கடமையை செய்
பலனை எதிர்பாராதே(பகுதி-2)
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
சொல்வதற்கு எளிது.
ஆனால் நடைமுறையில்
அது சாத்தியப்படுவதில்லை.
இந்த உலகில் படிப்பதற்கு
என்று சில நூல்கள் உண்டு.
தகவ்லுக்காகவோ அல்லது
நேரத்தை வீணடிப்பதற்க்காகவோ
படித்துவிட்டு தூக்கி எறியப்படும்
நூல்கள் எண்ணற்றவை.
சில நூல்களை
தினமும் படிக்கவேண்டும்.
படிப்பதுமட்டுமல்லாது
அதில் கூறப்பட்டுள்ள
நல்ல கருத்துக்களை மனதில்
பதியவைத்துக்கொண்டு,
வாழ்வில் நடைமுறைபடுத்தவேண்டும்.
இல்லாவிடில் அதுபோன்ற நூல்களை
இயக்க தொடங்கியவுடன் ஒலிக்கும் taperecorder
போல் சொல்லிவிட்டு மற்ற வேலைகளை
கவனிக்க போவதால் என்ன பயன்?
பல்லாயிரம் தடவை taperecorder
ஒலித்தாலும் அதனால்
அதற்க்கு என்ன பயன்?
அதே நிலைமைதான் ஈடுபாடு
இல்லாமல் செய்யப்படும்
எந்த செயலும்.
இன்று எல்லோரும்
அதைதான் செய்துகொண்டிருக்கிறார்கள்?
இன்று பகவத் கீதையை
முழுவதுமாக தினமும்
பாராயணம் செய்கிறார்கள் பலர்
இன்னும் பலர் அதை அக்கு வேறாக
ஆணி வேறாக புட்டு புட்டு ஆராய்ச்சி
செய்து வியாக்கியானம் செய்து
காசு சம்பாதித்து வயிற்ரை நிரப்புகிறார்கள்.
நாட்டில் உள்ள பல இரைச்சல்களோடு
இவர்களின் இரைச்சல்களும்
சேர்ந்து கொண்டு
ஆகாசத்தினை நிரப்பிகொண்டிருக்கின்றன. .
சிலர் செய்யும் பூஜைகளும்,
புனஸ்காரங்களும்,
விரதங்களும் அப்படியே.
எந்த நோக்கத்திற்காக அதை
மேற்கொள்ளுகிரார்களோ
அந்த நோக்கம் இறுதிவரை
நிறைவேருவதேல்லை
ஏனென்றால் அவர்களிடம்
பொறுமையில்லை,
முழு நம்பிக்கை இல்லை.
அதிலும் அவர்கள் செய்வதை
பிறரிடம்தம்பட்டம்
அடித்துக்கொள்ளுவதர்க்காகதான்
அது பயன்படுகிறது.
பலர் வெளி வேஷத்திற்காக
இப்படி செய்கிறார்கள்.
அதனால்தான் ஆன்மீகத்தில்
எந்தவிதமான் ஒரு முன்னேற்றமும்
இல்லாமல் இந்த மனித இனம்
பெரும் துன்பத்திற்குள்ளாகி
இந்த உலகம் போட்டியும்
பொறாமையும் நிறைந்து
போர்க்களமாக
காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு. மனிதன் மனதில்
போட்டியும் பொறாமையும்
இல்லாமல் இருந்தால்தான்.
இந்த உலகம் அமைதியாக இருக்கும்.
அதை விடுத்து வெளி உலகில்
அதற்க்கான மேற்கொள்ளப்படும்
எந்த முயற்சியும் தோல்வியில்தான்
முடியும் என்பது கண்கூடு. .
Pic.courtesy-googleimages.
கண்டிப்பாக போர்க்களம் தான்...
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா...