திருக்குறள் -என் பார்வையில் (6)
திருக்குறள் -என் பார்வையில் (6)
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
சுதந்திரமாக சுற்றி திரிந்த ஒரு எலி
பொறியில் வைக்கப்பட்ட
ஒரு தின்பண்டத்தின்
மணத்தை முகர்ந்தது.
அது என்ன என்று பார்த்தது.
ஏற்கெனவே அந்த தின்பண்டத்தை பற்றி
அதன் அம்மா எலி சொல்ல கேட்டிருந்தது
பொதுவாக தின்பண்டங்கள்
ஒரு பாத்திரத்திற்குள் நன்றாக
மூடி வைக்கப்பட்டிருக்கும்
ஆனால் இந்த தின்பண்டமோ
அவ்வாறு இல்லாமல்
நேரே எந்த தடையும் இல்லாமல்
சென்று கடித்து தின்பதற்கு ஏதுவாக வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்தது
அந்த எலிக்கு ஆசை பன்மடங்கு அதிகரித்தது.
எப்படியாவது இவ்வளவு சுலபமாக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்தது.
ஆசை மிகுந்தால் அறிவு மழுங்கிவிடும்.
அந்த நிலைதான் அதற்க்கு ஏற்ப்பட்டது.
இவ்வாறு வைத்திருப்பதில்
ஏதோ சதித்திட்டம் உள்ளது
என்ற எண்ணம் அதற்க்கு எழவில்லை.
கட்டுகடங்காத அந்த
தின்பண்டத்தின்மீதான ஆசையை
அடக்கமுடியாமல் அந்த எலி அந்த
பொறிக்குள் நுழைந்தது. .
சுற்று முற்றும் பார்த்தது .
யாரும் இல்லை.
சரி இனிமேல் பொறுக்கமுடியாது என்று
அந்த தின்பண்டத்தை கவ்வியது .
படார் என்றார் சத்தம் ..
அவ்வளவுதான்
அதன் மண்டை உடைந்தது .
அதன் உயிர் போயிற்று.
புலன்களை கட்டுப்பாட்டில் வைக்காத
இந்த எலிக்கு கிடைத்த பரிசு மரணம் .
இன்னொரு எலி
கொஞ்சம் புண்ணியம் பண்ணிய எலி.
அது இதே எலி போல்தான்
வேறு ஒரு பொறியில் மாட்டிகொண்டது.
ஆனால் அதில் அதன்
உயிரை போக்கும் கருவி இல்லை.
அதை வைத்தவர் கொஞ்சம் இரக்கம் உள்ளவன்.
அவன் அதை கொஞ்ச நேரம் அந்த பொறியிலேயே வைத்துவிட்டு. வெளியில் எடுத்துக்கொண்டு போய் ஒரு தண்ணீர் தொட்டியில் அமுக்கி அதை சாகும் வரை அமுக்கி சாகடித்துவிட்டு தூக்கி வெளியே போட்டான்.
ஒரு காகம் அதை கவ்வி கொண்டு போயிற்று.
இதே போல் இன்னொரு எலி.
அது நிறைய புண்ணியம் பண்ணியது போலும்.
அதை பொறியில் பிடித்தவன்
உயிர்களுக்கு தீங்கு செய்யும்
எண்ணம் இல்லாதவன்.
இருந்தாலும் எலியின் தொல்லை
தாங்காமல் அதை பொறியில் பிடித்தான்.
அதை கொல்லாமல்,காட்டிற்குள் சென்று
அங்கு பொறியை திறந்து எலியை
தப்ப வைத்து விட்டு வீடு திரும்பினான்.
மேல கண்டுள்ள எலி வேறு யாருமில்லை
வான் வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த
நம்மை போன்ற ஒரு ஆன்மாதான்.
ஆசைவயபட்டு உடல் என்னும்
கூட்டில் சிக்கிக்கொண்டுவிட்டது.
சிக்கிகொண்ட ஆன்மா மெய் வாய்,
கண்,மூக்கு,செவி என்னும்
ஐம்புலன்களுக்கு அடிமையாகி
இந்த உலகில் பலவிதமாக
மேலே கண்டவாறு துன்பப்படுகிறது.
சில நேரங்களில் உயிரிழக்கிறது.
எனவே ஒழுக்கம் சார்ந்த
வாழ்க்கை வாழ்ந்து
புலன்களை கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வந்தால்
எந்த ஆபத்துக்களிலும் சிக்காமல்
மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழலாம்.
Pic. courtesy-Google
உதாரணம் அருமை...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள் ஐயா...
நன்றி DD
நீக்கு