திங்கள், 17 செப்டம்பர், 2012

பாரதி கண்ட கனவு உண்மையா?

பாரதி கண்ட கனவு உண்மையா? 
காடனும் மூடனும் 

மூடா: ஹேய் காடா
 பாரதி அன்று 
ஒரு பாட்டு பாடினாரே ,அது உண்மையா?
காடா: என்ன பாட்டுன்னு சொல்லு
மூடா: ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று.
காடா: அதை சொல்கிறாயா?
மூடா: ஆமாம் 

காடா: இந்தியர்களுக்கு எப்போதும் ,
எதிலும் சுதந்திரம் கிடையாது, 
கிடைக்காது என்பதுதான்  உண்மை 
அவர்கள் எப்போதும் நாட்டிற்கு
 உழைக்கும் நல்லவர்களை சுயநலத்திற்க்காக
 எதிரிகளிடம் காட்டி கொடுத்து ஆதாயம் 
அடையும் பரம்பரையில் வந்தவர்கள்.
 அவர்களுக்கு எப்போதும் ஆள தெரியாது 
அடிமைகளாக இருப்பதில்தான் விருப்பம்.

மூடா: எப்படி சொல்கிறாய்? 
காடா: வெளி நாட்டவர்கள் இந்தியாவிற்கு 
வியாபாரம் செய்ய வந்தவர்கள் ,
நம்மை அடிமைகளாக ஆக்கி ஆட்சி செய்யும்
அளவிற்கு வாய்ப்பும் வசதிகளும் செய்து 
தந்தவர்களே நம் நாட்டில் உள்ள சில துரோகிகளே .
ஏன் பல சுதந்திர தியாகிகளை வெள்ளையர்களிடம் 
காட்டி கொடுத்து அவர்களின் 
உயிரை பறித்தவர்களும் இங்குள்ளவர்களே

மூடா: இன்றும் அதே தவற்றைதான்
ஆளும் கட்சியினர் செய்கின்றார்களே 
காடா:வெளிநாட்டுநிறுவனங்களுக்கு
நம் உள்ளூர் சந்தையை  திறந்து விடுவதைத்தான் நீ சொல்கிறாய்

மூடா: ஆமாம். இது மீண்டும் நம் நாட்டு மக்களை வெளிநாட்டு
முதலாளிகளிடம் (முதலைகளிடம்) அடகு வைக்கும் திட்டம்.
காடா: மக்கள் இப்போது விழித்து கொள்ளா  விட்டால் மீண்டும்
முழு அடிமைகள் ஆவது திண்ணம் 

மூடா: நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை 

காடா: நம் நாட்டிற்கு சுதந்திரம் வந்துவிட்டது 
என்பது வடிகட்டிய பொய்
மூடா: எப்படி?
காடா; நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 
ஒரே நாட்டினிடம் மட்டும் அடிமையாய் இருந்தது 

மூடா:அதாவது விக்டோரியா மகாராணியிடம் மட்டும்
காடா: நீ சொல்வது சரி.
மூடா: இப்போது யாரிடம் அடிமையாக இருக்கிறது?
காடா: இன்னுமா புரியவில்லை ?
மூடா :புரியவில்லை

காடா: அவர்கள் கை காட்டுபவர்கள்தான் ஜனாதிபதி, 
பிரதம மந்திரி,மற்றும் மதிய,மற்றும் மாநில அமைச்சர்கள் ,
ஏன் இன்னும் மாநில கட்சி நிர்வாகிகள்.கூட  

காடா: ஒரு தமிழ் படத்தில் ஒரு பாட்டு வரும்.
எல்லோரும் கேட்டிருப்பார்கள்.சோனியா சோனியா  
சொக்க வைக்கும் சோனியா ...

மூடா: இப்போது புரிந்து  விட்டது. 

காடா: மற்ற இந்தியர்கள் எப்போது
 புரிந்து கொள்ளபோகிரார்களோ?
மூடா: இதையெல்லாம் சிந்திக்க 
அவர்களுக்கு ஏது நேரம்?

1 கருத்து:

  1. புரிந்து விட்டது சார்...

    முடிவிலும் ( இரு வரிகளில் ) உண்மையை சொல்லி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு