கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)
கவி சக்கரவர்த்தி
கம்பன் கண்ட கனவு (பகுதி-3)
கம்பன் விழா காணும்
இடத்தை தேர்ந்தெடுத்தல்
பல்வகை சிறப்புகள் பெற்ற
தெய்வீக திருமணங்கள் நிகழும்
பங்குனி மாதத்தில்தான்
கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு
விழா எடுக்கப்பட்டது
தமிழை கரைத்து குடித்த
தமிழறிஞர்களால் காரைக்குடியில்
கம்பன் விழாதொடங்கி
நாட்டரசன்கோட்டையில்
ஹஸ்த நட்சத்திரத்தில்தான்
முடிவடையும்.
சா.கணேசன் அவர்கள்
இந்த நட்சத்திரத்தினை
தேர்ந்தெடுத்தமைக்கு
ஒரு காரணம் உண்டு.
ஏனென்றால் கம்பராமாயணத்தை இந்த
நட்சத்திரத்தில்தான்
கம்பர் எழுத தொடங்கினாராம்.
மேலும் நாட்டரசன்கோட்டையில்
விழா முடிவு நிகழ்ச்சியை
நடத்த ஒரு காரணமும் உண்டு.
ஏனென்றால் கம்பன் இவ்வுலக வாழ்வை
நீத்து இறைவனோடு கலந்துவிட்ட பூமி
என்பதே அது.
சா. கணேசன் அவர்கள்
நாட்டரசன்கோட்டைக்கு
நேரில் சென்று அங்கு வினவ
அப்போதுதான் தெரிந்தது
அங்கு மக்கள் ஒரு இடத்தில்
வழிபாடு செய்வதை கண்டார்.
அந்த இடத்தை பற்றி கேட்டதர்க்கு
அது கம்பன் சமாதி என்று
ஊர் மக்கள் தெரிவித்தனர்
அவ்வூர் மக்கள் அந்த சமாதியின்
மண்ணை எடுத்து பள்ளி செல்லும்
குழந்தைகளின் நாவில்தடவுவதை கண்டார்.
கம்பனை போல் தங்கள் குழந்தைகளும்
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
என்ற அவர்களின் நம்பிக்கையை
பார்த்து மனம் நெகிழ்ந்து போனார்
திரு கணேசன்
இதை பார்த்ததும் அவர் தெரிந்துகொண்டார்
இந்த இடந்தான் கம்பன்
சமாதி கொண்ட இடம் என்று
மேலும் கம்பன் விழாவின்
நிறைவு நிகழ்ச்சியை நாட்டரசன்கோட்டையில்
நடத்த வேண்டும் என்றும்
அன்றே தீர்மானித்தார். .
ஆங்கில மூலம்
The Kamban dream
SUGANTHY KRISHNAMACHARI
The Kamban Vizha is held in Karaikudi in the Tamil month of Panguni, and concludes in Nattarasankottai, in the star Hastham. Ganesan had a reason for choosing Hastham. There is a verse that says that Kamban inaugurated his work on Panguni Hastham. There is yet another verse that says Kamban died in Nattarasankottai. Ganesan visited Nattarasankottai, and found that the villagers there worshipped at a certain place, which they called Kamban Samadhi. Ganesan saw them taking mud from a pit near a rough hewn stone, beneath which Kamban was believed to have been buried, and applying this mud on the tongues of their school going children, in the belief that Kamban would bless their academic endeavours. Ganesan came to the conclusion that this must be Kamban’s burial place and so he decided to organise the last day of the celebrations at Nattarasankottai.
அறியாத தகவல்கள் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅறிந்துகொள்ள
நீக்குயாரும் தயாராக இல்லை
திண்டுக்கல்லாரை தவிர
என்ன செய்வது?
தமிழ் தாயின் புதல்வர்கள்
அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.
அதனால் அவர்கள்
அப்படிதான் இருப்பார்கள்.
வருந்துவதால் பயன் ஏதுமில்லை