சனி, 1 செப்டம்பர், 2012

குறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்

குறையுள்ள மனிதர்களும் 
குறை காணும் மனிதர்களும் 

இதுதான் இன்றைய 
மக்கள் சமூகத்தின் உண்மை நிலை 

மக்களின் குறைகளை தீர்க்கின்றோம் 
அன்று ஆசை வார்த்தைகள் கூறி 
ஆட்சிக்கு வருகிறது ஒரு கூட்டம் 

அதற்க்கு பல்வேறு கொள்கைகளை
உடைய அரசியல் கட்சிகள் 
அமைக்கிறது ஒரு கூட்டணி
பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைத்ததும் 
அதிகாரத்தில் பங்கு கேட்கும் கூட்டணி கட்சிகள்.
தமக்கு ஏதும் கிடைக்கவில்லை 
எனில் கூட்டணியை விட்டு 
விலகி தங்கள் பழைய வழக்கமான
 பல்லவியான குறை கூறும் படலத்தை 
தொடங்கிவிடும். 

அதற்க்கு நம் நாட்டில் தன் குறைகளை மறைத்து 
அல்லது மறந்து குறை கூறும் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு 
நாட்டில் குழப்பத்தை விளைவித்துகொண்டிருக்கும். 

ஆளும் கட்சிகளை எந்த நன்மையையும் செய்யவிடாதும்,
அவர்கள் தேர்தல் வியாபாரத்தில் போட்ட முதலை 
எடுக்க விடாமலும் செய்து கொண்டிருக்கும் .
இந்த கூத்தை மக்கள் கூட்டம்  பார்த்து ரசிக்க ஊடகங்களும்
தங்களால் ஆன பணியை செய்வதுடன் தங்களுக்கு 
தேவையான காசையும் சம்பாதித்து கொண்டு கின்றன 

ஆனால் மக்களுக்கு கிடைப்பது ஊழல் நிர்வாகமும்,
விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், 
அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு அடிதடியும், 
சிறை வாசமும்தான் மிச்சம்.

எந்த அரசுகளும் மக்களை  நிம்மதியாக வாழ விடுவதில்லை, 
தொழில் செய்து பிழைக்க விடுவதில்லை. 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் 
வரிகளை விதித்து, உரிமம் என பல கட்டுபாடுகளை விதித்து
மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கின்றன.

எதிர்கட்சிகள் தினந்தோறும், மறியல், போராட்டம், 
கடையடைப்பு என மக்களை துன்பபடுத்திகொண்டு மகிழ்ந்து வருகின்றன. 

எந்த அரசுகளும் மக்களை நேரடியாக பாதிக்கும் 
எந்த பிரச்சினையையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பது கிடையாது. 
எதிக்கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். சில நேரங்களில் 
மக்களே தீர்விற்கு இணங்காமல் பிரச்சினைகளை சிக்கலாக்கிவிடுகின்றனர்.
ஊடகங்கள் மக்களை உண்மை நிலை அறிய விடாமல் குழப்புகின்றன.

மக்களின் வாழ்வு மேம்பாடு அடைய அரசுகள்  போடும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அரசு கருவூலத்திலிருந்து மக்களுக்கு போய் சேருவதற்குள் அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்தகாரகள், போலி நிறுவனகள், சமூக விரோதிகள் மற்றும் பலர் என அனேக சுயநலவாதிகளின் பையை நிரப்பிவிட்டு செல்லும்போது மக்களின் வயிற்று  பை நிரம்புவதற்கு  போதுமானதாக இருப்பதில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை தடுக்கும் உறுதி எந்த மட்டத்திலும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. 

ஊழல் பெருச்சாளிகள் அனைத்து சட்டங்களையும் மீறி அதன் இடுக்குகளில் நுழைந்து வெற்றிகரமாக  மழை துளிகளிடையே லாவகமாக பறந்து சென்று ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள்போல் திறமையாக மக்களை ஏமாற்றி கொழுக்கின்றனர் 
  
எல்லா நிலையில் முறைகேடுகளும் சீர்கேடுகளும் 
நிலவுவதற்கு மக்களே முழு காரணமாக இருந்து கொண்டு,.
அவர்களில் ஒரு பகுதியினரான அரசியல் கட்சி தலைவர்களையும் 
நிர்வாகத்தினரையும் மட்டும் குற்றம் சாட்டுவதிலேயே ஒவ்வொரு நாளும் கழிகின்றது
மக்கள் மனம் திருந்தவேண்டும்,.
மனதில் ,செயலில் நேர்மை வரவேண்டும்.
நல்லவை செய்பவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

குறையுள்ளவன்தான்  மனிதன். 
இருந்தாலும் பிறர் மீது மட்டும் குறை காண்பதை விடுத்து
மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஆராய்ந்து 
அதை நீக்க முயல வேண்டும்.

இல்லாவிடில் மக்களின் தங்களின் 
வறுமை நீங்கும் கனவு என்றும் 
வெறுமையாகத்தான் இருக்கும்
இந்த அவல  நிலைமை 
எத்தனை ஆண்டுகளானாலும்  மாறாது. 
அப்படியேதான் இருக்கும்.  

1 கருத்து:

  1. சின்ன குறை என்றாலும், அதுவும் யார் சொன்னாலும் (வயது, etc., etc., ) உடனே நம்மை மாற்றிக் கொண்டால் தான், நாம் வளர முடியும், தெரிந்து கொள்ள முடியும், இன்னும் பல... இல்லையெனில் கிணற்றுத்தவளை தான்... மிக்க நன்றிங்க...

    பதிலளிநீக்கு