திங்கள், 18 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (3)


திருக்குறள் -என் பார்வையில் (3)


திருக்குறள் -என் பார்வையில் (3)


குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

திருக்குறளை உலக பொது மறை 
என்று சொல்லுவார்கள் 

அதனால்தான் என்னவோ 
அதற்கு உரை  எழுதுபவர்கள் 
அவர்கள் சார்ந்த சமயத்தை ஒட்டியோ 
அல்லது தமிழ் பண்டிதர்கள் 
இலக்கண விதிகளை அனுசரித்தோ அல்லது 
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் 
அவர்கள் அவர்களின் கொள்கைகளை 
அனுசரித்தோ உரை எழுதுவார்கள்.

சிலர் திருக்குறள் முழுவதும் 
ஆன்மீக கருத்துக்களைவெளிப்படுத்துவதாக
தற்காலத்தில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். 

பகவான் கண்ணன் கீதையில் 
அருளியபடி தனக்கு உள்ளத்தில் 
தூய பக்தியோடு ஒரு மலரிட்டால்போதும் 
தான் அதை ஏற்றுக்கொண்டு 
அருள் செய்கிறேன் என்கிறான்

அதைபோல் இறை நாமத்தை
இசையோடு இசைத்தால் போதும் 
நான் உங்கள் வசப்படுவேன் என்கிறான். 
அதைதான் நாதோபாசனை என்கிறார்கள்

தன்இனிய இசையால் 
இறைவனை பாடி துதித்து
இறைவனை அடைந்தவர்கள் 
எண்ணற்ற மகான்கள் 

புராண காலத்திலும் சரி 
இந்நாளிலும் சரி. இன்றும் 
நாம சங்கீர்த்தனம் இறைவனை 
அடையும் எளிய மார்க்கமாக கருதப்படுகிறது. 

வாமான அவதாரத்தின் போது 
விஸ்வரூபம் எடுத்து ஒரே அடியால் 
விண்ணையும் மண்ணையும் அளந்த 
பெரிய திருவடிகளை 
உடையவன் திருவிக்கிரமன். 

அந்த மாணடியை மலரிட்டு 
இசையோடு பாடி துதித்து
வணங்குபவர்கள்
இந்த உலகில் நீண்ட  நாட்கள் 
எந்த பிரச்சினைகளும்
இல்லாது வாழ்வார்கள். 

தன்னை விட ஒப்பாரும் 
மிக்காருமான இறைவன்  
திருவடிகளை
சரணடைந்தவர்களுக்கு 
அகந்தை அழிந்துவிடுகிறது.

மனம் அமைதியாக இருக்கிறது. 

ஒரு மனிதனுக்கு அகந்தை 
இல்லாவிட்டால் அவனுக்கு . 
எதிர்பார்ப்புகள் இல்லை. 
அதனால் அவனுக்கு 
ஏமாற்றங்கள் இல்லை. 

அவன் எல்லோருடன். 
இசைந்து நடப்பதால். 
இந்த உலகமும் அவனுக்கு 
எந்த துன்பமும்தருவதில்லை. 

2 கருத்துகள்: