வியாழன், 28 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (10)(4)


திருக்குறள் -என் பார்வையில் (10)(4)

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை சேராதார்
பிறவியாகிய பெருங்கடலை 
நீந்தி கடக்க இயலாது
என்பது பொதுவான பொருள்.

ஆனால் மனக்கசடுகளை
எவ்வாறு நீக்குவது? 

அந்த மூன்று குணங்கள் 
சத்வம்,ரஜஸ் அல்லது 
ரஜோ மற்றும் தமஸ் எனப்படும்.

இந்த மூன்று குணங்களுக்குள்தான் 
தெய்வங்களும் அனைத்து உயிர்களும் அடங்கும்
இது ஒன்றும் கேடல்ல. 
ஆனால் அதே நேரத்தில் 
முழுவதும் நன்மை 
செய்யக்கூடியவைகளும் அல்ல 

இந்த மூன்று குணங்களையும்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்தான் 
யோகி. மற்றும் சித்தர்கள் 

இந்த மூன்று குணங்களையும் 
கடந்தவன்தான் ஞானி. 

பரம்போருளால் இந்த உலகம்
செயல்படும்போருட்டு தோற்றுவிக்கப்பட்ட 
தெய்வங்களும் அவைகளுக்கு 
விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய ஏதுவாக
இந்த மூன்று குணங்களை முழுவதுமாகவோ
அல்லது ஏதாவது ஒரு குணத்தை 
முழுமையாகவும் கொண்டோ அல்லது 
மூன்று குணங்களை தேவைக்கேற்ப 
கொண்டு  செயல்படுகின்றன 

அதனால்தான் சில தெய்வங்கள் உக்ரமாகவும், 
சில மந்தமாகவும், சில சாந்தமாகவும் இருகின்றன. 

அதை வணங்குபவர்களும் 
அந்த தெய்வங்களின் குணத்தை பெறுகிறார்கள். 
அந்த குணத்தை பெற்று இந்த உலகில் 
தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்கிரார்கள். 

அதனால்தான் சிலர் ரஜோ குணம் அதிகம் 
வெளிப்படும் காளி,சண்டி ,வீரபத்ரர்,பைரவர் போன்ற 
உக்ர தெய்வங்களை உபாசனை செய்கிறார்கள். 

சுகமான வாழ்க்கை வேண்டுவோர் 
தேவிகளுடன் கூடிய சத்வ மூர்த்தியான ஸ்ரீநிவாசன்,
உமாமஹெஸ்வரன்,
வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகன், 
அம்பிகை,போன்ற மூர்த்திகளை
 உபாசனை செய்கிறார்கள். 

இந்தமூன்று குணங்களுக்கும் 
ஆறு அடியாட்கள் உண்டு. 

அவர்கள் நம் மனதில் எப்போதும் 
குடியிருந்துகொண்டு 
இந்த மூன்று குணங்களோடு 
சேர்ந்துகொண்டு நம்மை 
ஆட்டி வைத்துக்கொண்டிருப்பார்கள். 

நம்மை வினைகள் செய்ய தூண்டி
அதன் விளைவுகளை பிறவிகள்தோறும் 
நமக்கு பரிசாக தந்து நம்மை தொடர்ந்து 
இன்பத்திலும் துன்பத்திலும் 
ஆழ்த்திக்கொண்டிருப்பார்கள். 

அந்த ஆறு அடியாட்கள் யார்?

1 கருத்து: