வெள்ளி, 8 மார்ச், 2013

கணித மேதை ராமானுஜன் பற்றிய பதிவில் அவர் மறைவிற்கு என் அஞ்சலிகள்


கணித மேதை ராமானுஜன் 
பற்றிய பதிவில் 
அவர் மறைவிற்கு 
என் அஞ்சலிகள் 
link;
http://karanthaijayakumar.blogspot.com/ 


அருமையான பதிவு தந்தீர்
அகத்தை நெகிழ வைத்தீர் 
கரந்தையாரே 
கால வெள்ளத்தில் 
ராமானுஜன் போல் கரைந்து
காணாமல் போனவர்கள்
கோடி கோடி. 

இந்த உலகம் 
இப்படிதான்  இருக்கும் 

புகழ்ச்சியும் 
இகழ்ச்சியும்  
போலியானவை 

உண்மை ஒன்றே 
என்றும் நிலையானது

புகழும் வாய்கள் 
இகழவும் செய்யும்

மீண்டும் அதே வாய்கள் 
மாற்றியும்  பேசும்

திறமையுடையாரை 
வாழும் காலத்தில் 
இந்த உலகம் 
மதிப்பதில்லை 

கண்டு கொள்வதும் 
இல்லை

காணாமல் போனபின் 
கல்லறைக்கு மலர் தூவி
சிலை அமைத்து 
ஆண்டுதோறும் மாலையிட்டு 
அன்னாருக்கு விழா எடுத்து 
விளம்பரம் தேடும்  
அற்பக்கூட்டம் 
இந்த மனித இனம்

வாடிக்கையாகிவிட்ட 
வழக்கத்திற்காக 
வருந்துவதில் 
பயனில்லை 

எதற்கும் உடனடி 
பலனை எதிர்பார்க்கும் 
பேராசைக்காரர்கள் 
நிறைந்த உலகம் இது

ஆராய்ச்சியாளர்களின் 
முடிவுகள் மக்களை நெருங்குவதற்குள் 
மரணம்அவர்களுக்கு முடிவு கட்டிவிடும்
இதுதான் இயற்கையின் விதி 

லேசான மனம் கனப்பதும் 
கனத்த மனம் லேசாவதும் 
மனதின் இயல்பு. 
அதனால் மனதை 
அழித்தொழி 
உனக்கு மட்டில்லா 
ஆனந்தம் பிறக்கும் 
என்றார்கள் ஞானிகள். 

ஆனால் மனம் 
யாரையும் விடுவதில்லை 
அதன் பிடியிலிருந்து 
விலகி செல்ல 

அதனால்தான் இன்னும் 
இந்த உலகம் 
இயங்கிகொண்டிருக்கிறது. 

3 கருத்துகள்: