செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஓடுபவனும் ஓட்டுபவனும் ஒட்டுபவனும்

ஓடுபவனும் ஓட்டுபவனும் ஒட்டுபவனும்

சிலர் காலையில் கண்விழித்ததிலிருந்து 
இரவு உறங்கும்வரை ஓடிக்கொண்டிருக்கிரார்கள் 
அவர்கள் களைப்படைவதேயில்லை 
நோய்வாய்ப்பட்டோ  அல்லது வேறு 
ஏதாவது காரணங்களினாலோ அவர்களால் 
ஒரே இடத்தில்  இருக்க நேரிட்டால் 
அதை அவர்களால் தாங்க முடியாது 
அவர்களை பார்க்க வருபவர்களிடமும்,
வீட்டில் இருப்பவர்களிடம் தங்கள் உள்ள 
குமுறலை கொட்டி தீர்த்து விடுவார்கள்.
 சிறிது உடல் சுதாரிக்க தொடங்கியதும் 
அவர்கள் ஓடத் தொடங்கிவிடுவார்கள்

சோம்பி திரிபவர்களைக் கண்டால்
 இவர்களுக்கு பிடிக்காது 
அவர்களுக்கு வேலை
 இருக்கிறதோ இல்லையோ 
வீட்டை விட்டு வெளியே போய் 
ஊரை சுற்றுவதும்
வெட்டி கதைகள் பேசிவிட்டு 
வீடு திரும்புவதும் 
ஒரு சிலரின் வாடிக்கை.
இவர்கள் ஒரு ரகம் 

வீட்டில் இருப்பவர்கள் இவர்கள் கூறுவதை 
கேட்கிறார்களோ இல்லையோ ,
அவர்கள் அன்று நடந்த ,பார்த்த செய்திகளை
 சொல்லிகொண்டிருப்பார்கள்.
 வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த விதத்திலும்
 உதவி செய்ய மாட்டார்கள் அதனால் அவர்கள் மீது 
வீட்டிலுள்ளவர்களுக்கு வெறுப்பு இருக்கும். 
அது ஏதாவது ரூபத்தில் 
அவர்கள் மீது வெளிப்படும். 
அப்போதுகூட அவர்கள் தங்கள்
போக்கை மாற்றிக்கொள்வதில்லை 
கோபித்துக்கொண்டு மீண்டும் 
வெளியே சென்று விடுவார்கள்
சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் 
வீட்டிற்கு வந்துவிடுவார்கள். 
இது ஓடுபவர்களின் நிலை 

இனி ஓட்டுபவர்களின் நிலையை பார்ப்போம்.

இவர்கள் தான் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்
பிறரை அதை செய் இதை செய் 
என்று விரட்டிக்கொண்டே இருப்பார்கள். 
பல நேரங்களில் இவர்கள் தொல்லை 
தாங்க முடியாமல் எரிச்சலை 
ஏற்படுத்தும் அளவிற்கும் இருந்துவிடும்.
இவர்கள் கையில் காசு இருக்கும்வரைதான்
இவர்கள் ஜம்பம் சாயும்.
ஒன்றும்  இல்லையென்றால் இவர்களின் 
பேச்சிற்கு மதிப்பிருக்காது,மரியாதையும் இருக்காது
குடும்பத்தால் ஒதுக்கப்படும்போது
இவர்கள் மனம் உடைந்து போவார்கள். 

இனி ஒட்டுபவர்களின் நிலையை பார்ப்போம்

இவர்கள்தான் இந்த உலகில் நன்றாக பிழைக்க தெரிந்தவர்கள்.
முதல் இல்லாமல் வியாபாரம் செய்பவர்கள். 
இவர்கள் அவரவர்களுக்கு சாதகமாக பேசி நடந்துகொண்டு 
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுவார்கள். 
இவர்கள் ஓட்டுபவர்களுக்கும் ஓடுபவர்களும் 
இடையே பாலமாக இருந்துகொண்டு 
குடும்பத்தில் சமநிலையை கொண்டு வருவார்கள். 

நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்  
என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். 
  .

8 கருத்துகள்:

 1. ஒவ்வொன்றையும் அழகாக மனதில் ஒட்டி விட்டீர்கள்...

  இரண்டு "ஓட்டுபவர்களின்" (இடையில் உள்ள தலைப்பில்) வந்து விட்டது சார்...

  சரி செய்யவும்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. சரியாக சொன்னீர்கள்
  சரி செய்துவிட்டேன்
  நன்றி .DDsir

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமை
  உலகில் உள்ளவர்கள் அனைவரையும் இந்த மூன்றுக்குள்
  நிச்சயம் அடக்கிவிடலாம்.நீங்கள் குறிப்பிடுவது போல்
  மூன்றாவது நபர்தான் இந்தக் காலத்திற்கு ஏற்றவர்
  ஆழமான சிந்தனை.அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 5. எண்ண ஓட்டத்தை இரசித்தேன்!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 6. ரசிப்பதர்க்குதான் என் பதிவு
  அது நிகழ்ந்தால் ஒரு நிறைவு
  நன்றி காரஞ்சன் அவர்களே

  பதிலளிநீக்கு