புதன், 26 செப்டம்பர், 2012

அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -4)


அந்த  நாள்  ஞாபகம்  வந்ததே (பகுதி -4)

அந்த  காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 
குறைந்தது இரண்டு பசுவாவது இருக்கும்

பொதுவாக எருமை மாடுகளின் 
எண்ணிக்கை மிக குறைவு. 
சிலர் வீட்டில் பத்து பசுமாடுகள் கூட இருக்கும். 

ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும். 
அவைகளின் தோற்றம் ,அதன் உருவம் ,பருமன் 
ஆகியவற்றை வைத்து அவர்களுக்கு பெயர் சூட்டப்படும்.
உதாரணமாக ஒரு மாட்டிற்கு கண்களில் 
 மை தீட்டினால் போல் கருப்பாக இருக்கும் 
அதற்க்கு மைக்கண்ணி மாடு என்று பெயர்
ஒன்று சாதுவாக இருக்கும். குழந்தைகள் கூட
அதன் பக்கத்தில் சென்றாலும் அது ஒன்றும் செய்யாது 
சில மாடுகள் முரடுகளாக இருக்கும் .அவைகளுக்கு
 மூக்கணாங்கயிறு போட்டு தான் 
கொட்டகையில்  கட்டவேண்டும்.
 யாராவது அருகில் சென்றால் முட்டி தள்ளிவிடும்.
பால் கறக்க வேண்டுமென்றால் பின்னங்கால்களை
கயிறு போட்டு கட்டிவிட்டுத்தான் கறக்கவேண்டும்    

ஒவ்வொரு கிராமத்திலும் மாடுகள் மேய்வதர்க்கேன்றே
மேய்ச்சல் புல்வெளிகள் இருக்கும் 
அவைகள் தண்ணீர் குடிப்பதற்கென்றே குளங்கள் இருக்கும்  
காலையில் பாலை கறந்துவிட்டு மாடுகளை மேய ஒட்டிவிடுவார்கள். 
ஊரில் உள்ள அத்தனை மாடுகளும் ஒன்று  கூடியபின் 
அவைகள் மேய்ச்சல் வெளிகளுக்கு கொண்டு செல்லப்படும். 

அந்தி சாயும் நேரம் அத்தனை மாடுகளும் 
அவரவர் வீடுகளுக்கு திரும்புவது கண்கொள்ளா காட்சி.
மஞ்சள் வெயிலில் மாடுகள் புழுதிகளை கிளப்பிக்கொண்டு 
வரிசையாக செல்வதை பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும்.
அவைகளில் பசுக்களும் இருக்கும், காளை  மாடுகளும் இருக்கும்
 சிறிது வளர்ந்த கன்றுகளும் இருக்கும்.  
ஒவ்வொரு மாடுகளின் கழுத்திலும் வித 
விதமான மணிகள் கட்டப்பட்டிருக்கும். 
அவைகளின்  ஓசை ஒவ்வொன்றும் ஒருவிதமாக் இருக்கும்.
கேட்பதற்கு இன்பமாக இருக்கும்.
மாடுகள் வெள்ளை, கருப்பு, சாம்பல், என பல
நிறங்களில் பார்க்க அழகாக இருக்கும்.
அவைகளின் கண்கள் மிகவும் அழகு
.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.   
சில மாடுகளின் கண்களிலிருந்து நீர் வழியும். 
அதை பார்ப்பதற்கு மனதிற்கு சோகமாக இருக்கும்.

பொதுவாக மாடுகளை யாரும் கொல்லுவது கிடையாது.
 நம்நாட்டின் மீது படை எடுத்து வந்து   நம் நாட்டு கலாசாரத்தை அழித்த ஆக்கிரமிப்பாளர்கள் தான் அந்த பாவ செயலை 
நம் நாட்டில் விதைத்தவர்கள்.
இன்று அது வேரூன்றி விட்டது.
பொதுவாக மாடுகள் இறந்தால்தான் கசாப்பு கடைக்கு 
எடுத்து செல்லப்படும் அந்நாளில்.
அது ஊருக்கு வெளியே சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் 


தனக்காக எதையும் வைத்துக்கொள்ளாமல் 
அனைத்தையும் மற்றவர்களுக்குதந்து
 நாம் உதவாது என போடும் அனைத்து கழிவுகளையும்
 உண்டு நாம் உயிர்வாழ அனைத்தையும் தந்து 
தியாகம் செய்யும் பசுக்கள் வணங்கதக்கவை. 
போற்றத்தக்கவை

.அதை இந்த மனித குலம் 
 உணருவதாக இல்லை.
மாறாக இன்னும் மக்கள் மிருக உணர்ச்சிக்கு 
அடிமையாகி தாங்களும் சுகம் பெறுவதில்லை
தாங்கள் வாழும் இந்த உலகையும் 
அமைதியாக இருக்க விடுவதில்லை   

இன்றோ அவைகளால் பயன் இல்லை எனில் 
மிக குறைந்த விலைக்கு அடிமாடுகளாக விற்கப்பட்டு 
அண்டை மாநிலமான கேரளத்திற்கு  லாரிகளில் அடைத்து 
கொண்டு செல்லப்பட்டு அங்கு அவைகள் கொடூரமாக
 ஈவிரக்கமின்றி இரும்பு சுத்தியால் மண்டையில் 
அடித்து கொல்லப் ப்படுகின்றன.
 அதன் மாமிசத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி
 கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்

GODS OWN COUNTRY என்று பீற்றிகொள்ளும்
நம் அண்டை மாநில மக்கள் பசுவை நேசித்த
கண்ணனை வழிபடும் மக்கள்
இதுபோன்ற இரக்கமற்ற செயல்களில் 
ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது.    
.  (இன்னும்வரும்)
.  

5 கருத்துகள்:

  1. அந்தி சாயும் நேரம் அத்தனை மாடுகளும்
    அவரவர் வீடுகளுக்கு திரும்புவது கண்கொள்ளா காட்சி.
    மஞ்சள் வெயிலில் மாடுகள் புழுதிகளை கிளப்பிக்கொண்டு
    வரிசையாக செல்வதை பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும்.
    அவைகளில் பசுக்களும் இருக்கும், காளை மாடுகளும் இருக்கும்
    சிறிது வளர்ந்த கன்றுகளும் இருக்கும்.
    ஒவ்வொரு மாடுகளின் கழுத்திலும் வித
    விதமான மணிகள் கட்டப்பட்டிருக்கும்.
    அவைகளின் ஓசை ஒவ்வொன்றும் ஒருவிதமாக் இருக்கும்//
    கண்முன்கொண்டுவந்து விட்டீர்கள் பழைய நினைவுகளை! பகிர்விற்கு நன்றீ!

    பதிலளிநீக்கு
  2. நான் என் இளமையில் கண்ட காட்சிகள்
    மனதில் பசுமரத்தாணிபோல்பதிந்து விட்டவை
    இத்தனை ஆண்டுகளுக்கு பின் எழுத்து வடிவம் பெற்றுள்ளது

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் பணம் செய்யும் மாயை சார்...

    அந்தக்கால எங்கள் கிராமம் கண்ணில் வந்தது...

    அந்த சந்தோசம் வரப்போகுதா...? ...ம்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. போனது போனதுதான்.
    இனி திரும்பி வராது

    பதிலளிநீக்கு