வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-௦10)

அந்த  நாள்  நினைவிலே வந்ததே (பகுதி-௦10) 

அந்த காலத்தில் கிராமங்களில் 
உள்ள வீடுகளின் அமைப்பே அலாதியானது
காண்பதற்கு அழகானது 
இன்னும் கூட பல கிராமங்களில் அந்த நாளைய வீடுகள் 
சிலரால் பாது காத்து வைக்கப்பட்டுள்ளன 
மற்றவைகள் பராமரிப்பின்றி அழிந்துபோய்விட்டன 
அந்த கால வீடுகள் இயற்கை தட்ப வெப்ப சூழ்நிலைகளை 
கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் .
ஏழைகள் மண்ணால் சுவர் எழுப்பி 
ஓலைகளால் கூரை வேய்ந்து 
வைக்கோலால் பரப்பி இறுக கட்டி இருப்பார்கள்.

வாழ்வில் மேம்பட்டவர்களின் 
வீடுகள் சுட்ட செங்கலால்,சுண்ணாம்பு 
கலவை கொண்டு பூசி கட்டி இருப்பார்கள். 

மேல்தளங்கள் எல்லாம் தேக்கு மரத்தை குறுக்காக பொருத்தி 
அழகிய செவ்வக வடிவான செங்கல்களை அதன் மீது 
அதை ஒட்டுவதர்க்காகவே தயாரிக்கப்பட்ட 
சுண்ணாம்பு பசையை கொண்டு ஓட்டுவார்கள்.  

வேலை முழுவதும் முடிந்தவுடன் இரண்டு மாதம் தண்ணீரில் 
கடுக்காய் ஊறவைத்த தண்ணீரை கொண்டு தேங்க வைப்பார்கள்
தளம் பாறை போல் உறுதியாகிவிடும் அதற்க்கப்புறம் பல நூறு ஆண்டுகளுக்கு
வீட்டின் உள்ளே கோடைகாலத்தில் அனல் தெரியாது
மழை காலத்தில் ஒழுகாது,குளிர் காலத்தில் குளிறேடுக்காது  
பிறகு பூச்சு வேலை செய்து விடுவார்கள். 
அந்த காலத்தில் சிமெண்ட் உபயோகம்  பொதுவாக கிடையாது 

சுண்ணாம்பு அரைப்பது பெரிய அளவில் என்றால் அதற்கென 
வட்ட வடிவமான தொட்டியில் வட்ட வடிவமான 
பெரிய கல் உருளையை ஒரு நீண்ட மரதூணில் பொருத்தி  மாட்டை
 கட்டி சுண்ணாம்புடன் கடுக்காய்,வெல்லம்  முட்டையின் கரு 
 போன்றவற்றை சேர்த்து மை போல் அரைப்பார்கள். அதைத்தான் 
 வீட்டு வேலைகளனைதிர்க்கும் பயன்படுத்துவார்கள்.
இன்னும் கூட சில கிராமங்களில் அதை பார்க்கலாம் 
 நன்றாக பூச்சு வேலை செய்யப்பட்ட சுவர்கள் மழ  மழவென்று 
பளபளப்பாக பார்ப்பதற்கு இருக்கும். முகம் கூட அதில் பார்க்கலாம். 

ஒரு வீடு என்று எடுத்துகொண்டால் கண்டிப்பாக 
முன் வாசல் மற்றும் பின் வாசல்தான் இருக்கும் 
முன்வாசலை தலைவாசல் என்று அழைப்பார்கள்
அதைதெய்வீகமாக  கருதி அதற்க்கு மதிப்பளிப்பார்கள்
வீட்டு வாசற்படியை சற்று உயரம் குறைவாகத்தான் வைத்திருப்பார்கள். 
வருபவர் சற்று குனிந்து அதற்கு வணக்கம் சொல்வதுபோல் 
குனிந்து தான்  உள்ளே செல்ல வேண்டும்   
அதில் அழகிய வேலைப்பாடுகளும் கஜ லக்ஷ்மியும் செதுக்கப்பட்டிருக்கும்
 அழகிய வேலைப்பாடமைந்த பித்தளையாலான பிடியும் அமைக்கபட்டிருக்கும். 
மற்றொன்று மடி படியேறி வெளியே செல்வதற்கு ஒரு வாசல்தான் இருக்கும். 

குடிசைகள் சிறியதாக இருந்தமையால் 
ஒரு வாசல் மட்டும்தான் இருக்கும்
ஆனால் கண்டிப்பாக வீட்டின் வாசலில் இரு  பக்கமும் 
திண்ணைகள் இல்லாமல் இருக்காது 
குடிசை வீட்டு திண்ணைகளை பசும் சாணி போட்டு நன்றாக 
மெழுகி கோலம் இட்டு வைத்திருப்பார்கள் 
.பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அது போல்தான்
 வீட்டின் முன்னே சாணி தெளித்து பெருக்கி  மெழுகி 
ஒரு கோலத்தை போட்டு வைத்திருப்பார்கள். (இன்னும் வரும்)

4 கருத்துகள்: