திங்கள், 18 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (2)


திருக்குறள் -என் பார்வையில் (2)


திருக்குறள் -என் பார்வையில் (2)

குறள் 2: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வி கரையில 
கற்பவர் நாள் சில 
என்பார்கள்

கல்வி பலவகைப்படும் 
ஒரு குரு மூலம்  கற்பது
அனுபவங்கள் மூலம்  கற்பது

ஆனால் கற்று தெளிந்த ஒரு 
குருவிடம் கல்வி பயில வேண்டும்

வெறும் பட்டம் பெற்றவர்களிடமிருந்தும்,
நூல்கள் மூலம்  பெற்ற கல்வி,நூலை கொண்டு 
பட்டம் விடவும்.தம்பட்டம் அடித்துகொள்ளவும்தான் பயன்படும்

உலகில் இன்பமாக வாழவும்,
துன்பங்களை போக்கிக்கொள்ளவும் 
பயன்படும் கல்வி வேறு.

இறை ஞானத்தை அறிய
உதவும் கல்வி வேறு. 

உலக ஞானத்தை 
அடைய கணக்கற்ற குருக்கள் 

ஆனால் ஆத்ம ஞானத்தை 
சத்குருவிடம் மட்டும் தான் 
கற்றுக்கொள்ளமுடியும். 

தகுந்த குருவிடம் முறையாக 
கல்வி கற்று இவ்வுலக வாழ்க்கையை
நடத்தவேண்டும் 

அவ்வாறு பெற்ற கல்வியறிவைகொண்டு 
ஞானத்தை வழங்கக்கூடிய சற்குருவை 
அடைந்து அவர் பாதங்களில் 
பணிந்து ஞானத்தை பெறவேண்டும் 

அவ்வாறு செய்யாவிடில்
கற்ற கல்வியறிவினால் 
ஏதும் பயனில்லை என்பதுவே 
இந்த குறளின் கருத்து

ஞானம் ஹரியிடமிருந்து 
இந்த உலகத்திற்கு  வந்தது.

பரிமேலழகர் என்றும், 
பரிமுகபெருமான் என்றும், 
ஹயக்ரீவர் என்றும் பக்தர்களால் 
அன்புடன் அழைக்கப்படும்தெய்வம்தான்
ஞானத்தை அளிக்கும் கடவுள்

அந்த ஞானத்தை பரமசிவன்
நால்வர்களுக்கு. உபதேசித்தார்.
தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில் 
மெளனமாக நிலையில்
அவரே ஆதி குரு,

அடுத்து இவ்வுலக மக்களுக்காக 
மகா பாரத போரில் 
அர்ஜுனனுக்குஹரி கண்ணனாக 
அவதாரம்  செய்து 
பகவத்  கீதையை உபதேசித்தார். 
அதனால் அவர் ஜகத்  குரு 
என்றழைக்கப்பட்டார். 

அதற்க்கு பிறகு எண்ணிலடங்கா மகான்கள் 
இப்புவியில் தோன்றி ஞானத்தை 
உண்மையை அறிய நினைக்கும் சாதகர்களுக்கு
உபதேசித்துகொண்டு வருகின்றனர். 

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி DDsir
      நீங்களும் நானும்தான் திருக்குறளை சிந்திக்கிறோம் போலும்.மற்றவர்கள் தீகுறளைதான் ஓதிக்கொண்டிருக்கிரார்கள்.

      நீக்கு