திங்கள், 18 மார்ச், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-2)


கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு(பகுதி-2)



கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-2)








திரு.சா . கணேசனுக்கு
தமிழின்மீது காதல் 
அவர் பள்ளிபருவத்திலேயே 
அரும்பதொடங்கியது


காரைக்குடியில் வசித்துவந்தவரும்
ஆனந்த விகடன் 
என்னும் இதழில் சித்திர ராமாயணம் 
என்னும் தொடரை எழுதிய 
திரு.ப ஸ்ரீ. என்பவரும்,வ.வே.சு. அய்யர்,
தி. கே. சிதம்பர முதலியார்(டி.கே.சி.) 
மற்றும் பர்மாவில் உள்ள 
ஒரு மளிகைக்கடைகாரரும் உட்பட 
சா. கணேசனை கம்ப ராமாயணத்தை 
படிக்குமாறு ஊக்கப்படுத்தினார். 


திரு.டி.கே.சி.அவர்கள் தலைமையில் 
காரைக்குடியில் 1939 ஆம் ஆண்டில்
அழியா புகழ்  கொண்ட  கம்பராமாயணத்தை 
அழகு தமிழில் இந்த உலகத்திற்கு
 தந்த கம்பனுக்கு விழா எடுக்க முனைந்தார். 


ஆனால் விழா தொடங்குவதற்குமுன் 
சில ஆண்டுகள் முன்பே  
திரு. சா. கணேசன் 
இந்திய சுதந்திர போராட்டத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

அவர் மகாத்மா காந்தியின் 
தீவிர போராட்டமான
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் 
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அதன் விளைவு அவர் வீடு ஆங்கில அரசின் 
காவல் துறையினரால் 
கையகப்படுத்தப்பட்டது
பல லட்சக்கணக்கான மதிப்புள்ள 
அவர் சொத்துக்கள் 
அரசின்  கைவசமாகிவிட்டது.


இந்த சம்பவங்களைக்கண்டு
சிறிதும் அஞ்சாமல் கணேசன் அவர்கள் 
மாறுவேடத்தில் எல்லா இடங்களுக்கும் சென்று
இளைஞர்களை நம்மை அடிமைப்படுத்தி 
ஆங்கில அரசுக்கு எதிராக போராடுமாறு தூண்டினார். 

அதன்  விளைவு.,அவருடைய நண்பர்கள்
காவல் துறையினரின் கொடுமைக்கு
இலக்கானார்கள்.

தன் நண்பர்கள் படும் துன்பத்தை கண்டு 
மனம் பொறுக்காத  கணேசன் அவர்கள்
காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

சரணடைந்த வரை அலிப்பூர்
சிறைச்சாலையில்
சிறை வைத்தது ஆங்கில அரசு. 

ஆனால் சிறையிலிருந்தாலும் 
அவர் கம்பன் விழா தொய்வில்லாமல் 
தொடர்ந்து நடைபெற ஆவன செய்தார். 

என்னே அவரின் கம்பன் 
மீதுள்ள தமிழ் பற்று. 

இராமாயண காவியத்தை
ஊன்றி படித்தவர்கள் 
அநீதிக்கு எதிராக போராடும் குணத்தை 
பெறுவார்கள் என்று சத்தியம். 

எப்படி என்றால் காந்தி மகான் 
ராம நாமத்தின் துணை கொண்டுதான் 
தன் தாய் நாட்டின் சுதந்திர போராட்டத்தை
வென்றெடுத்தார்.

தன் உயிர் பிரியும் போதும் 
அவர் வாய் ராம நாமத்தை 
உச்சரிக்க மறக்கவில்லை.

மேலும் தன்னுடைய பிரார்த்தனையின்போது 
அனைத்து மக்களையும் ராம நாமத்தை
உச்சரிக்க வைத்தார்.

அந்த பாடல் இன்றும் கேட்கும்போது
கல்மனதையும் கரையவைக்கும்
என்பதில் அய்யமில்லை 

அதைபோல்தான் சா கணேசன் அவர்களும்,
கம்பராமாயணத்தை படித்ததனால்தான் என்னவோ.
நம்மையும், நம் நாட்டையும் அடிமைப்படுத்திய
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் 
குணத்தை பெற்றாரோ என்னவோ?

தன் சொத்துக்களை இழந்தபோதும் கலங்காது,
தான் மேற்கொண்ட பணியை தொய்வில்லாது
தொடர தேவையான ஆன்ம பலத்தை,
மன உறுதியை பெற்றது அந்த இராமாயண
காவிய நாயகனான ராமபிரானின்
அருளினானல்லவோ
என்று எண்ணத் தோன்றுகிறது 

கம்பராமாயணம் வெறும் வார்த்தைகளினால் 
தொடுத்து வைக்கப்பட்ட மாலையல்ல,

அது தம்  வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும்
கடைப்பிடித்து உய்ய வேண்டிய வழிகாட்டு நூல் 
என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும். 

(இன்னும் வரும் )
படங்கள்-நன்றிgoogle images


 நன்றி 
ஆங்கில மூலம்
சுகந்தி கிருஷ்ணமாச்சாரி 
(ஹிந்து நாளிதழ் )


The Kamban dream

SUGANTHY KRISHNAMACHARI

Ganesan’s love for Tamil began when he was in school. Those who encouraged him to study Kamba Ramayanam included P. Sri, the author of Ananda Vikatan’s‘Chithira Ramayanam’, who lived in Karaikudi for some years, Va. Ve. Su. Iyer, T.K. Chidambaranatha Mudaliar (TKC) and even a scholarly grocery store owner in Burma! It was in 1939 that Ganesan set out to organise Kamban Vizha in Karaikudi, under the stewardship of TKC.
From 1935, Ganesan was actively involved in the Freedom Movement. His participation in the Quit India Movement resulted in his house being raided by the police. Several lakhs worth of property was confiscated. Unperturbed, Ganesan went about in disguise, giving rousing speeches to mobilise the youth against British rule. The police then arrested his friends, and to save them trouble, Ganesan surrendered, and was promptly despatched to the Alipore jail. But even while in prison, he ensured that the Karaikudi Kamban Vizha continued.

2 கருத்துகள்:

  1. /// சா கணேசன் அவர்களும், கம்பராமாயணத்தை படித்ததனால்தான் என்னவோ... நம்மையும், நம் நாட்டையும் அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் குணத்தை பெற்றாரோ என்னவோ..? ///

    அதுவும் இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவின் உண்மை பொருளை
      எடுத்தாண்டமைக்கு நன்றி DDsir

      நீக்கு