வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழ் நாட்டு மக்களின் லட்சணம்


தமிழ் நாட்டு மக்களின் லட்சணம் 



அமரிக்கன் டூரிஸ்ட் :உங்க தமிழ் நாட்டு 
அரசியல் தலைவர்களை 
நினைச்சா எங்களுக்கு
ரொம்ப பெருமையா இருக்குது மேன் .

முனியன் : அப்படி என்ன தொரை , 
பெரிசா கண்டுட்டே

டூரிஸ்ட்: பின்ன என்ன அவங்க 
எல்லாத்தையும் உங்களுக்கு இலவசமா தராங்க :

முனியன்அதெல்லாம் ஒன்னும் சும்மா 
அவங்க துட்டுலிருந்து ஒன்னும் தரலை 
.
டூரிஸ்ட் பின்ன எதுலேந்து தராங்க ?

முனியன் : எல்லாம் அரசாங்க துட்டுதான்டூரிஸ்ட் :

டூரிஸ்ட் அப்படி இலவசமா நிதி தரத்துக்கு
 நீங்கஎன்னதான் பண்ணீங்கa?

முனியன் :அதுவா . நாங்க கட்சிக்காக 
கோடி கணக்கில் 
நிதிவசூல் பண்ணி கொடுப்போம் .
கூட்டம் சேர்ப்போம் 
அவங்கலைகோடீஸ்வரர்கள் ஆக்க
வோட்டு போட்டு தேர்தலில் 
ஜெயிக்க வைப்போம்டூரிஸ்ட் :

டூரிஸ்ட்: அப்புறம் ?

முனியன் : அவங்க பஸ்ஸை கொளுத்த
 சொன்னா கொளுத்துவோம் ,
இல்லை ஆளுங்களோட கொளுத்துன்னுனாலும் 
நாங்க அதை செய்வோம் .
எதை வேணாலும் உடைப்போம் ,
யாரை வேணுன்னாலும் அடிப்போம்

டூரிஸ்ட் : அப் ப நீங்க ஒன்னும் 
வேலையே செய்ய மாட்டீங்களா ?
உழைத்து சம்பாதிக்க மாட்டீங்களா?
அரசுக்கு வரிகிரி கட்ட மாட்டீங்களா?

முனியன் :வரி கிரி ஏதும் கட்ட ????
அதெல்லாம் படிச்ச முட்டா பசங்க பண்றது. 
அரசு கொடுத்த ஓசி டீவியில் 
ஜாலியா சினிமா படம்,
சீரியல் பார்ப்போம் .

டூரிஸ்ட் :அவ்வளவுதானா??.

முனியன் :நான் மேலே சொன்ன வேலையெல்லாம் 
உனக்கு வேலையாக தெரியவில்லையா?
ஏதோ நீ கேட்டேன்னு கொஞ்சம் 
மேட்டரை அவுத்து வுட்டேன்

டூரிஸ்ட் .கோபிசிக்கா,மேலே சொல்லுமுனியன்:

முனியன் :நாங்க சம்பாதிக்கிற 
அல்லா துட்டையும் அரசுக்கே கொடுத்துடுவோம் 
.
டூரிஸ்ட்: .எப்படி?

முனியன் :அரசாங்கம் தொறந்து வைத்திருக்கிற 
சாராய கடையில் விற்கிற மொத்த சாராயத்தையும்
 நாங்களே துட்டு கொடுத்து வாங்கி 
குடித்து வயிற்றை ரொப்பிக்குவோம் 

டூரிஸ்ட் :பொண்டாட்டி 
பில்லைங்கே என்ன பண்ணும்?

முனியன் : அந்த கவலையே எங்களுக்கு கிடையாது 
.பொறந்துலேந்து போற வரைக்கும் 
அல்லாத்தையும் அரசாங்கம் பாத்துக்கும். 
அது பூ கூ பழம் காய்கறின்னு 
வியாபாரம்பண்ணி , 
வயத்தை கழுவிக்கும் 
.
டூரிஸ்ட் ; எங்க எங்க நாட்டிலே 
இது,போல சலுகைகள் எதுவும் கிடையாது

முனியன்: இதை தவிர தேர்தல் நேரத்திலே
 இலவச வேஷ்டி, சேலை, காந்தி நோட்டு,
 பட்டை சாராயம், மூக்குத்தி,
 பிரியாணி பொட்டலம் 
அது இதூன்னு அல்லாம் கிடைக்கும்

முனியன் : அப்ப  நீஎங்க நாட்டிலேயே தங்கிடு . 
நம்ப கட்சியிலே அடிப்படை உறுப்பினராயிடு 
தலைவர் வர போற போது தமிழ் வாழ்க 
தானைத்தலைவன் வாழ்க , என்று உரக்க
அப்போது கூச்சல் போட்டா போதும்.

எங்க கூட கொடி கட்ட
போஸ்டர் ஓட்ட கூடமாட உதவி செய். . 
மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன் 

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்ட்
இலவச மனைபட்டா எல்லாம் நான் வாங்கித்தரேன் ,

பொரம்போக்கிலே ரெண்டு பிளாட் மடக்கி போட்டு 
ஒரு கொடியை நட்டு வைத்தால் போதும்.
கொஞ்சம் வருஷம் கழித்து நல்ல விலைக்கு
 தள்ளிவிட்டு லட்சாதி,பதியாகிவிடலாம். 

பிறகு தேர்தலில் நின்று கோடிக்கணக்கில் 
சம்பாதிக்கலாம்.

 நீ மட்டும் அப்பப்ப நீ பேசற இங்கிலீஷ் கூட 
ரெண்டு தமிழ் வார்த்தைகளை 
உட்டுகிநிருந்தா இருந்தா போதும்.

2 கருத்துகள்:

  1. பல முனியன்கள் வளர்ந்த விதம் அப்படித்தான் போலே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியேதான்.எதிர்காலத்திலும்
      பல கோடி முநியன்கள் அவதரிப்பார்கள்.
      தமிழ்நாட்டை பட்டா போட்டு விற்க

      நீக்கு