திங்கள், 25 மார்ச், 2013

திருக்குறள் -என் பார்வையில் (10)


திருக்குறள் -என் பார்வையில் (10)



திருக்குறள் -என் பார்வையில் (10)



குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை சேராதார்
பிறவியாகிய பெருங்கடலை நீந்தி கடக்க இயலாது
என்பது பொதுவான பொருள்.

 பிறவியை ஏன் பெருங்கடல்
என்று அழைக்கிறோம்?

அதை எதற்க்காக
நீந்தி கடக்கவேண்டும்?

ஏன் படகில்,கப்பலில் கடக்கக்கூடாது?

நீந்தித்தான் கடக்ககூடுமோ?

நீந்தி கடந்தால் எங்கு செல்வோம்?

அங்கு சென்றால் என்ன பயன்?

நீந்தி செல்லாமல் தற்போது
இருக்கின்ற இடத்திலேயே இருக்கலாமே?

இறைவன் கொடுத்துள்ள  அறிவைக்கொண்டு
துன்பம் வராமல் காத்துக்கொண்டு
இன்பமாக இங்கேயே இருந்துவிடலாமே ?

அங்கு இங்கு என்று எனாதபடி எல்லா
இடத்திலும் பரந்து கிடக்கின்ற இறைவனுக்கு
தனியாக உருவம் ஏது?

உருவம் இல்லாத ஒன்றிற்கு
திருவடிகள் எப்படி இருக்கும்?

இல்லாத ஒன்றை எப்படி சேருவது?

அடி முடி காண இயலாதவன் எம்பெருமான்
என்று சொல்கிறார்களே அப்படிப்பட்ட
இறைவனை எப்படி சேருவது?


இறைவன் எல்லா உயிருக்குள்ளும்
இருக்கின்றான் என்று சொல்கிறார்கள்.
அப்படி இருக்க அங்கேயே அவனை
ஏன் சென்று சேர முடியாது?

எதற்காக அவனை எங்கோ
கடல் கடந்து இருப்பதாக எண்ணிக்கொண்டு
அவனை தேட வேண்டும்?


சிந்திப்பவர்களுக்கு மட்டும் ஏன்
எவ்வாறு என்றெல்லாம்
கேள்விகள் எழவேண்டும்?

ஆனால் யாருக்கும் எழுவதில்லை.

அப்படியே குறளையும்,
அதற்கு எழுதப்பட்ட
உரைகளையும் ஆண்டாண்டு காலமாக
படித்துவிட்டு அவரவர் வேலையை
பார்த்துக்கொண்டு போய்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் இவ்வுலகில் பிறந்து
அடுத்த பிறவியிலும் இந்ததிருக்குறளை
படித்துவிட்டு போய்கொண்டிருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில்
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

2 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கை, மன உறுதி - இவைகள் கூட ஆணவத்தின் ஒரு பகுதி...

    தான்... எனது... இவ்விரண்டு இருக்கும் வரை பிறக்கத்தான் வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகப்பற்றாகிய நான் என்னும் அகந்தையையும்
      புறப்பற்றாகிய எனது என்று உடல் மீதும் உடைமைகள் மீதும் பற்றுக்களை விட்டவர்களைதான் பிறப்பு என்னும் பற்று விடும்.

      தத்துவங்களை உதட்டளவில்
      பேசுபவரே இந்த உலகில் உள்ளனர்.

      யாரும் தத்துவங்களை
      நடைமுறையில் கொண்டு வருவதில்லை


      அதனால்தான் பாரதி காலத்தில்
      நம் நாட்டின் மக்கள்தொகை 30 கோடி இருந்தது
      இன்று 120 கோடியை தாண்டி விட்டது.

      உலக மக்கள்தொகையும்
      பன் மடங்கு அதிகரித்துவிட்டது

      நீக்கு