திங்கள், 25 மார்ச், 2013

என்று நாம் முன்னேறபோகிறோம்?


என்று நாம் முன்னேறபோகிறோம்?என்று நாம் முன்னேறபோகிறோம்?

பல்லாயிரம்கோடி ரூபாய்களை அள்ளி தருகிறது 
அரசுக்கு ரயில்வே துறை

பல்லாயிரம் கோடிகளையும். 
அதுவே விழுங்கிவிடுகிறது

கோடிக்கணக்கான மக்கள் தினமும் 
புழங்கும் ரயில்வே நிலையங்களின் நிலை 
மிகவும் அசிங்கமானது.

மாதிரிக்கு ஒரு இந்திய ரயில்வே ஸ்டேஷன் பாரீர். 
அனைத்து சமூக விரோதிகளுக்கும் 
வீடில்லா இந்திய குடிமக்களுக்கும் அதுதான் புகலிடம்

அங்கு வந்து போகும் கோடிக்கணக்கான மற்றும் 
அங்கேயே தங்கியுள்ள அனைவருக்கும் அதுதான் 
சிறுநீர் கழித்து, மல ஜலங்கலால் தூய்மை படுத்தி
நறுமணம் வீசும் தென்றல் பூங்கா 


அரசுகள் எத்தனை கொடிகள் செலவழித்தாலும் 
அத்தனை வசதிகளையும் அமைத்த 
ஓரிரு நாட்களிலேயே  செயலிழக்க செய்யும் 
பொறுப்பற்ற, சுகாதார உணர்ச்சியற்ற
மக்கள் கூட்டம். 

லட்சக்கணக்கில் செலவு செய்து 
அமைத்த வசதிகளை பராமரிக்க 
சில ஆயிரங்களை கூட செலவு செய்ய 
மறுக்கும் அக்கறையற்ற 
அரசு நிர்வாகங்கள். 


ஒரு மேலை நாட்டு
ரயில்வே ஸ்டேஷன் படம் பாரீர். 


எல்லாவற்றிற்கும் மேலை நாடுகளை காப்பியடிக்கும் 
இந்த ஜன்மங்கள் முக்கியமான இந்த விஷயத்தில்
 மட்டும் பாராமுகமாக இருப்பதேன்?   


2 கருத்துகள்: