உங்களுக்கு தெரியுமா?(பகுதி-1)
1.சாக்லேட் நாய்களுக்கு எமன் .
ஆம். அது அதன் இதயத்தை
மற்றும் நரம்புகளை
செயலிழக்க செய்து கொன்றுவிடும்.
2.உலக புகழ் பெற்ற பல்கலை
வித்தகர் லியனானார்டோ வின்சி
ஒரு கையால் எழுதுவார்
மற்றொரு கையால் படமும் வரைவார்.
3.இரண்டாம் உலக போரின் போது
உலோகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால்
ஆஸ்கார் விருதுகள் மரத்தால்
செய்யப்பட்டு வழங்கப்பட்டன
4.நாம் எல்லோரும் தினமும்
பயன்படுத்து ம் கத்திரிக்கோலை
கண்டுபிடித்தவர்
லியனானார்டோ வின்சி
5.கொசு விரட்டிகள் உண்மையில்
கொசுக்களை விரட்டுவதுமில்லை
அவைகளை மிரட்டுவதுமில்லை.
அதன் உணர்வு நரம்புகளை தற்காலிகமாக
முடக்குவதால் நீங்கள் அதன் எதிரில் இருப்பது
அதற்க்கு தெரியவில்லை.
அவ்வளவுதான்
அதன் நெடி குறைந்ததும்
கொசு உங்களை நன்றாக
சேர்த்து வைத்து உங்கள் ரத்தத்தை
உறிஞ்சி கொழுத்துவிடும்.
மேலும் ஆயிரக்ககணக்கான
முட்டைகளையும் இட்டுவிடும். .
அதனால்தான் கொசு விரட்டிகள்
தயாரிப்பாளர்கள் கோடிகணக்கில்
நம்மிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்.
6.முதலையிடம் மாட்டிகொண்டால்
தப்புவதற்கு மிக சுலபமான வழி
அதன் கண்களை விரலால்
குத்துவதுதான்.
உடனே அது நம்மை விட்டுவிடும்.
7.குளிர் சாதன பெட்டியில்
ரப்பர் பாண்டுகளை போட்டு
வைத்தால் நெடுநாள்
கெடாமல் இருக்கும்.
8.பாசை பூச்சி தலையில்லாமல்
10 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்
9. நம்முடைய உடலில் இருந்து
இறந்த செல்கள் 40 பவுண்டுகள்
அளவிற்கு நம் வாழ் நாளில்
உதிருகின்றன.
10. சூரிய ஒளியில் பார்த்தால்
நம்மை சுற்றியும் தூசி மண்டலம்
இருப்பதை நன்றாக பார்க்கலாம்.
அதில் பெரும்பகுதி மனிதர்கள்
மற்றும்,விலங்குகளின்
உடல்களிலிருந்து விழும்
இறந்த செல்களில் துகள்களே.
11. கட்டை விரல் நகம்
மிக மெதுவாக வளருகிறது.
ஆனால் நாடு விரல் நகம்
வேகமாக வளரும்.
12.ஒரு நாலுவயது குழந்தை
ஒரு நாளில் 400 கேள்விகளை கேட்கும்.
நாம்தான்அதன் கேள்விகள்
எதற்கும் பதிலே சொல்வதில்லை.
அதனால் அது நம்மை பார்த்து
எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது.
13.புத்திசாலிகளில் தலை முடியில்
துத்தநாகமும் செம்பும்
அதிக அளவில் இருக்கும்
14.டெலிபோனை கண்டுபிடித்த
அலெக்சாண்டர் க்ரஹாம்பெல்
தன் மனைவிக்கோ அல்லது தாய்க்கோ
போனே செய்ததில்லை
ஏன் தெரியுமா?
இருவருக்கும் காது கேட்காது. .
சிலது வியப்பான தகவல்கள்...
பதிலளிநீக்குஎன்னை கவர்ந்தது : 12
நன்றி ஐயா...
உங்களுக்கு குழந்தை உள்ளம்
நீக்குநிறைய கற்றுகொள்ளவேண்டும்
என்ற ஆர்வம் உள்ளது.
அதனால்தான் எண் 12
உங்களை கவர்ந்தது.
அனைத்துமே பயனுள்ள அறியாத தகவல்கள் அய்யா. நன்றி
பதிலளிநீக்குநன்றி கரந்தையாரே
நீக்கு