அந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி -2)
குழந்தையை பார்த்தாலே ஒரு பரவசம்,
ஒரு இனம் புரியாத ஆனந்தம்
பால் மணம் மாறா குழந்தையிடம்
இருந்து வெளிப்படும் மணம்
இவைகளை மென்மையாக அனுபவிக்கவேண்டும்.
எத்தனை ஆண்டுகளானாலும்
அந்த இன்ப அனுபவம் நம் நினைவை
விட்டு அகலவே அகலாது.
ஆனால் இந்த காலத்தில் அவைகளுக்கெல்லாம்
ஏது நேரம் மக்களுக்கு?
ஓட்டம் ,ஓட்டம் ,ஓட்டம்
இதுவொன்றுதான் அவர்களுக்கு தெரியும்.
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து மகிழ
அவர்களுக்குநேரமும்மில்லை,
அவர்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது.
ஆனால் தேவையற்ற,கவைக்குதவாத பல விஷயங்களை
பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்.
அவர்கள் நினைவெல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்கு,
குறிப்பிட்ட இடத்தை அடையவேண்டும்.அதே போல் மாலையிலும்
அதே பாடு .இவர்கள் படும் பாடு மிகவும் வேதனைக்குரியது.
உண்மையான மகிழ்ச்சி எது என்பது அவர்களுக்கு தெரியாது.
வீட்டிற்கு வந்ததும் தொலை காட்சிபெட்டிக்குள் தொலைந்துபோவார்கள்
சிலர் கைபேசிக்குள் முகத்தை புதைத்து கொள்வார்கள்.வாய் ஒயும்வரை,காதுகள் செவிடாகும்வரை.,கை விரல்கள் சுளுக்கி கொள்ளும்வரை
சிலர் கணினிக்கும் கண்களும்,விரலாலும்
சோர்ந்து போகும்வரை எதையாவது பல மணி நேரம் எதையாவது தேடிகொண்டிருப்பார்கள். கணினியில் அழையா கிருமிகள்
லட்சக்கணக்கில் நுழையும் அதே வேளையில்
இவர்கள் மனதிலும் கோடிகணக்கான குப்பைகள்
இவர்கள் அறியாமலேயே இவர்களின்
மனதில் புகுந்துகொண்டு விடும் .
அது இவர்களை மேலும் குழப்பும்.
கணினி நிறுத்தும்போது தேவையற்ற வற்றை
நீக்குவது கிடையாது. அதுபோல் மனதில்
தேவையற்றவற்றை நீக்க இவர்களுக்கு தெரியாது.
ஏனெனில் அப்படி செய்யவேண்டும் என்று
அவர்களுக்கு தெரியாது
முடிவில் சோர்ந்து போய்.
எந்த முடிவுக்கும் வர முடியாமல்,
எதிலும் திருப்தியடையாமல்
எதையோ தின்றுவிட்டு தூங்க செல்வார்கள்.
தூங்க சென்றால் அங்கு நிம்மதியாக தூங்க முடியுமா ?
அவர்களுக்காக கொசுக்கள் அவர்கள் குருதியை
உறிஞ்ச உறுதியாக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும்
.கொசு விரட்டிகள் எல்லாம் அதற்க்கு ஜுஜூபி.
மின்சார மட்டைகளில் மடிந்தாலும் பரவாயில்லை,
தங்கள் கூட்டத்தில் சில கொசுக்களை இழந்தாலும் பரவாயில்லை,
அவர்கள் தூங்கிய உடன் அவைகள் தங்கள் வேலையை காட்டிவிடும்
மீண்டும் இதே கதைதான் அடுத்த நாளும்
பாவம் இக்காலத்து மனிதர்கள். (இன்னும் வரும்)
.
.
அதுவும் குழந்தைகள் செய்யும் அளவில்லாத சேட்டைகள் ...ம்... ரசித்துக் கொண்டே இருக்கலாம்-நாமும் குழந்தையாக மாறி விட்டால்...
பதிலளிநீக்குஇயந்திரமான வாழ்வு,,
பதிலளிநீக்குபுன்னகை ஏது..?
அருமை சகோ,,,
உண்மைதான்!
பதிலளிநீக்குஉண்மை எப்போதும்
பதிலளிநீக்குஉண்மையாகத்தான் இருக்கும்
எப்போதும் பொய் பொய்தான்
தொழிற்க்களம் குழுவின் கருத்துக்கு
பதிலளிநீக்குஇயந்திரங்களை பயன்படுத்துவதில் தவறில்லை
அது காலத்தின் கட்டாயம்
அதற்காக நாமும் இயந்திரம்போல்
உணர்சியில்லாமலோ அல்லது
அன்பில்லாமலோ, பொறுப்பை தட்டி கழித்தோ
செயல்படவேண்டும் என்ற பொருளில்லை