செவ்வாய், 26 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (10)(3)


திருக்குறள் -என் பார்வையில் (10)(3)

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை சேராதார்
பிறவியாகிய பெருங்கடலை
நீந்தி கடக்க இயலாது
என்பது பொதுவான பொருள்.

ஆனால் மனக்கசடுகளை
எவ்வாறு நீக்குவது? 

முதலில் மன கசடுகள் என்றால்
என்ன என்று ஆராய்வோம்.

பொதுவாக கசடுகள் என்றால்
ஒரு திரவத்தில் அடியில் தங்கியுள்ள
பொருட்கள் என்று சொல்கிறோம்.

அதில் பலவிதமான கனமான பொருட்களும்
தேவையற்ற பொருட்களும் இருக்கும்.

தெய்வங்களும் சரி ,அவைகளால்
படைக்கப்பட்ட உயிரினங்களும் சரி.
இந்த மூன்று பிரிவுக்குள் அடங்கிவிடும்.

அவைகள் அந்த உயிரினங்களின்
அடிப்படை குணங்களாக விளங்கும்.

குணங்களுக்கேற்ப
அதன் செயல்பாடுகள் இருக்கும்.

இந்த மூன்றையும் கடந்து கடமாகிய
நம் உடல் உள்ளே சென்றால்தான்
உள்ளிருக்கும் உட் பொருளை
அறிய/அடைய இயலும்.


இந்த மூன்று குணங்களைதவிர
 6 உணர்ச்சிகள் நம் மனதில் உள்ளன
.
அவைகள் நம்மை நாம் யார்
என்பதை உணரவிடாமல்
நம்மை ஆட்டிப்படைக்கின்றன.

அவைகள் முறையே காமம்(ஆசைகள்),குரோதம்(சினம்)
லோபம்(கருமித்தனம் )மோஹம்(பித்து)மதம்(கர்வம்)
மாச்சர்யம்(பொறாமை) ஆகும்.

இந்த மூன்று  குணங்களும்
ஆறு உணர்ச்சிகளும் ஒன்றாக இணைந்து
நம்மை ஆட்டி வைப்பதுடன். இவைகளை
கட்டுப்படுத்த இறைவன் அளித்த
அறிவையும்  மழுங்க செய்துவிடுகின்றன.

அறிவிழந்த நிலையில் சொர்க்கமாக
இவ்வுலகில் வாழ வந்த நம்முடைய
வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது.

இவைகளை அடக்க முடியுமா?
அல்லது நம்முடைய
கட்டுப்பாட்டில்
கொண்டு வரமுடியுமா?

இன்னும் வரும்

1 கருத்து: