வியாழன், 28 மார்ச், 2013
மரண தண்டனை தேவையா?
மரண தண்டனை தேவையா?
இன்று அறிவு ஜீவிகள்
என அழைத்துக்கொள்ளப்படும் ஒரு சாரார்
உலகெங்கிலும். மரண தண்டனை அறவே
ஒழிக்கப்படவேண்டும் என்று
கூக்குரல் எழுப்பி வருகிறார்கள்.
அவர்கள் கோரிக்கை சரியா அல்லது
ஏற்றுக்கொள்ளக்கூடாத கோரிக்கையா
என்பதை பற்றி பிறகு ஆராய்வோம்
ஆனால் இன்று அவர்கள்
மரண தண்டனைக்கு எதிராக
எழுப்பும் சம்பவங்கள்தான்
சர்சைக்கு உடையதாக இருக்கிறது.
ஜடமாக செயலற்று காய்ந்த மரம்
போல பிணமாக இருக்கும்
ஒரு மனிதனுக்கோ அல்லது
விலங்குகளுக்கோ உயிரை கொடுத்து
இயங்கசெய்பவன் இறைவன்.
அதுபோல கொடுப்பவனுக்குத்தான்
அதை எடுக்கும் உரிமையும் உள்ளது.
ஆனால் அந்த உரிமையை பிறந்த கணத்திலிருந்து
எந்த நேரத்திலும் மடிந்து போகக்கூடிய நிலையில்
உள்ள மனிதர்கள் அந்த உரிமையை
தாங்களாகவே எடுத்துக்கொண்டதுடன்
அதற்காக சட்டங்களை இயற்றி.
அதன் துணை கொண்டு மற்றவர்களை
அடிமைபடுத்தவும்,தங்கள்
அடாத செயல்களுக்கு துணைபோகாதவர்களை,
சிறையில் தள்ளி கொடுமைப்படுத்துவதும்
அவர்களை கொன்று குவிப்பதும்
பல்லாயிரம் ஆண்டுகளாக
இன்றைய உலகெங்கும்.
நடைபெறும் வாடிக்கையான செயல்கள்.
ஒரு கொலை நடந்தால்
அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற
கொலைகள் நடக்கின்றன.
அதுவே ஒரு நாட்டோடு
தொடர்புபடுத்தப்பட்டால்
போர் ஏற்பட்டு பல்லாயிரம்,
என் லட்சக்கணக்கான
அப்பாவி மக்கள்
படுகொலை செய்யப்படுகிறார்கள்
இந்த படுகொலைகள்.
இது உலகம் தோன்றிய நாள்
முதற்கொண்டு நடைபெற்றுவருகிறது.
ஆனால் இந்த கேடு கேட்ட உலகம்
லட்சக்கணக்கில் மாண்டவர்களை
பற்றி. கவலைபடுவதில்லை.
ஆனால் விளம்பரப்படுத்தப்பட்ட
ஒருநபரின் குற்றத்தினை தீர பல ஆண்டுகள்
நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு.
மரண தண்டனை வழங்கபட்டால் மட்டுமே
முக்கியத்துவம் பெறுகிறது.
மற்ற மரணங்கள் கால வெள்ளத்தில்
கரைந்து போகின்றன.
வெறும் விளம்பரதிற்க்காக
கோரிக்கைகள் வைக்கும்
இவர்களின் நோக்கம்
உண்மையானதுதானா
என்றே சந்தேகம் எழுகிறது?
இன்னும் வரும்
Pic.coutesy-googleimages.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சொல்லப்பட்டவர்களின் உயிரின் மதிப்பு அவ்வளவு தானோ...? ஏனிந்த வேறுபாடு...?
பதிலளிநீக்குசொல்லப்பட்டவர்களா
நீக்குஅல்லது கொல்லப்பட்டவர்களா