செவ்வாய், 26 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (10)(2)

திருக்குறள் -என் பார்வையில் (10)(2)

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை சேராதார்
பிறவியாகிய பெருங்கடலை நீந்தி கடக்க இயலாது
என்பது பொதுவான பொருள்.

 பிறவியை ஏன் பெருங்கடல்
என்று அழைக்கிறோம்?

கடல் என்பதே பரந்து விரிந்த நீர் பரப்பு. 
அது சில இடங்களில் ஆழாமகவும் சில இடங்களில் ஆழம் குறைந்தும் காணப்படும்

ஆனால் பெருங்கடல் என்பது ஆழம் காண இயலா நீர்ப்பரப்பு. இந்த உலகம் 75 விழுக்காடுகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பகுதிதான் தண்ணீருக்கு வெளியே உள்ளது. அதைபோல்தான் உயிர்கள் எடுக்கின்ற பிறவிகளும். எடுத்த பிறவிகளும், எடுக்கப்போகின்ற பிறவிகளும். யாராலும் அதை அறிய இயலாது. என்பது பொருள். 

அதை எதற்க்காக
நீந்தி கடக்கவேண்டும்?

பிறவி எதனால் வருகிறது என்றால் 
ஒரு உயிர் முற்பிறவிகளில் தான் என்ற உணர்வோடு செய்த வினைகளினால் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்து தீர்க்க பிறவி வருகிறது. 

வினைகளை போக்க 
வினைகளை செய்ய வேண்டி நேரும்போது 
புதிய வினைகள் உயிரை பற்றிக்கொள்கின்றன.

இப்படியாக வினைகளின் 
சுமை கூடிக்கொண்டே போவதால் 
பிறவிகள் கூடிகொண்டே போகின்றன.

கடலை கடக்க படகு பயன்படுவதுபோல்
இந்த உடல் பிறவி பெருங்கடலை 
கடக்க பயன்படுகிறது.

ஆனால் மனிதர்கள் அறியாமையினால் 
இந்த உடலை அந்த பணிக்கு பயன்படுத்துவதில்லை.

 மாறாக இந்த உடல் மூலம் புலனின்ப வேட்கைகளை தீர்துகொள்ளவேண்டி அதை பராமரிப்பதிலேயே தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிட்டுவிடுவதால். 
இந்த உலகிற்கு வந்த நோக்கத்தை 
மறந்து மடிகின்றனர், 

ஏன் படகில்,கப்பலில் கடக்கக்கூடாது?

கப்பலில் கடக்க முடியாது. 
பெருங்கடலில் செல்வது ஆபத்துகள் நிறைந்தது. 

நீந்தித்தான் கடக்ககூடுமோ?

எனவே நீந்தித்தான் கடக்க வேண்டும். 
வெளியே அல்ல. 
மனதின் உள்ளே உள்ள அககடலைதான் 
நீந்தி கடக்க  வேண்டும்.  
அங்கும் ஆபத்துக்கள் உண்டு. 
அதையெல்லாம் வெற்றி கண்டால். 
கடலின் அக்கரைக்கு செல்லலாம்.


நீந்தி கடந்தால் எங்கு செல்வோம்?

எங்கிருந்து வந்தோமோ அங்கு சென்றுவிடுவோம்.

அங்கு சென்றால் என்ன பயன்?

சென்றுவிட்டால் மீண்டும் 
பிறவி தொல்லைகள் இல்லை.

நீந்தி செல்லாமல் தற்போது
இருக்கின்ற இடத்திலேயே இருக்கலாமே?

இறைவன் கொடுத்துள்ள  அறிவைக்கொண்டு
துன்பம் வராமல் காத்துக்கொண்டு
இன்பமாக இங்கேயே இருந்துவிடலாமே ?

புலன்களை கட்டுப்பாட்டில் 
வைத்துக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். 

அங்கு இங்கு என்று எனாதபடி எல்லா
இடத்திலும் பரந்து கிடக்கின்ற இறைவனுக்கு
தனியாக உருவம் ஏது?

தனியாக உருவம் ஏதும் கிடையாது. மனிதனின் மனம் ஏதாவது ஒரு பொருளை சார்ந்துதான் இயங்கும். மனதை உடைய மனிதனுக்காக வடிவங்கள் பல கொண்டான் இறைவன். அவைகளைத்தான் நாம் கோயிலில் சிலைகளாக அமைத்து இறைவனாக எண்ணி வழிபடுகிறோம். 

உருவம் இல்லாத ஒன்றிற்கு
திருவடிகள் எப்படி இருக்கும்?

இறை வடிவங்களின் திருவடிகளை
இறைவனாக எண்ணி வழிபட வேண்டும். 

இல்லாத ஒன்றை எப்படி சேருவது?
அடி முடி காண இயலாதவன் எம்பெருமான்
என்று சொல்கிறார்களே அப்படிப்பட்ட
இறைவனை எப்படி சேருவது?

இறைவன் ஜோதி வடிவானவன். அந்த ஜோதியிலிருந்து பிரிந்து வந்த ஆன்மாவாகிய நாமும் ஜோதியே. நாம் தாங்கியுள்ள வடிவங்களை மறந்து அவனை நினைத்தால் நாம் ஆத்மாதான் என்பதை உணர்ந்துகொண்டால் நாம் அவனுடன் ஒன்றிவிடலாம். இறைவன் எல்லா உயிருக்குள்ளும்
இருக்கின்றான் என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்க அங்கேயே அவனை
ஏன் சென்று சேர முடியாது?

எதற்காக அவனை எங்கோ
கடல் கடந்து இருப்பதாக எண்ணிக்கொண்டு
அவனை தேட வேண்டும்?

நமக்குள் இருக்கும் இறைவனை புறத்தே 
தேடுவதைவிட்டு  நாம் நமக்குள்ளே தேட வேண்டும் 
தேடினால் நிச்சயம் கிடைப்பான். 

அதற்க்கு தடையாய் இருக்கும் 
நம் மனதில் உள்ள அனைத்து கசடுகளையும் நீக்கினால்.
சூரியனை மறைத்த மேகங்கள் விலகியபின் 
சூரியன் பிரகாசிப்பதைபோல் 
இறைவன் நம்முள் ஒளிர்வதை 
நாம் காண முடியும். 

ஆனால் கசடுகளை எவ்வாறு நீக்குவது?

2 கருத்துகள்:

 1. முன்னைய (பகிர்வை) உரையை விட இதில் மேலும் விளக்கம் ஐயா... குறளை வெவ்வேறு நிலைகளிலும் சிந்திக்க தோன்றும்... ஒவ்வொரு சொற்களுக்கும் பல விளக்கங்களும் இருக்கும்...

  வரும் குறள்களில் முடிவில் உள்ள கேள்விக்கும் விடைகள் உண்டு...

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. நன்றி DD சார்

  நான் அய்யா அல்ல
  வெறும் கொய்யாதான்.

  என் மனதில் ஒவ்வொரு பொருளுக்கும்
  ஒரு காலி டப்பா வைத்துள்ளேன்.
  அதில் வந்து விழும் பதில்களை
  வலையில் போடுகிறேன்
  அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு