திருக்குறள் -என் பார்வையில் (9)
திருக்குறள் -என் பார்வையில் (9)
திருக்குறள் -என் பார்வையில் (9)
குறள்(9)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கோள் என்றால் என்ன?
கோள் என்றால் சுற்றி வரும் ஒரு பொருள்
சூரியனை பல கோள்கள் சுற்றி வருகின்றன
சூரியனை சுற்றி வரும் கோள்களை
பல கோள்கள் சுற்றி வருகின்றன
அவைகளை அவைகளுக்கு என இறைவனால்
விதிக்கப்பட்ட பாதைகளில் பன்னெடுங்காலமாக சுற்றிவந்துகொண்டிருக்கின்றன.
அவைகள் அந்த பாதையை விட்டு சிறிது விலகினாலும்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அழிந்துவிடும்
அல்லது அதைவிட சக்திவாய்ந்த கோளினால்
இழுக்கப்பட்டு நொறுங்கி போய் காணாமல் போய்விடும்.
கோள்கள் இயங்கும் பொறிகள்.
அவைகளின் குணம் சுற்றிவருவதுதான்
அவைகள் சூரியனை சுற்றி வருவதால்
சக்தி பெற்று இயங்குகின்றன.
அதுமட்டுமல்லாமல் பூவுலகில் மனிதர்கள்
செய்யும்வினைகளுக்கேற்ப பயன்களையும்,
பலன்களையும் இறைவனின் ஆணைப்படி
உரிய காலங்களில் அளித்து உயிர்களை
திருந்த செய்து நல்வழிபடுத்தும் சக்திகளாகவும்
அவைகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
மனிதர்களும் சக்தி ஊட்டப்பட்டஆலயங்களில்
உள்ள இறைவனைசுற்றி வந்து இறை சக்தியை
பெற்று துன்பம் நீங்கிவாழ்வில் இன்பம் பெறுகின்றனர்.
அப்படிப்பட்ட சக்தி படைத்த அந்த கோள்களும்
தங்களின் பண்பை இழந்தால் அவைகளும்
துன்பத்தில் சிக்கிக்கொள்ளும் (பொறியில்).
அதிலிருந்து விடுபட அவர்களும் பூவுலகில்
இறைவனின் திருவடிகளை சரணடைந்து
தங்கள்,சாபம், அல்லது,நோய் நீங்கப்பெற்றதாக
அல்லது இழந்த பதவியை பெற்றதாக உள்ள
வரலாறுகள் அனைவரும் அறிந்ததே
எண்ணுகின்ற மனம் என்னும் சக்தியை
அல்லது இயல்பை உடையவன் மனிதன்.
அவன் மனதில் தோன்றும் குணங்களின் பிரதிபலிப்பு
அகத்தில் அவன் எண்ணங்களிலும்,
புறத்தில் செயல்களிலும் பிரதிபலிக்கும் .
சக்தி படைத்த கோள்களும் சரி,அல்லது
அவர்களால் ஆட்டி வைக்கப்படும் மனிதர்களும் சரி.
இறைவன் திருவடிகளைவணங்கவேண்டும்.
எதற்க்காக இறைவனை வணங்க வேண்டும்?
நம்மை படைத்து, நமக்கு எல்லாவற்றையும் தந்து
நம்மை வாழ்வித்து நம்மை மீண்டும் தன்னிடமே சேர்த்துக்கொண்டு நிலையான இன்பத்தை அருளும் அவன் தாள்களை,
திருவடிகளை,தூய அன்போடு ,பக்தியோடு,
பணிவோடு ,நன்றியோடு ,
எண்சாண் வயிற்றுக்கு சிரசே(தலையே) பிரதானம்
என்று விளங்கும் தம் தலையை கொண்டு
வணங்கவேண்டும்.
மற்ற எல்லா பண்புகளும் இருந்து
இந்த தலையான பண்பு இல்லாவிட்டால்
அவர்கள் பொறியில்,அதாவது. பிறப்பு,இறப்பு மற்றும்
துன்பங்களில் சிக்கிமீளா துன்பத்தில்
சிக்கி தவிப்பதை தவிர வேறு வழியில்லை.
குணமென்னும் குன்றேறி நின்றான்
என்று விளங்கும் ஈசனையோ அல்லது
குமரகடவுளையோ அல்லது
குணசீலனான ஏழுமலையானையையோ
வணங்கா தலை இருந்தும் பயனில்லை
என்று பொருள் கொள்ள வேண்டும்.
அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி DDsir
நீக்கு