திருக்குறள் -என் பார்வையில் (8)
திருக்குறள் -என் பார்வையில் (8)
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அனைவரும் இறைவனின்
திருவடிகளை சேராவிட்டால்
பிறவிக்கடலை கடக்க இயலாது
என்று பன்னெடுங்காலமாக
ஒரே பொருளை கூறுகின்றனர்.
அந்தணன் எனப்படுபவர்
அறவோர் என்று பொருள் உண்டு.
எல்லா உயிர்க்கும்செந்தண்மை
பூண்டு ஒழுகுபவர் என்றொரு பொருளும் உண்டு.
அந்தணன் எனப்படுபவர் யார்?
அந்தண குலத்தில் பிறந்தவர்கள் மற்றும் பூணுல் அணிந்தவர்கள்தான் தற்காலத்தில் அந்தணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர்
அந்தணருக்குரிய கல்வித்தகுதிகளோ,
அந்த குலத்தில் பிறந்தவர்க்கு
அனுசரிக்கவேண்டிய
ஆசார ஒழுக்க விதிமுறைகளையோ
அனுசரிப்பவர்களஅல்லர்
அதனால் அவர்கள்
சமூகத்தில் பெறவேண்டிய
மதிப்பை இழந்துவிட்டனர்.
இப்போது அவர்களுக்கு
இருக்கும் மதிப்பு எந்த அளவிற்கு
ஆத்மார்த்தமானது என்பதை
அவர்களே அறிவார்கள்.
கடல் போல் பரந்த இந்த உலகில்
உயிர்கள் அனுசரிக்கவேண்டிய
அறங்கள் ஏராளம்.
ஒவ்வொரு பகுதியில்
வசிக்கும் மக்களுக்கு ஏற்ப
ஏராளமான அறங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அறங்களை முறையாக அனுசரித்தால்
சமூகத்தில் போட்டி பொறாமையின்றி
அனைவரும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்துகொண்டு. அமைதியான
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
ஆனால் அந்த நிலை இன்று இல்லை.
ஏனென்றால் அனைவரின் மனதிலும்,
சுயநலமும், அகந்தையும் குடிகொண்டுவிட்டதால்
இன்று உலகில் அமைதியில்லை
போட்டியும் பூசலுமாக மக்கள்
ஒருவரைஒருவர் துன்புறுத்திக்கொண்டு
மகிழ்ச்சியற்ற வாழ்க்கை
வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
அறவழி நின்றால்
இவ்வுலக வாழ்வும் இனிக்கும்
அவ்வுலக வாழ்வும் சித்திக்கும்.
ஆழி என்றால் ஆழம் தெரியாத கடல்.
அதுபோல்தான் உயிர்கள் எடுக்கின்ற பிறவிகளும்.
எத்தனை பிறவி எடுத்தனர்,
இன்னும் எத்தனை எடுக்கபோகின்றனர்
என்பதை யாரும் அறிய முடியாது.
அற நூல்களை அனைவரும்
எளிதில்கற்றுக்கொள்ளமுடியாது.
கற்றுக்கொண்டாலும்
அதன் உட்பொருளை
உள்ளபடி உணரமுடியாது.
அதற்கு விடாமுயற்சியும்,
பொறுமையும், மனஒருமைப்பாடும்,
ஒழுக்கமும், நேர்மையும்,
இறை நம்பிக்கையும்
தகுதிகளாக வைத்தனர்
நம் முன்னோர்கள்.
இன்று எல்லோரும்
எல்லாவற்றையும்
கற்க வழியுள்ளது
ஆனால் அறவழி
யாரும் நிற்ப்பதில்லை.
அதுதான் இன்றைய
மனித குலத்தின்
வீழ்ச்சிக்கு காரணம்
எனவேதான் அறநூல்களை
முறையாக கற்று,
அதை வாழ்க்கையில்
கடைபிடிக்கும் அந்தணர்களை
அடைந்து உண்மையை
அறிந்து தெளிந்தாலன்றி.
பிறவி பெருங்கடலை கடக்க இயலாது
என்று அன்று வாழ்ந்து வந்த
அந்தணர்களை மனதில் கொண்டு
குறளமைத்தார் வள்ளுவர். பெருமான்.
தற்காலத்தில் அதுபோன்று அறங்களை
முழுமையாக கற்று அதன்
வழி நிற்பவர்கள் இருக்கிறார்கள்.
உண்மை இன்பத்தை நாடுவோர்
அவர்களை தேடி சென்றடைந்து
பிறவி பெருங்கடலை கடக்க வழி தேடலாம்.
வீழ்ச்சிக்கு காரணம் யோசித்துப் பார்த்தால் உண்மை என்றே படுகிறது...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்களை
நீக்குபகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி
உண்மை படுக்காது
உண்மை சுடும்.
அற வழி நடப்போரே அந்தணர்.உண்மை அய்யா.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்களை
நீக்குபகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி