தேடி வந்த செல்வமும்
தேடி வைத்த செல்வமும்
செல்வம் என்றால் சென்று கொண்டே இருப்பது
ஓரிடத்தில் நிலையாய் அது என்றும் இருக்காது
பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாய் இருப்பவர்
ஒரே இரவில் ஏற்ப்படும் பூகம்பத்தினால் அல்லது ஏதாவது
ஒரு இயற்கை பேரழிவினால், அனைத்தையும் இழந்து
தெருவில் பிச்சைக்காரனாய் திரிய நேரிடும்.
உள்நாட்டு போர் மூண்டால் அனைத்து சொத்துக்களையும்
அப்படியே போட்டுவிட்டு வேறு எங்காவது சென்று
உயிரை காப்பாற்றி கொள்ள நேரிடுவதும் உண்டு.
வியாபாரத்தில் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்துவிட்டு
திடீர் விலை சரிவினால் லட்சாதிபதிகள் பிட்சாதிபதியாக போனதும் உண்டு
சம்பாதிக்கின்ற காசையெல்லாம் தங்கமாக மாற்றி வீட்டில் வைத்து
அது கொள்ளை போவதும் வாடிக்கை.
இப்படிப்பட்ட நிலையில்லா செல்வதை
சேர்ப்பதில் அனைவரும்
குறியாய்தான் இருக்கிறார்கள்.
வறுமையினால் மாண்டவர்களை விட செல்வத்தை சேர்த்து
அதை இழக்கும்போது நம்பிக்கை இழந்து மனம் நொந்து
வாழ்வை முடித்து கொண்டவர்கள் ஏராளம்.
மனம் பேதலித்து .பைத்தியமாய் திரிபவர்கள் ஏராளம்
செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டு
தானும் பயன்படுத்தி கொள்ளாமல் அது கொள்ளை போய்
அந்த அதிர்ச்சியின் காரணமாக உயிரை இழந்தவர்களும் உண்டு.
பேராசையினால் புரட்டுக்காரர்களை நம்பி அனைத்து
காசையும் அவர்களிடம் அளித்துவிட்டு அனைத்தையும்
இழந்து அழுது புலம்பி திரிபவர்களும்
நம் நாட்டில் நிறையவே உண்டு.
இப்படிப்பட்ட குணாதிசயங்களுடைய செல்வத்தை
வைத்துக்கொண்டு என்ன செய்வது. ?
செல்வத்தின் பயன் ஈதல் .
அவ்வாறு செய்தால்
அதும் எப்போதும் நம்மோடு இருக்கும்
ஆனால் அது பணமாக இருக்காது.
அது நமக்கு பாதுகாப்பு தரும்
கவசமாக மாறிவிடும்.
அவ்வாறு செய்யாவிடில்
அது நம் உயிரை குடித்துவிடும்.
தனக்கு பயன்பட்டதுபோக மீதமுள்ள செல்வத்தை
இல்லாத வறியவர்களுக்கும் ,துன்பபடுபவர்க்கும் உதவுவது
.போன்றவை நிறைய தான தர்மங்கள் செய்வது போன்ற
காரியங்களை செய்யலாம்.
அதுதான் நாம் தேடி வைக்கின்ற
உண்மையான செல்வம்
அதுதான் நமக்கு அடுத்தடுத்த பிறவிகளில்
பல விதங்களில் நம்மை தேடி வரும்,செல்வம்
நமக்கு நன்மைகளை செய்ய .
நாடி வரும்செல்வம்
என்ன தான் சொன்னாலும் சிலர் மாறுவதாக இல்லை... அது தான் சந்தோசம் என்று நினைத்தால் என்ன செய்வது...?
பதிலளிநீக்குஅந்த மகிழ்ச்சி நிலையற்றது
பதிலளிநீக்குஎன்பதை அவர்கள் உணரும் காலம்
ஒருநாள் வரத்தான் செய்யும்.
அப்போது உண்மையை
புரிந்துகொள்வார்கள்.