வெள்ளி, 8 மார்ச், 2013

மகளிர் தின சிந்தனைகள்(2)


மகளிர் தின சிந்தனைகள்(2)


மோகம்
கொள்ளாதிரு மனமே
பெண்களிடம் மோகம்
கொள்ளாதிரு மனமே

கண்களால் அவர்கள்
வீசும் வலையில்
விழுந்துவிடாதே மனமே
விழுந்துவிடாதே மனமே

மோகம் கொண்ட பெண்ணிடம்
உறவு கொண்டால் அவள்
உனக்கு  சோகம் என்னும்
குழந்தையைத்தான்
பரிசாக தருவாள்.

ஊரறிய உலகெல்லோர் எல்லாம்
வாழ்த்த உத்தம குல பெண்ணை
மணமுடித்தால் அந்த பத்தினிபெண்
பெற்று தருவாள் உன் குலம்
விளங்க ஓர் வாரிசு.


ஒருவனுக்கு ஒருத்தி என்று
இவ்வுலகில் வாழும் காலம் வரை
அன்பும் அறமும் இரு கண்களாய்
கொண்டு அவளோடு இல்லறம்
நடத்தினால் அதுவே நல்லறமாகும்

மலருக்கு மலர் தாவும் வண்டுகள்
போல் இல்லாது நல்லம் குணம்
படைத்த  மங்கையரை மனமொத்து
மணந்து மகிழ்வுடன் நடத்துவதே வாழ்க்கை.

அழகற்றவளே ஆனாலும் அன்புள்ளம்
கொண்டவளே அருமையானவள்
அவளுடன் வாழ்க்கை நடத்தினால்
அனைத்து செல்வங்களும் உன்னை
தானே தேடி வரும் என்று உணர்

மேனிமுழுவதும் நகைகள் பூட்டி
அலங்கரித்து எதற்க்கெடுத்தாலும்
முகம் சுளிக்கும் பெண்ணை விட
எந்நிலையிலும் முகத்தில் மட்டும்
புன்னைகையை மாறாமல் தேக்கி
அன்பு காட்டும் பெண் ஒரு தேவதையே

(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக