திங்கள், 24 செப்டம்பர், 2012

மனித குலமே இது போதும்.

when the ants are able to make a mark 
on a hard rock by constant running over it
why not the humans chant the name of GOD 
constantly to form a thought about GOD in their 
hearts which has become hard as rock 
due to lack of love towards their fellow beings and other species. 

எறும்பூற கல்லும் தேயுமன்றோ 
என்ற செய்தியை சிலர் 
கேள்விபட்டிருக்கலாம். 

எறும்புகள் மிக சிறிய உயிரினம். 
அது கடினமான பாறை மீது
ஆயிரக்கணக்கில் தொடர்ந்து செல்லும்போது
 பாறை தேய்ந்து 
பாதை உருவாகும். 

அதைப்போலத்தான் மனிதர்களும் 
இறைவனின் நாமத்தை தொடர்ந்து 
உச்சரித்து வந்தால் ஈவு இரக்கமற்று,
 சக உயிரினங்களின் மீது 
அன்பில்லாது பாறை போன்ற 
கடினமானமனதை உடைய 
மனிதர்களின் மனம் இளகும்

அதில் இறைஅன்பு ஊற்றெடுக்கும் 
என்பது சத்தியம்.

மனித குலமே இது போதும்.
அன்பில்லாமல் விலங்குகள் போல் 
ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு
மாண்டு போவதை நிறுத்தவேண்டும். 

இவ்வுலகில் பிறந்த அனைத்தும்
ஒருநாள் மாண்டு போகும்
அந்த நாள் வருவதற்குள் நீங்களாகவே 
உங்கள்வாழ்வை தற்கொலை மூலமோ
அல்லது பிறர் வாழ்வை வன்முறை மூலமோ 
முடித்துக்கொள்கிறீர்கள்? 

இனியாவது மனிதர்களாக வாழ 
முயற்சி மேற்கொள்ளட்டும். 

இறைவன்தான் மக்களின் மனதில்
இந்த சிந்தனையை 
வலுப்படுத்தவேண்டும்.  

3 கருத்துகள்:

  1. இந்தக் காலச் சூழலில் நிச்சயம் அனைவர் மனத்திலும்
    அவசியம் இருக்கவேண்டிய கருத்து
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துக்கள்...

    மனிதன் எறும்பிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...

    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி திரு ரமணி மற்றும் DD அவர்களே

    பதிலளிநீக்கு