அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -3)
பசு அழைத்திடும் குரல் கேட்டு
மாட்டு கொட்டகைக்கு வந்தாள்
இக்கால மனிதர்களுக்கு
சினிமா கொட்டகையை பற்றியும் தெரியாது
வந்தவள் பசுவின் அருகில் சென்று
அதை தொட்டு கண்களில் ஒற்றிகொண்டாள்
கோமாதாவே எங்கள் குடும்பத்தை
காப்பாற்று என்று வேண்டிகொண்டாள்
பசு அவளை தாயாக நினைக்கிறது.
அவளோ அந்த பசுவை
இந்த பூமிக்கே தாயாக நினைத்து வணங்குகிறாள்
பரஸ்பரம் அன்பு காட்டும் பண்பு
நம் மண்ணை விட்டு மண்ணோடு
மண்ணாகி போய் விட்டது.
அதற்க்கு தண்ணீர்,வைக்கோல், பிண்ணாக்கு,
கழுநீர் போன்றவற்றை வைக்கிறாள்
அது அன்போடு உண்டுவிட்டு.தாயே
என் மடியில் பால் சுரந்து தயாராக இருக்கிறது
கறந்து எடுத்துகொள் என்று சொல்லாமல் சொல்கிறது.
அவளும் பள பளவென்று தேய்த்து வைக்கப்பட்ட
பித்தளை பாத்திரத்தில் மடியை கழவி
பாலை கறந்து வெள்ளை வெளேரென நுரையுடன்
எடுத்து சென்று சமயலறையில் வைத்துவிட்டு.
கொட்டடிக்கு வந்து சாணியை எடுத்து
தண்ணீரில் கரைத்து வாசலில் தெளித்து ,
பெருக்கி சுத்தப் ப்படுத்துகிறாள்.
பிறகு அரிசி மாவினால்
அழகாக கோலம் போட ஆரம்பிக்கிறாள்
உடனே கா கா அக்கா என்று காகங்கள்
அங்கே குழுமி விடுகின்றன.
ஆம் அவள் காகங்களுக்கு அக்கா ஆகிவிட்டாள்
ஒரு ஓரமாக அணில்களும் அந்த அரிசி மாவை தின்பதற்கு
பிப்,பிப் என்று கத்திகொண்டே
தன் வாலை ஆட்டிக்கொண்டு தயாராக நிற்கின்றன.
எறும்புகளும் தன் ஆயிரக்கணக்கான சுற்றத்துடன்
தங்கள் பசியை தீர்த்துக்கொள்ள அங்கு
சாரை சாரையாக படையெடுக்கின்றன.
அந்த எறும்புகளை பிடித்து தங்கள் பசியை தீர்த்துக்கொள்ள
சில குருவிகளும் அங்கே தயாராக அங்கே நிற்கின்றன.
சத்தம் கேட்டு சோம்பல் முறித்து பூனையொன்று
சத்தம் போடாமல் அங்கு வரும் அணில் குட்டிகளில்
எதையாவதொன்றை காலை சிற்றுண்டிக்கு
பிடித்து செல்ல காத்துக்கிடக்கிறது.
இது தினசரி நிகழும் காட்சி அந்த நாட்களில்
பகுத்துண்டு பல்லுயிருண்டு ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்ற வள்ளுவனின்
வாக்கை மக்கள் கடைபிடித்து இன்பமாக வாழ்ந்தனர் (இன்னும் வரும்)
காட்சிகள் கண் முன் தெரிகின்றன... தொடர்கிறேன்... நன்றி சார்...
பதிலளிநீக்குஎங்கள் வீட்டினில் வளர்ந்த பசுவின் ஞாபகம் வந்தது! காலையில் ஸ்டோரில் கறந்த பின்னர் 0830 மணியளவில் குரல் கொடுத்து என் அம்மா கறந்தால் 1/2லி பால் கொடுக்கும். பழைய நினைவுகளைத் தூண்டும் பதிவு! நன்றி!
பதிலளிநீக்குநல்ல நினைவுகள் எப்போது
பதிலளிநீக்குநினைத்தாலும் இன்பம் தரும்.
அதனால்தான் ,நல்லதையே நினைக்கவேண்டும்
நல்லதையே செய்ய வேண்டும்என்று
சொன்னார்கள் நம் முன்னோர்கள்
ஆனால் இன்று அதற்க்கு மாறாகத்தான்
உலக மக்கள் இருக்கிறார்கள்
பார்வையில் வன்முறை,பேச்சில் வன்முறை,
எழுத்துக்களில் வன்முறை,
காட்சிகளின் வன்முறை என அனைத்து
இனங்களிலும் வன்முறை கலாசாரம் பெருகிவிட்டது.
மேலும் அவைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இனி இந்த உலகம் திருந்த வழியில்லை.
வள்ளலார் கூறியதுபோல் கடை விரித்தேன்
கொள்வாரில்லை என்று இந்த உலகை விட்டு
சென்றதுபோல் நாமும் நம் காலம் முடிந்தபின்
செல்ல வேண்டியதுதான்.
நாம் அவைகளிலிருந்து விலகி
நம் மனதை அமைதியாக
வைத்துகொள்ள வேண்டியதுதான்
நம்மால் செய்யக்கூடியது