அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -5)
பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்றும்
மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்றெல்லாம் பெண்ணை போற்றி
பாடிய பூமி நம் பாரத பூமி.
எல்லா தாயும் பெண்களாக இருக்கலாம்
ஆனால் எல்லா பெண்களும் தாயாக ஆகிவிடுவதில்லை
தன் கற்புத்தன்மையை போற்றி பாதுகாக்கும் பெண்
தெய்வங்களாலேயே போற்றப்படுகிறாள்
அவள் கோரிக்கைகளுக்கு அனைத்து விதிகளையும் மீறி
தெய்வங்கள் அவர்களுக்கு வரமளிக்கின்றன
பெண்ணை வயது வித்தியாசம் பாராது அன்னையாகவே
மதிக்கும் பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு.
நதிகள், மரங்கள், மலைகள் என அனைத்திற்கும்
பெண்கள் பெயரை சூட்டி மதித்த நாடு நம் நாடு
வீட்டு வாயிலில் பிச்சைஎடுக்கும் ஒருவன் கூட
அம்மா தாயே பிச்சை போடு என்றுதான் கேட்கிறான்
பெண் தியாகத்தின் மறுஉருவம்.
அவள் குணத்தால், செய்கையால்
மேலோங்கிநின்றது அந்தக்காலம்
இன்றும் அது போன்ற சிலர்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களால்தான் இந்த உலகம்
இன்னும் அழியாமல் இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் கல்வியறிவு பெற்று,வேலை தேடி
பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் இருந்தாலும்
நம் நாட்டின் உயர்ந்த பண்புகளை காற்றில் பறக்க விட்டு திரிவது
அதிகரித்துவிட்டது.
பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக விளங்கி அவர்களின்
வாழ்க்கையை கேள்விகுறியாக்கிவருகின்றனர்
பெண்கள் ஒரு போக பொருளாக கருதும் மனப்பான்மை
இந்த உலகில் அதிகரித்துவிட்டது. அதனால்
அவர்களின் பாதுகாப்பு, சுய மரியாதை, போன்றவை
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன
அந்த காலத்தில்வீட்டிலேயே
பூட்டி வைக்கப்பட்ட பெண்கள்
இன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வருகின்றனர்
அன்றைய பெண்கள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தார்களென்றால்
இரவு படுக்க செல்லும் வரை செய்த வேலைகளில் ஒரு பங்கு கூட
இக்கால பெண்களால் செய்ய முடியாது.
அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள் .
இக்காலத்தை போல் வீட்டில் இரண்டு நபர்கள் இருக்கமாட்டார்கள்.
ஏழெட்டு நபர்கள் இருப்பார்கள்.
அனைவரின் தேவைகளையும் கவனிப்பார்கள்.
அக்கால பெண்கள்.
அதுவும் முணுமுணுக்காமல் பணிகளை திறம்பட ஆற்றுபவர்கள் அவர்கள்.
வீட்டை நிர்வாகம் செய்வது, வீட்டு அனைத்து வேலைகளையும் செய்வது,
சமையலை, அருமையாக செய்து வீட்டிலுள்ளவர்க்கும்,
விருந்தினர்க்கும் பரிமாறுவது , கைவினை பொருட்கள் செய்வது
பாடுவது, என பன்முக திறமைகள் கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.
அந்த காலத்தில்,அரவை இயந்திரங்கள்
இன்று உள்ளதுபோல் எதுவும் கிடையாது.
அனைத்தும் கைகளை கொண்டே இயக்கவேண்டும்.
அவர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று இக்கால சீர்திருத்த வாதிகள்
கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தி அவர்கள் செயற்கரிய சாதனையாளர்களாக வலம் வந்துள்ளனர் என்பதை வரலாற்றை கூர்ந்து நோக்கினால் தெரியவரும்
.
அவர்கள் உடல் உறுதியுடனும், மன உறுதியுடனும்
நோயின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். .
.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
இந்தக் கால வளர்ப்பு முறை சரியில்லை என்று சொல்வதா...?
பதிலளிநீக்குபடிக்க படிக்க 'கிரீடம்' ஏறுகிறதே.... அதை சொல்வதா...?
/// பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக விளங்கி அவர்களின்
வாழ்க்கையை கேள்விகுறியாக்கிவருகின்றனர் ///
100% உண்மை...
(உங்கள் பதிவிடும் வேகத்தைக் கண்டு வியப்படைகிறேன்...)
நன்றி...