சனி, 29 செப்டம்பர், 2012

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16

அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-16)

இன்று சுற்று சூழலை பற்றி பேசுவதற்கு பல இயக்கங்கள் 
இருக்கின்றன. அதற்காக பெருமளவில் விளம்பரம்
செய்வதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்கும் 
கோடிக்கணக்கான ரூபாய்கள்.சிலவிடப்படுகின்றன 

வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டில் மரம் 
வளர்ப்பதற்காக  கோடிகணக்கான ரூபாய்கள்
உதவியாக பெறப்பட்டு ஏரிகளில் முள்ளுமரங்களையும்
நீலகிரி தைல மரங்களையும் 
நட்டு சாதனை படைத்தன நம் அரசுகள். 

ஏரியில் உள்ள தண்ணீர் நாசமாய் போயிற்று
நிலத்தடி நீர் கெட்டு   போயிற்று. 
இன்று ஏரிகளே போய்விட்டது
நிலத்தடி நீர் வற்றி போனதால்
குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது 
சம்பாதிக்கும் வருவாயில் பெரும்பகுதி 
தண்ணீருக்காக செலவிடும் அவலத்தை
நாம் அடைந்துவிட்டோம்  

மரங்கள் நடுவதற்கு ஒடுக்கப்பட்ட நிதி
பெரும்பகுதி நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், 
அதிகாரிகள் ,என பலபேர் பைக்கு  பணம் போய் சேர்ந்துவிட்டது 
நட்ட செடிகளில் பாதி செத்து விட்டது.பிழைத்த  மீதி 
மரங்களையும் காணோம். அதை யாரோ விறகுக்காக வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
மரங்கள் குறைந்துவிட்டதால் மழையையும் காணோம். 

ஆனால் அந்த காலத்தில் நடப்பட்ட ஏராளமான 
மரங்கள் சமீப காலம் வரை சாலைகளில்
நிழல் தந்துகொண்டிருந்தன. 
அதில் நல்ல வருவாயும் கிடைத்து வந்தது.

சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று அனைத்து 
மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு  விட்டன. 
ஒரு பக்கம் மரம் நடுகிறோம் என்று ஒரு கூட்டம் முயல்கிறது.
மறு பக்கம் வளர்ச்சி பணிகளை செய்கிறோம் என்று 
அரசே அனைத்து மரங்களையும் வெட்டி சாய்க்கிறது. 

இத்தனைக்கும் பச்சை மரங்களை வெட்டக்கூடாது
என்று சட்டமே உள்ளது. 
பச்சை மரங்களை வெட்ட உரிய அதிகாரிகளின்
அனுமதி பெறப்படவேண்டும் என்ற விதி வேறு
ஆனால் சட்டத்தை மீறுவதுதான் தமிழனின் அடிப்படை 
பண்பாடாகிபோய்விட்ட நிலையில் 
இவையெல்லாம் ஏட்டு சுரக்காயாகயாகத்தான் உள்ளது  

ஆனால் காகங்கள் தான் வேப்ப பழத்தை தின்று
அதன் விதைகளை தன் எச்சத்துடன் உட்காரும் இடம்தோறும் 
இட்டு அவைகள் கணக்கின்றி மரம் நாடு விழாக்கள் பணியை செலவில்லாமல் செய்து வருகின்றன .
அந்த செடிகளை எடுத்து சாலை ஓரங்களில் நட்டாலே  போதும் லட்சக்கணக்கான மரங்கள் நமக்கு  செலவில்லாமல் கிடைக்கும். 

அந்த காலத்தில் ஊருக்கு  ஒரு ஆல  மரம் கண்டிப்பாக இருக்கும் 
 ஊர் விவகாரங்கள் அனைத்தும் அதன் அடியில்தான் நடக்கும்

குளக்கரையில் அரச மரம் இருக்கும். 
கோயில்களில் தல விருஷங்கள் இருக்கும். 

ஏரிக்கரை ஓரங்களில்நிறைய வேர்பிடிப்புள்ள  மரங்கள் இருக்கும்.
ஏரிக்கரைகள் மழை நீரால் அரிக்கப்படாமல் அவைகள் பாதுகாக்கும்.

ஆற்றங்கரை, கால்வாய் ஓரங்களில் தென்னை மரங்களும்,
நீர்  குறைவான இடங்களில்பனை மரங்களும், , மாமரங்களும்,புளிய மரங்களும்,  இன்னும் பல்வேறு பயன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டு  .
மக்களுக்கு பயன்பட்டு வந்தன.

இலுப்பை மரங்கள்  ஆமணக்கு செடிகள் வளர்க்கப்பட்டு அவைகளின் 
விதையிலிருந்து எண்ணை  எடுத்து கோயில்களில்,வீட்டில் விளக்கெரிக்க பயன்படுத்தினர்

இன்றைய தலைமுறையினருக்கு வேலிகாத்தான் முள்ளு  மரம்தான் தெரியும்
மற்ற மரங்கள் என்னவென்றே யாருக்கும் தெரியாது(இன்னும் வரும்)

5 கருத்துகள்:

  1. சுற்றுச்சூழல் பற்றி நண்பர் திரு பட்டாபி ராமன் அருமையாக எழுதியிருக்கிறார். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    இனிய நண்பர்களே,
    இந்த பதிவை படித்து பின்னூட்டம் (comments) செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழில் முடியவில்லையென்றால், ஆங்கிலத்தில் எழுதுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். நன்றி நண்பர்களே.

    பதிலளிநீக்கு
  2. முன்பு எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள் இருக்கும்... (இப்போது எங்கள் இடத்தில் மட்டும் உள்ளன)

    இப்போது நகரங்கள் ...இல்லை... நரகங்கள் ஆகி விட்டன...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவு! பகிர்விற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டமிட்ட திரு RN ,திரு சேஷாத்ரி மற்றும் DD
    அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த
    நன்றிகள்

    பதிலளிநீக்கு