இறைவனை தேடும் இதயங்களே .
இறைவனை எங்காவது கண்டீர்களா ?
தினம் தினம் தவறாமல் கோயிலை
சுற்றும் மனிதர்களே இறைவனை
அங்கு பார்த்தீர்களா ?
பக்தியுடன் பூஜை செய்யும் பெரியோரே
பல்லாண்டுகள் பூஜைகள் செய்தும்
ஏன் அவனை காண இயலவில்லை ?
கண்களை மூடி தவம் செய்யும்
துறவிகளே கண்டீரோ இறைவன் தன்னை ?
கண்ணுக்கு தெரியாமல் இவ்வுலகை
இயக்கும் கடவுளைக்காண்பதெவ்வாறு ?
,
கடவுளை கண்டவர்கள் சில பேர்கள்
அவரவர் உணர்ந்த வண்ணம்
கண்டதை பாட்டினில்
வர்ணித்தவர்கள் பல பேர்கள்
வடிவமாய் சமைத்தவர்கள் பலபேர்கள்
சிலர் கடவுளை வர்ணிக்க வார்த்தையின்றி
மௌநியாகிவிட்டவர்கள் சில பேர்கள்
இன்னும் சிலர்
கடவுளோடு கலந்துவிட்டனர்
ஆனால் கடவுளை காணாதவரோ
கடவுள் அங்கிருக்கிறார் ,இங்கிருக்கின்றார்
அப்படி இருக்கின்றார்
இப்படி இருக்கின்றார்
நாங்கள் அவரை உங்களுக்கு காட்டுகிறோம்
என்று கதை விட்டுக்கொண்டு
காசு பார்த்துகொண்டிருக்கின்றனர்
அந்த போலிகளை நம்பி மோசம்
போய்கொண்டிருக்கிறது மூடர் கூட்டம்
கடவுளை உணர்ந்த ஞானிகளோ
அனைத்துமானான் கடவுள் என்றும் ,
அனைத்து உயிரையும் படைத்த கடவுள்
ஆன்மாவாய் அவற்றினுள்
குடி கொண்டுள்ளான் என்றும் கூறுகிறார்கள்
அவன் அன்பு மயமாயிருக்கிறான் என்றும்
அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும்
நீக்கமற நிறைந்து இருக்கின்றான் என்றும்
நாமும் முயற்சி செய்தால் அவனை
கண்டுஇன்புறலாம் ,
இன்பத்தில் திளைக்கலாம் ,
இன்னல்கள் இலா வாழ்வை அடையலாம்
என்று அறுதியிட்டு கூறுகின்றனர் .
குறை காணாது அனைத்திலும்
நிறையே கண்டு அன்பு செய்து வாழ்ந்தால் போதும்
அவனை காணலாம் என்று முழங்குகின்றனர்
சித்தர்களும் யோகிகளும் .
இவ்வுலகை படைத்தவன் கடவுள் என்பார்
சிலரோ தாம் படைத்த
உருவங்களை தான் கடவுள் என்கிறார்கள்
அதை வணங்குகிறார் அனுதினம்
தன் பிராத்தனைகளை நிறைவேற்றகோரி
மன கற்பனையில் உதித்த கடவுள்தான்
கடவுளென்றும் நம்பி காலத்தை வீனாக்குகின்றார்
இந்த அறியாமையை என்னவென்று சொல்வது ?
உள்ளத்தில் உள்ளே அவனை கண்டுகொண்டால்
வெளியிலேயும் அவனை காணலாம் என்பதே உண்மை
உண்மை தான் ஐயா...
பதிலளிநீக்குஉனக்குள் ஒருவன்... நிறைவுப்பகுதியை (பாடல் வரிகள்) நிறைவு செய்ய வேண்டும்...
நீங்களே
நீக்குநிறைவு செய்துவிடுங்கள்