கருமாந்திரம் என்ற
சொல் அமங்கலமா?
சமீபத்தில் ஒரு
வலைப்பதிவு பார்த்தேன்
அதன்தலைப்பு காசு கொடுத்து
கருமாந்திரங்களை தரும்
இணையதளம் அல்ல என்றும்
இலவசமாக பல்சுவை
தகவல்களை தந்து உங்கள் இதயங்களை
கொள்ளைடிக்கும் இணையதளம்
என்று தலைப்பை இடப்பட்டிருக்கிறது.
அந்த தலைப்பே கருமாந்திரம் என்ற சொல்
ஒரு இழிவான பொருளை தரும் சொல்
என்பது போலவும் அந்த துறையில்
ஈடுபட்டுள்ள ஒரு இனத்தவரின் மீது
காழ்ப்புணர்ச்சியை காட்டும் முகமாகத்தான்
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே
ஆனால் உண்மையில்
இந்த கருமாந்திர தொழிலில்
பல்லாயிரக்கணக்கான்
மனிதர்களும்
வெவ்வேறு பிரிவு மதம்
இனத்தை சேர்ந்தவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட
சமுதாயம் செய்யும் செயலை
மட்டும் பிரித்து அவர்கள்தான்
அனைத்திற்கும் காரணம் என்று
என்றோஎழுதப்பட்டு
தற்போது நடைமுறையில்
இல்லாத விஷயங்களோடு
ஒப்பிட்டு நோக்கி
ஆனந்தப்படுவது
ஒரு சிலரின் சுதந்திரம்
அதில் யாரும்
தலையிடவேண்டாம்.
அவர்கள் அப்படியே
இருக்கட்டும்
.
இப்போது இந்த கட்டுரை
இந்த கருமாந்திரத்தை பற்றி
ஆராய்வதுதான் நோக்கம்.
நாம் வாழும் இந்த
பூமி கரும பூமி.
இந்த உலகில் பிறந்த
எந்த உயிரும் சும்மா
இருக்க முடியாது.
பிறந்ததிலிருந்து
இறக்கும் வரை ஏதாவது
ஒரு கர்மாவை அதாவது
செயலை செய்து கொண்டுதான்
இருக்கவேண்டும். .
எந்த செயலை செய்யவேண்டும்
என்றாலும் அதற்க்கு
மனம் திறனுடையதாக
இருக்கவேண்டும். அதை
திறனுடையதாக செய்வதற்கு
உதவுபவைகள்தான்
இந்த மந்திரம் என்பது.
பொதுவாக இறப்பு
தொடர்பான கர்மங்களை.
கர்மாந்திரம் என்று அழைக்கிறோம்.
அதை அமங்கலமாகவும்
அதை செய்பவர்களை
மட்டமாகவும் நினைக்கிறது
இந்த நன்றி கெட்ட உலகம்.
துன்பத்திலும், துக்கத்திலும்
துயரத்திலும் வீழ்ந்து என்ன
செய்வதென்றறியாது குழப்பத்தில்
ஆழ்ந்துபோயிருக்கும் மக்களை மீட்டு
அவர்களின் துன்பசுமையை
படிப்படியாக குறைத்து
அவர்களை மீண்டும்
வாழ்க்கை பயணத்தை
தொடர உதவும் இந்த
துறையில் இருப்பவர்களை
மனம் திறந்து பாராட்டவேண்டும்.
ஆனால் மாறாக அவர்களை
பழித்துரைக்கின்றனர்.
எந்த துறையிலும்
அயோக்கியர்கள் உண்டு.
அதேபோல்தான்
இந்த துறையிலும்.
கிடைத்தவரை சுருட்டுவது.
புதுப்படம் வரும்போது கருப்புசந்தையில்
பலமடங்கு காசு கொடுக்க தயங்குவதில்லை.
எவ்வளவு விலை விற்றாலும்
குடிப்பதற்கு காசு செலவு செய்ய
தயங்குவதில்லை இந்த மனிதர்கள்.
இதுபோல் ஏராளம்.
இன்று இன்று மன நல மருத்துவர்கள்
மருத்துவ மனைகள்
நகை மோசடிகள்
பன்னாட்டு வியாபாரிகள்
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி,
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள்
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்?
