புதன், 20 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (7)


திருக்குறள் -என் பார்வையில் (7)


திருக்குறள் -என் பார்வையில் (7)

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

மனம் என்றும் உள்ளம் என்றும் 
அழைக்கப்படும் ஒரு சக்தி 
நம் உடலில் இருந்துகொண்டு 
நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிறது.

மனம் என்பது எண்ணங்களின்
தொகுப்பே என்றும் 
மனதில் உள்ள எண்ணங்களை 
எல்லாம் நீக்கிவிட்டால் 
நான் என்னும் ஆன்மா மட்டுமே
எஞ்சி இருக்கும் என்கிறார்கள் ஞானிகள்.
 
மனம் இருப்பதால்தான் 
அதில் நினைவுகளாக பதிவாகியுள்ள
நல்ல இன்பம் தரும் நினைவுகளும், 
கசப்பான துன்பம் தரும் நினைவுகளும்
மாறி மாறி நம் மனதை விட்டு 
வெளிப்பட்டு நம்மை துன்பத்தில் 
தொடர்ந்து ஆழ்த்திக்கொண்டு வருகின்றன

ஒரு பொருளை நாம் விரும்பி தேடி
அதை அடைந்து அதை 
அனுபவிக்க நினைக்கும்போது 
அந்த முயற்சியையோ அல்லது 
அந்த பொருளையோ மற்றவர்கள்
ஏளனமாக பேசிவிட்டாலோ 
நம்முடைய மகிழ்ச்சி 
உடன் காணாமல் போய்விடுகிறது.

அந்த கசப்பான நினைவுகள் 
நம் மனதில் தங்கி விடுகின்றன. 
அந்த மனிதரை பார்க்கும்போதோ 
அல்லது அந்த பொருளை பார்க்கும்போதோ 
அல்லது நினைக்கும்போதோ 
அந்த கசப்பான நினைவுகள் 
நம் மனதில் தோன்றி நம் 
மகிழ்ச்சியை அழித்துவிடுகின்றன. 

இதுபோல் கணக்கற்ற நினைவுகள்
இந்த உலகில்  இன்பமாக வாழ வந்த 
நம்மை கொடுமைபடுத்திகொண்டிருக்கின்றன. 

கசப்பான நினைவுகள் 
நிகழ்காலத்தின் இன்பத்தை 
சிதைப்பது மட்டுமல்லாமல் 
எதிர்காலத்தையும் சீரழித்துவிடுகின்றன. 

இதிலிருந்து  தப்பிக்க என்ன வழி?

ஒன்று மனம் இல்லாமல் செய்யவேண்டும்.
அல்லது மனத்தை கட்டுப்பாட்டில் 
கொண்டுவரவேண்டும்.

இரண்டையும் செய்வதற்கு 
வழிமுறைகள் பல உள்ளன.
பயிற்சிகள் உள்ளன 

அதற்க்கு பல ஆண்டுகள் ஆகும். 
இரண்டையும்  செய்ய
நம் மனம் இடம் தராது. 

கடுகு மூட்டைபோல் சிதறிப்போன
நம் மனதை ஒன்று சேர்ப்பது என்பது
அவ்வளவு எளிதல்ல. 

நமை சுற்றியுள்ள உலகமும் 
அதற்கு ஒத்துழைக்காது

மாறாக நம் மனதை இன்னும் குழப்பி 
அதை. தெளியவிடாமல்
பார்த்துகொள்ளும். 
 
அதற்க்கு என்ன வழி?

மனதை முழுவதுமாக அழித்து 
தன்னுடைய ஆன்ம ஸ்வரூபத்திலே
நிலையாய் நின்றுவிட்ட
பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்களின் 
திருவடிகளை சரணடையவேண்டும். 

அதைபோன்ற மகான்கள் 
இப்போது எங்கிருக்கிறார்களோ 
நமக்கு தெரியவில்லை.

ஆனால் உலகில் மகான்கள் 
துன்பத்தில் உழலும் மக்களை கரை சேர்க்க 
அவதரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

நம் உள்ளத்தில் உண்மையான பக்தியுடனும்
பணிவுடனும், உண்மையான 
ஆன்மீக தாகத்துடனும் முயற்சி செய்தால்
அப்படிப்பட்ட மகான்களின்
 தொடர்பு நமக்கு கிடைக்கும். 

அவர்களை சரணடைந்தாலன்றி. 
 நம்முடைய மனக்கவலைகளை 
 மாற்ற  முடியாது. 

புத்தகங்களில் கூறப்பட்ட அறிவுரைகள் 
ஓரளவிற்குதான் வழி காட்டுமேயன்றி 
அவைகளால் தீர்வினை தர முடியாது.

மனம் என்பது ஒரு சிக்கலான 
புரிந்து கொள்ளமுடியாத புதிர்

மனதில் ஒரே ஒரு எண்ணம் 
இருக்கின்ற வரைக்கும் 
அது சர்வ சக்தி படைத்த அரக்கன் ஆகும். 

1 கருத்து: