புதன், 26 செப்டம்பர், 2012

அந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே .


அந்த நாள் ஞாபகம் நினைவிலே வந்ததே
மார்கழி  மாதத்து  அதிகாலை குளிர்.
அருகருகே போர்த்து படுத்திருந்தனர் 
ஒரு கணவன் மனைவி. 
அன்பும் பணிவும் ஒருங்கே அமைந்தவர்கள். 
ஆதலால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை 
அருகே வா,குளிர் வாட்டுகிறது 
அணைத்துக்கொள்  என்கிறான் அவன்
அவள் உடனே கூறுகிறாள் 
அணைக்கும் நேரம் அல்ல இது 
அரவணையில் அரிதுயில் கொள்ளும் 
அரவணையானை நினைக்கும்  நேரமிது
என்றபடியே படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள். 

ஒரு காலத்தில் இப்படிதான் நம் மக்கள் இருந்தார்கள்.
பணிவும், அன்பும்,பக்தியும் வாழ்வோடு இணைந்து 
கோலோச்சிய கால கட்டம்  
எழுந்தவுடன் என்ன செய்தாள்?
காலை கடன்களை முடித்தாள்.குளித்தாள்,
தூய ஆடைகளை அணிந்துகொண்டு 
,தூய மனதோடு இறைவனுக்கு தீபம் ஏற்றினாள்
இறைவா இன்றைய பொழுது 
நன்றாக இருக்க வேண்டும் 
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் 
என்று பிரார்த்தித்தாள் .

இவள் எழுந்துகொண்டதை அறிந்துகொண்ட 
அவள் வீட்டு பசு அவளை 
அம்மா .. என்று அழைத்தது .
ஆம், அவள் அவள் பெற்ற சிசுவுக்கு மட்டும் 
அம்மா அல்ல ,அவள் வீட்டு பசுவுக்கும் அம்மாதான் அவள்.

ஏணையில் படுத்திருந்த குழந்தையும் 
அம்மா எழுந்துகொண்டுவிட்டதை 
தெரிந்துகொண்டு விட்டது .
ஆனால் அதற்கு இன்னும் அம்மா என்று 
முழுவதுமாக அழைக்க தெரியவில்லை. 
அது மழலையில் முனகியது. 
ஆனால் அதன் மொழி அவள் தாய்க்கு  தெரியும்
உடனே அவள் குழந்தையை எடுத்து தழுவி 
முத்தமிட்டு ஏன் கண்ணா நீ இன்னும் 
சிறிது நேரம் தூங்கு ,பிறகு வந்து 
உன்னை கவனிக்கிறேன் என்று 
சொல்லி அதை தூளியில் விட்டவுடன் 
அது அஆவ் என்று அழகான கொட்டாவி விட்டுவிட்டு 
தன் தூக்கத்தை தொடர ஆரம்பித்துவிட்டது.
 (இன்னும் வரும்)    

4 கருத்துகள்:

  1. என்ன சார் தொடரா...? அருமை...

    தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. முயற்சி செய்யலாமே என்றுதான்
    போட்டுவிட்டேன்.
    நடக்குமா என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. பொறுமையாய் படித்து
    அருமை என பாராட்டியதற்கு நன்றி
    திரு சேஷாத்ரி அவர்களுக்கு

    பதிலளிநீக்கு