திருக்குறள் -என் பார்வையில் (1)
குறள் 1:
திருக்குறளுக்கு உரை பலர் எழுதியுள்ளனர்.
யார் எதை எழுதினாலும் அதை நம்முடைய
அறிவு புரிந்துகொண்டு அதை வாழ்வில் செயல்படுத்துவதுதான் திருக்குறளைபடிப்பதின் நோக்கமாக இருக்கவேண்டும்.
அப்படி நான் புரிந்துகொண்டதை
இங்கு பகிர்ந்துகொள்கிறேன்
அவ்வளவுதான்.
நான் சொல்லுவதை தவறு அல்லது சரி என்ற வாதம்
ஆராய்ச்சி இங்கு தேவையில்லை
என்பது என் தாழ்மையான கருத்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
திருக்குறளுக்கு உரை பலர் எழுதியுள்ளனர்.
யார் எதை எழுதினாலும் அதை நம்முடைய
அறிவு புரிந்துகொண்டு அதை வாழ்வில் செயல்படுத்துவதுதான் திருக்குறளைபடிப்பதின் நோக்கமாக இருக்கவேண்டும்.
அப்படி நான் புரிந்துகொண்டதை
இங்கு பகிர்ந்துகொள்கிறேன்
அவ்வளவுதான்.
நான் சொல்லுவதை தவறு அல்லது சரி என்ற வாதம்
ஆராய்ச்சி இங்கு தேவையில்லை
என்பது என் தாழ்மையான கருத்து
ஆயிரம் உரைகள் வந்திருக்கலாம்
திருக்குறளுக்கு
அவரவர் கற்ற கல்வி அறிவுக்கு தக்கபடி
அவரவர் மன எண்ண ஓட்டத்தின்படி.
அந்நாளில் முதலையின் வாயில் சிக்கி
மரணத்தின் வாயிலில் நின்று கதறியது
ஒரு கரி .
அப்போது அது ஆதிமூலமே என்னை காப்பாற்று
என்று அழைத்தது
எண்ணிலா தெய்வங்கள் இருந்தும் அவைகள்
ஏதும் அந்த கரியை காப்பாற்றவரவிலை
ஏனென்றால் அனைத்தையும் படைத்து
அதன்உள்ளே இருந்து அவைகளை
இயங்க சக்தி கொடுத்த பொருள்
ஒன்று உண்டு
அப்போது அந்த கரியை காப்பாற்ற வந்ததுதான்
அந்த அரி என்ற ஆதிமூலம்
அந்த ஹரியிடமிருந்துதான் அனைத்தும்
உண்டானது. அவனை முதலாக
கொண்டதுதான் இந்த உலகம்.
ஒளியும் ஒலியும்
அவனிடமிருந்தே வந்தது
இதை ஏற்பாரும் உண்டு
எதிர்ப்பரும் உண்டு.இந்த உலகில்
அவர்களுக்கும் அதற்க்கான
சக்தியை கொடுப்பது அவன் தான்
சிறப்பாக ஆரம்பித்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...
பதிலளிநீக்குதிருக்குறளுக்கு
நீக்குமெத்த படித்தவர்கள்
எழுதும் உரைகள்
பாமரர்களுக்கு புரிவதில்லை.
புரிந்திருந்தால். இந்த சமூகம்
இந்த அவல நிலைக்கு வந்திருக்காது.
என்னை போன்ற ஒரு பாமரன்
எழுதினால் மக்களுக்கு போய் சேரும்
என்ற பகற்கனவு.
அதுதான் இந்த முயற்சி.