திருக்குறள் -என் பார்வையில் (4)
திருக்குறள் -என் பார்வையில் (4)
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
யாண்டும் இடும்பை இல.
ராக த்வேஷம் என்றும்,
விருப்பு வெறுப்பு என்றும்,
வேண்டுதல்வேண்டாமை என்று
பலவாறாகஅழைக்கப்படும்
இந்த குணங்கள் மனித உயிர்கள்
அனைவரையும் ஆட்டி படைக்கின்றன.
அது மனிதர்களை
சுயநலம் கொண்டவர்களாக ஆக்கி
பிறருக்கு துன்பம் விளைவிக்கும்
கொடிய அசுர தன்மை கொண்டவர்களாக
மாற்றிவிடுகின்றன.
அதனால் இந்த சமூகம்
பெரும் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறது.
இந்த தீய குணத்திற்கு அடிமையானவர்கள்.
அவர்களும் நிம்மதியாக வாழுவதில்லை .
தங்களை சுற்றியுள்ளவர்களையும்
அமைதியாக, இன்பமாக வாழ விடுவதில்லை.
இந்த உலகில் விருப்பு வெறுப்பற்ற
மனிதர்களை காண்பது மிக அரிது.
அது ஆன்மீகமாக இருக்கட்டும்
உலக வாழ்க்கையாக இருக்கட்டும்.
அதுதான் அங்கு ஆட்சி செய்கிறது.
வெளியில்விருப்பு வெறுப்பற்றவர்களாக
தங்களை காட்டிகொள்ளும்
அரசியல் தலைவர்களாகட்டும்
அல்லது ஆன்மீக தலைவர்களாகட்டும்.
அவர்களை நாடி வருபவர்களை
அவ்வாறு நடத்துவது கிடையாது.
என்பதை அவரவரின் அனுபவங்களே சொல்லும்.
இதற்க்கு விளக்கம் தேவையில்லை.
ஏனென்றால் அனைவரும் தங்களை
முன்னிறுத்தியே இந்த உலகத்தில் வாழுகின்றனர்.
அதற்கு சாதகமாக இருப்பவர்களையே விரும்புகின்றனர்.
அதற்கு மாறாக நடப்பவர்களை வெறுக்கின்றனர்.
அவர்களின் பொய் வேஷத்தை நம்பி
தங்கள் துன்பம் தீர அவர்களிடம்
செல்பவர்களின் துன்பம் தீருவது கிடையாது.
மாறாக அவர்களின் துன்பம் பலமடங்கு
பெருகித்தான் போகிறது.
விருப்பு வெறுப்பு அற்றவர்கள்தான்
யோகிகளும் ஞானிகளும் .
அவர்களுக்கு சுயநலம் என்பது கிடையாது.
அவர்களுக்கு தேவை என்பது இல்லை.
அவர்களிடம் செல்பவர்கள்
அனைவரையும் அவர்கள்
ஒன்றாகவே காண்கின்றனர்.
எந்த பிரதிபலனையும் எதிர்பாராது ,
அன்பு பாராட்டி அவர்களின்
துன்பத்தை தீர்த்து
வைக்க ஆவன செய்கின்றனர்.
எங்கும் பரவியுள்ள இறைவனை
ஒரு எல்லைக்குட்பட்டு இயங்கும்
நம் புலன்களால் நாம் அறிய இயலாது.
இறைவனுடன் நாம் நேரிடையாக
தொடர்பு கொண்டு நம் துன்பங்களை
போக்கி கொள்ள இயலாது.
அந்நிலையில் நம் துன்பங்கள்
தீர வேண்டுமானால் இதைபோன்ற
விருப்பு வெறுப்பற்றஞானிகளை தேடி
அடைந்தால் நம் துன்பங்களும் விலகும்,
அவர்களின் வழிகாட்டுதலின்
பயனால் நமக்கு துன்பங்களும்
வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
/// அந்நிலையில் நம் துன்பங்கள்
பதிலளிநீக்குதீர வேண்டுமானால் இதைபோன்ற
விருப்பு வெறுப்பற்றஞானிகளை தேடி
அடைந்தால் நம் துன்பங்களும் விலகும் ///
உண்மை கருத்துக்கள் ஐயா...