சிந்திக்கவேண்டும்.
எதிர்ப்பில்லை என்று தொடர்ந்து
ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது.
இன்றுமட்டுமல்ல
அது உலகம் தோன்றிய நாள்
முதலிருந்து உண்டு.
ஒரு மனிதன் மற்றொருவனை
இழிவுபடுத்துவது அகந்தையின்பால்
பட்டதே ஒழியே மற்ற
எந்த காரணத்தையும் சார்ந்தது
அல்லஎன்பதே உண்மை.
(இன்னும் வரும் )
அதானே... ஏதேனும் ஒரு சொல்லை (ஐயாவிடம்) விட்டுவிட்டு தப்பிக்க முடியுமா என்ன...?
பதிலளிநீக்குநன்றி ஐயா...
யான் உண்மையைத்தான் உரைத்தேன்
நீக்குஎப்போதும் உண்மை கசக்கும்
ஆனாலும் கசக்கி எறியக்கூடிய
விஷயமல்ல இது
இன்று இன்று மன நல மருத்துவர்கள்
பதிலளிநீக்குமருத்துவ மனைகள்
நகை மோசடிகள்
பன்னாட்டு வியாபாரிகள்
,மதவாதிகள், மந்திரவாதிகள்,
போலிசாமியார்கள், நிதி,நிலமோசடி,
கள்ளகடத்தல், போதை கும்பல்கள்
காம வியாபாரிகள், தொலைகாட்சிகள்
அரசியல்வாதிகள்
பலவிதமான கொள்ளையர்கள்
கேடிகள் இவர்களை விடவா
இந்த துறையில் இருப்பவர்கள்
மக்களை ஏமாற்றிவிட
போகிறார்கள்? //
இவர்களையும் விட இன்னுமா தாங்குமா பூமி
வறியவர்களை வாரிவிடபார்க்கும் கயவர்கூட்டம்
எதிர்ப்பில்லை என்றால் ஏய்த்துவிடும்
பிணம் தின்னும் பணம் தின்னும் கழுகு கூட்டம்
இந்த உலகில் உழைத்து
நீக்குதின்பவன் ஏழையாய் இருக்கின்றான்
ஏழையாய் வாழுகின்றான்
ஏழையாய் எங்கோ மடிகின்றான்
ஆனால் படித்துவிட்டு பல கோடிகளை
வலையில் அள்ளும்பலர் பேராசை
வயப்பட்டு கண்ணிருந்தும் குருடராய் மதியிருந்தும்
மூடராய் சில கசடர்கள் விரிக்கும் வலையில்
வீழ்ந்து பல கோடிகளை இழக்கின்றனர்.
இன்று உலகில்
உழைத்து பிழைப்பவர்களை விட
அவர்களின் உழைப்பை
சுரண்டி பிழைப்பு நடத்தும்
கூட்டம் பெருகிவிட்டது
அதனால்தான் இன்று
உலகில் வறுமை
தாண்டவமாடுகிறது.
பெரும்பாலான
மக்களிடையே.
இறைவன் அனைத்தையும்
அள்ளி அள்ளி தருகின்றான்
இலவசமாக
சில சுயநல தரித்திரங்கள்
எல்லாவற்றையும் தனக்கென
அனைத்தையும் வைத்துக்கொண்டு.
இந்த உலகத்தை ஆட்டி
படைத்து கொண்டிருக்கின்றன
இந்த நிலை மாற வேண்டும்.
வாழ்க்கை நடத்துவதற்கே
போராடும் மக்களால்
இந்த சுயநல பேய்களை
எதிர்த்து போராட சக்தி எது?
திக்கற்றவர்களுக்கு
தெய்வமே துணை
என்பதுபோல்
தெய்வம்தான்
இவர்களை
காப்பாற்றவேண்டும்
நிச்சயம் காப்பாற்றும்
அந்த நாள் வெகு
தொலைவில் இல்லை
மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின், வார்த்தைகளுக்கு உள்ள பொருளை , தமிழன் மறக்கத் தொடங்கி வெகு காலமாகிவிட்டது அய்யா.
பதிலளிநீக்குமறந்ததை நினைவுபடுத்தத்தான்
நீக்குஇந்த மடையன் முயற்சி
செய்து கொண்டிருக்கிறான்