொடுப்பதில்தான் உண்மையான
மகிழ்ச்சி இருக்கிறது.அதை அனுபவத்தில்தான்
உணரமுடியும்.கொடுப்பது எதுவாகவானாலும் இருக்கலாம்
ஆனால் அது பிறருக்கு பயனுள்ளதாக
இருக்கவேண்டும் என்பது முக்கியம்
கொடுப்பதை விளம்பரம் செய்யக்கூடாது .
உதவி பெற்றவன்தான் அதை வெளியே சொல்லவேண்டுமே
தவிர கொடுத்தவன் அதை சொல்வது முறையல்ல.
அந்த செயல் அவனின் நோக்கத்தை கறைபடுத்தி விடும்
.
முடிவில் முக்கியமான கருத்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
சொல்லிச் சென்ற கருத்தும் உவமைகளும்
பதிலளிநீக்குமிக மிக அருமை.குறிப்பாக யானை சேற்றில்
சிக்கிய உவமை. சேற்றில் சிக்கியதும் அதன் பலமே
அதற்கு பலவீனமாகிப் போகிறதே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நான் சுமார் 50 ஆண்டுகளுக்குமுன்பு ஆனைமலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் காட்டு யானைகளை குழி வெட்டி பிடிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். குழி U வடிவத்தில் இருக்கும் .யானை குழியில் விழும்போது அதன் நான்கு கால்களும் ஒன்று சேர்ந்தால்போல்தான் குழியில் விழும். விழுந்தவுடனே குடம் குடமாய் குழியில் தண்ணீர் ஊற்றுவார்கள். யானை ஒரு காலை தூக்க முயலும்போது மற்ற மூன்று கால்கள் சேற்றில் நன்றாக புதைந்துவிடும். இப்படிதான் குழியை விட்டு வெளிவர முடியாமல் சேற்றில் வசமாக சிக்கிக்கொள்ளும் .அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது .பதிவில் பதித்துவிட்டேன். யானையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன. அது வலிமை படைத்ததாயினும்அதன் எளிமை மிகவும் ரசிக்கத்தக்கது. ஆனால் மனிதர்கள் அந்த பிராணிக்கு இழைக்கும் கொடுமைகள் மிகவும் கொடூரமானவை. ஒரு பக்கம் அதை விநாயகரின் உருவமாக வழி பட்டுக்கொண்டு மறுபக்கம் அதை இழிவு படுத்துவதில் மனிதர்கள் என்ற போன்றவையில் உலா வரும் அரக்க மனம் படைத்த மக்கள்தான். வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்கும் நன்றி. திரு ரமணி அவர்களே.
பதிலளிநீக்குபிறருக்கு கொடுப்பதில்தான் உண்மையான
பதிலளிநீக்குமகிழ்ச்சி இருக்கிறது.அதை அனுபவத்தில்தான்
உணரமுடியும்.கொடுப்பது எதுவாகவானாலும் இருக்கலாம்
ஆனால் அது பிறருக்கு பயனுள்ளதாக
இருக்கவேண்டும் என்பது முக்கியம்//
அருமை!
அனுபவம் பேசுகிறது
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி RN அவர்களே
பதிலளிநீக்கு