புதன், 20 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (5)


திருக்குறள் -என் பார்வையில் (5)


திருக்குறள் -என் பார்வையில் (5)

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

நல்வினை என்றும் தீவினை என்றும்
பாவம் என்றும் புண்ணியம் என்றும் 
நம்முடைய அகந்தையினால்
நாமே உண்டாக்கிகொண்ட 
இரண்டும் இறைவனை சாராது. 

ஆனால் அதனால் ஏற்பட்ட 
விளைவுகளுக்கு 
நாம்தான் பொறுப்பு. 

அந்த விளைவுகளின் 
பயன்களை, 
பலன்களை நாம் 
அனுபவித்துதான் 
தீர்க்கவேண்டும் 
என்பது இந்த பூவுலகத்தில் 
பிறந்த அனைவருக்கும் 
பொதுவான விதி.

வினைகள் தானாகவே 
பலன்களை தர இயலாது. 

ஆனால் அந்த வினைகளின் 
விளைவுகளை உயிர்கள் 
அனுபவிக்க செய்து 
உயிர் திருந்தி அன்பு வாழ்க்கை 
வாழ செய்து 
முடிவில் எந்த மூல பொருளிலிருந்து 
உயிர்கள் வந்தனவோ அதில் மீண்டும்
சென்று கலக்க இறைவன் 
நமக்கு பலபிறவிகளை
தந்து அருளுகிறான் 

எனவே இருவினைகளும்
நம்மை இருளில் ஆழ்த்தி வைத்து 
நம்மை மீண்டும் பிறப்பிறப்பு 
சுழலில் நம்மை தள்ளி விடுகின்றன. 

வாழ்நாள் முழுவதும் 
பொருளை சேர்ப்பவர் 
மனம் இருள் சூழ்ந்துவிடுகிறது

அதனால்தான் கண்ணதாசன் ஒரு பாடலில்
"மடி நிறைய பொருள் இருக்கும் 
மனம் முழுதும் இருள் இருக்கும்" 
என்று எழுதினர் 

அதைபோல் பிறர் நம்மை 
புகழ வேண்டும் என்று 
புகழை நாடுவோர் மனமும் 
இருள் சூழ்ந்துவிடுகிறது. 

ஒருவர் புகழின் உச்சிக்கு செல்லும்போது
 பணிவு அவரிடமிருந்து விடை பெற்று கொள்ளுகிறது. 
அந்த இடத்தில்  அகந்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகிறது. 
இந்த குணமே அவர்களின் வீழ்ச்சிக்கு 
காரணமா அமைந்து விடுவதும் உண்டு. 

இந்த இரண்டிலும் பாதிக்கப்பட்டோர் 
அதிலிருந்து விடுபடவேண்டுமானால் 
இந்த இரண்டினாலும் பாதிக்கப்பாடாத
 இறைவனை சேரவேண்டும் .

அப்படி சேர்ந்தால் அவர்களின் 
மன இருள் நீங்கிவிடும் 
அந்த இடத்தில் 
இறைஅருள் நிரம்பி விடும். 

இந்த இரண்டினாலும் பாதிக்கப்படாது 
அனைத்திற்கும் அப்பாற்பட்டு
விளங்கும் இறைவனை 
ஒருவர் அடைந்தபிறகு 
அவர்கள் எந்தவிதமான 
மயக்கத்திற்கும் 
ஆட்படமாட்டார்கள். 

2 கருத்துகள்: