சனி, 30 மார்ச், 2013

உங்களுக்கு தெரியுமா?(பகுதி-1)



உங்களுக்கு தெரியுமா?(பகுதி-1)

1.சாக்லேட் நாய்களுக்கு எமன் .
ஆம். அது அதன் இதயத்தை
மற்றும் நரம்புகளை
செயலிழக்க செய்து கொன்றுவிடும்.

2.உலக புகழ் பெற்ற பல்கலை
வித்தகர் லியனானார்டோ வின்சி
ஒரு கையால் எழுதுவார்
மற்றொரு கையால் படமும் வரைவார்.

3.இரண்டாம் உலக போரின் போது
 உலோகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால்
ஆஸ்கார் விருதுகள் மரத்தால்
செய்யப்பட்டு வழங்கப்பட்டன

4.நாம் எல்லோரும் தினமும்
பயன்படுத்து ம் கத்திரிக்கோலை
கண்டுபிடித்தவர்
லியனானார்டோ வின்சி

5.கொசு விரட்டிகள் உண்மையில்
கொசுக்களை விரட்டுவதுமில்லை
அவைகளை மிரட்டுவதுமில்லை.
அதன் உணர்வு நரம்புகளை தற்காலிகமாக
முடக்குவதால் நீங்கள் அதன் எதிரில் இருப்பது
அதற்க்கு தெரியவில்லை.
அவ்வளவுதான்

அதன் நெடி குறைந்ததும்
கொசு உங்களை நன்றாக
சேர்த்து வைத்து உங்கள் ரத்தத்தை
உறிஞ்சி கொழுத்துவிடும்.
மேலும் ஆயிரக்ககணக்கான
முட்டைகளையும் இட்டுவிடும். .

அதனால்தான் கொசு விரட்டிகள்
தயாரிப்பாளர்கள் கோடிகணக்கில்
நம்மிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்.

6.முதலையிடம் மாட்டிகொண்டால்
தப்புவதற்கு மிக சுலபமான வழி
அதன் கண்களை விரலால்
குத்துவதுதான்.
உடனே அது நம்மை விட்டுவிடும்.

7.குளிர் சாதன பெட்டியில்
 ரப்பர் பாண்டுகளை போட்டு
வைத்தால் நெடுநாள்
கெடாமல் இருக்கும்.

8.பாசை பூச்சி தலையில்லாமல்
10 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்

9. நம்முடைய உடலில் இருந்து
இறந்த செல்கள் 40 பவுண்டுகள்
அளவிற்கு நம் வாழ் நாளில்
உதிருகின்றன.

10. சூரிய ஒளியில் பார்த்தால்
 நம்மை சுற்றியும் தூசி மண்டலம்
இருப்பதை நன்றாக பார்க்கலாம்.
அதில் பெரும்பகுதி மனிதர்கள்
மற்றும்,விலங்குகளின்
உடல்களிலிருந்து விழும்
இறந்த செல்களில் துகள்களே.

11. கட்டை விரல் நகம்
மிக மெதுவாக வளருகிறது.
ஆனால் நாடு விரல் நகம்
வேகமாக வளரும்.

12.ஒரு நாலுவயது  குழந்தை
ஒரு நாளில் 400 கேள்விகளை கேட்கும்.

நாம்தான்அதன் கேள்விகள்
எதற்கும் பதிலே சொல்வதில்லை.
அதனால் அது நம்மை பார்த்து
எல்லாவற்றையும்  கற்றுக்கொள்கிறது.

13.புத்திசாலிகளில்  தலை முடியில்
துத்தநாகமும் செம்பும்
அதிக  அளவில் இருக்கும்

14.டெலிபோனை கண்டுபிடித்த
அலெக்சாண்டர் க்ரஹாம்பெல்
தன் மனைவிக்கோ அல்லது தாய்க்கோ
 போனே செய்ததில்லை
ஏன் தெரியுமா?
இருவருக்கும் காது கேட்காது. .


வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழ் நாட்டு மக்களின் லட்சணம்


தமிழ் நாட்டு மக்களின் லட்சணம் 



அமரிக்கன் டூரிஸ்ட் :உங்க தமிழ் நாட்டு 
அரசியல் தலைவர்களை 
நினைச்சா எங்களுக்கு
ரொம்ப பெருமையா இருக்குது மேன் .

முனியன் : அப்படி என்ன தொரை , 
பெரிசா கண்டுட்டே

டூரிஸ்ட்: பின்ன என்ன அவங்க 
எல்லாத்தையும் உங்களுக்கு இலவசமா தராங்க :

முனியன்அதெல்லாம் ஒன்னும் சும்மா 
அவங்க துட்டுலிருந்து ஒன்னும் தரலை 
.
டூரிஸ்ட் பின்ன எதுலேந்து தராங்க ?

முனியன் : எல்லாம் அரசாங்க துட்டுதான்டூரிஸ்ட் :

டூரிஸ்ட் அப்படி இலவசமா நிதி தரத்துக்கு
 நீங்கஎன்னதான் பண்ணீங்கa?

முனியன் :அதுவா . நாங்க கட்சிக்காக 
கோடி கணக்கில் 
நிதிவசூல் பண்ணி கொடுப்போம் .
கூட்டம் சேர்ப்போம் 
அவங்கலைகோடீஸ்வரர்கள் ஆக்க
வோட்டு போட்டு தேர்தலில் 
ஜெயிக்க வைப்போம்டூரிஸ்ட் :

டூரிஸ்ட்: அப்புறம் ?

முனியன் : அவங்க பஸ்ஸை கொளுத்த
 சொன்னா கொளுத்துவோம் ,
இல்லை ஆளுங்களோட கொளுத்துன்னுனாலும் 
நாங்க அதை செய்வோம் .
எதை வேணாலும் உடைப்போம் ,
யாரை வேணுன்னாலும் அடிப்போம்

டூரிஸ்ட் : அப் ப நீங்க ஒன்னும் 
வேலையே செய்ய மாட்டீங்களா ?
உழைத்து சம்பாதிக்க மாட்டீங்களா?
அரசுக்கு வரிகிரி கட்ட மாட்டீங்களா?

முனியன் :வரி கிரி ஏதும் கட்ட ????
அதெல்லாம் படிச்ச முட்டா பசங்க பண்றது. 
அரசு கொடுத்த ஓசி டீவியில் 
ஜாலியா சினிமா படம்,
சீரியல் பார்ப்போம் .

டூரிஸ்ட் :அவ்வளவுதானா??.

முனியன் :நான் மேலே சொன்ன வேலையெல்லாம் 
உனக்கு வேலையாக தெரியவில்லையா?
ஏதோ நீ கேட்டேன்னு கொஞ்சம் 
மேட்டரை அவுத்து வுட்டேன்

டூரிஸ்ட் .கோபிசிக்கா,மேலே சொல்லுமுனியன்:

முனியன் :நாங்க சம்பாதிக்கிற 
அல்லா துட்டையும் அரசுக்கே கொடுத்துடுவோம் 
.
டூரிஸ்ட்: .எப்படி?

முனியன் :அரசாங்கம் தொறந்து வைத்திருக்கிற 
சாராய கடையில் விற்கிற மொத்த சாராயத்தையும்
 நாங்களே துட்டு கொடுத்து வாங்கி 
குடித்து வயிற்றை ரொப்பிக்குவோம் 

டூரிஸ்ட் :பொண்டாட்டி 
பில்லைங்கே என்ன பண்ணும்?

முனியன் : அந்த கவலையே எங்களுக்கு கிடையாது 
.பொறந்துலேந்து போற வரைக்கும் 
அல்லாத்தையும் அரசாங்கம் பாத்துக்கும். 
அது பூ கூ பழம் காய்கறின்னு 
வியாபாரம்பண்ணி , 
வயத்தை கழுவிக்கும் 
.
டூரிஸ்ட் ; எங்க எங்க நாட்டிலே 
இது,போல சலுகைகள் எதுவும் கிடையாது

முனியன்: இதை தவிர தேர்தல் நேரத்திலே
 இலவச வேஷ்டி, சேலை, காந்தி நோட்டு,
 பட்டை சாராயம், மூக்குத்தி,
 பிரியாணி பொட்டலம் 
அது இதூன்னு அல்லாம் கிடைக்கும்

முனியன் : அப்ப  நீஎங்க நாட்டிலேயே தங்கிடு . 
நம்ப கட்சியிலே அடிப்படை உறுப்பினராயிடு 
தலைவர் வர போற போது தமிழ் வாழ்க 
தானைத்தலைவன் வாழ்க , என்று உரக்க
அப்போது கூச்சல் போட்டா போதும்.

எங்க கூட கொடி கட்ட
போஸ்டர் ஓட்ட கூடமாட உதவி செய். . 
மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன் 

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்ட்
இலவச மனைபட்டா எல்லாம் நான் வாங்கித்தரேன் ,

பொரம்போக்கிலே ரெண்டு பிளாட் மடக்கி போட்டு 
ஒரு கொடியை நட்டு வைத்தால் போதும்.
கொஞ்சம் வருஷம் கழித்து நல்ல விலைக்கு
 தள்ளிவிட்டு லட்சாதி,பதியாகிவிடலாம். 

பிறகு தேர்தலில் நின்று கோடிக்கணக்கில் 
சம்பாதிக்கலாம்.

 நீ மட்டும் அப்பப்ப நீ பேசற இங்கிலீஷ் கூட 
ரெண்டு தமிழ் வார்த்தைகளை 
உட்டுகிநிருந்தா இருந்தா போதும்.

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)



கவி சக்கரவர்த்தி 

கம்பன் கண்ட கனவு (பகுதி-4)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-4)







தமிழ் தாய்க்கு 
திருக்கோயில் அமைத்தல். 

1940 ஆம் ஆண்டு திரு.சா.கணேசன் அவர்கள் 
வைத்தியநாத ஸ்தபதி என்னும் சிற்பியை 
அழைத்து தமிழ் தாய்க்கு 
ஒரு சிலை அமைக்க செய்தார். 

ஏனென்றால்அவர்  
தமிழை தெய்வமாக கருதினார். 


அந்த சிலை எப்படி அமைந்தது என்றால்
 தமிழ் இந்த உலகம் முழுவதும் பரவியிருந்ததை 
குறிக்கும் வகையில் தமிழ்த்தாய் 
இந்த உலகத்தின் மீது அமர்ந்திருப்பது போலவும் 
ஒரு கரத்தில் பனைஓலை சுவடிகள் ,
ஒரு கரத்தில் ஜப மாலை 
ஒருகரத்தில்ஞானத்தை குறிக்கும் வடிவாக 
ஜோதி சுடரும் மற்றும் செங்கோட்டு யாழ் 
என்னும் இசைக்கருவியும் 
தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளவாறு 
திருமைய்யம் கோயிலில் 
உள்ள சிலையை ஆதாரமாக 
கொண்டு. வடிவமைக்கப்பட்டது. 



கவி சக்ரவர்த்திக்கு
மணி மண்டபம் அமைத்தல் 

திரு கணேசனின் மணி விழாவிற்கு 
அவருடைய நண்பர்கள் 
ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பாக அளித்தார்கள் 

என்னே அவர் கம்பன் மீது கொண்ட பற்று. !

அவர் அந்த தொகை முழுவதையும் 
கவி சக்ரவர்த்திக்கு மணி மண்டபம் 
கட்டுவதற்கு அளித்துவிட்டார்

1972 ஆம் ஆண்டு மண்டபம் நிறைவுற்றது 
அவரை பாராட்டி நீதியரசர் மகாராஜன் 
திரு கணேசனுக்கு 'கம்பன் அடிப்பொடி' 
என்ற பட்டதை அளித்து கௌரவித்தார் .

தமிழ் தாய்க்கு ஒரு ஆலயம் 
அமைக்க நினைத்த திரு கணேசன் 
அந்த பணி முடியுமுன்னே 
இப்பூவுலக வாழ்வை நீத்தார் 

அவர் மறைவிற்கு பின் காரைக்குடியில் 
கம்பன் விழா பணிகள் அவரின் 
மாணவனான கம்பன் அடிசூடி
 பால பழனியப்பன் பொறுப்பில் விடப்பட்டது. 

அவர் அந்த பணிகளை செவ்வனே நடத்தி வந்தார்.
பின்னாளில் அவர் சென்னை 
கம்பன் கழகத்தின் செயலாளராக 
பொறுப்பேற்றுகொண்டார். 









ஆங்கில மூலம் 

The Kamban dream

In 1940, Ganesan asked Vaidyanatha stapathi to make a panchaloha idol of Tamizh Thai, Tamizh represented as a Goddess. Tamizh Thai is seen seated on a globe to indicate the geographical spread of Tamizh. She holds in her hands palm leaf manuscripts, a japa mala, the torch of knowledge and a Sengottu yazh, described in Tamil literature and a sculptural representation of which is seen in the Tirumeyyam temple


Ganesan’s friends presented him with a purse for Rs. one lakh on his 60 birthday, and he used the money for a Kamban Mani Mandapam, the construction of which was completed in 1972. Praising Ganesan’s dedication to Kamban, Justice Maharajan gave him the title ‘Kamban Adippodi.’ Ganesan conceived of a temple for Tamizh Thai, but passed away before the project was completed. Upon his death, the mantle fell on Kamban Adisoodi Pala Palaniappan, who, as a school student, came under the tutelage of Ganesan, and helped draw up programmes for the Karaikudi Kamban Vizha. Later, Palaniappan became the secretary of the Chennai Kamban Kazhagam.




SUG.ANTHY KRISHNAMACHARI

இந்த நிலை என்று மாறுமோ?


இந்த நிலை என்று மாறுமோ?


பள்ளி செல்லும் குழந்தைகள் படும் பாடு 
நம் நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்
















இந்தோநேஷியாவிலும் இதே கதிதான் போலும். 



















குழந்தைகள் மீது 
அளவு கடந்த
பாசம் வைத்திருக்கிறார்கள் 
பெற்றவர்கள். 

குழந்தை இல்லாதவர்களை மலடி 
என்று மனம் நோக வாய்க்கு வாய்  
 பேசி இன்பம் காணும் சுற்றமும் உற்றமும். 

குழந்தை பெறுவதற்கு ஊர் ஊராய் 
கோயில் கோயிலாய் சுற்றி 
பல ஆயிரங்களை தொலைக்கும் பெற்றோர்

ஒரு குழந்தை பெறுவதற்கு 
பல லகரங்கள் வரை செலவழிக்கும் 
குழந்தையில்லா தம்பதியினர்.

அதற்கும் வழியில்லாவிட்டால் 
குழந்தைகளை தத்து எடுப்பது 
 வேறு நடக்கும்.  

இப்படி பிறந்து விட்ட 
இந்த குழந்தைகள் 
இந்த உலகில் படும் பாடு 
சொல்ல தரமன்று. 

ஒரு  பானை சோற்றுக்கு 
ஒரு சோறு பதம் போல்தான்
 இவர்களின் பள்ளி செல்லும் பருவம். 


ஆனால் அவர்களை
பள்ளிக்கும் 
அனுப்பும்போதுமட்டும் 
அந்த பாசம் 
எங்கே போய்விடுகிறது 
என்று தெரியவில்லை. 

இவ்வளவு ஆபத்தான 
சூழ்நிலைகளை சந்திக்க
குழந்தைகளை 
விட்டுவிடுகிறார்கள். 

அரசும் இந்த அவலத்தை
கண்டு கொள்வதில்லை. 
என்ன உலகமோ?

பள்ளி நிர்வாகங்களும் 
கண்டுகொள்வதில்லை 

இந்த நிலை என்று மாறுமோ?

வியாழன், 28 மார்ச், 2013

கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)


கவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)


கவி சக்கரவர்த்தி 
கம்பன் கண்ட கனவு (பகுதி-3)







கம்பன் விழா காணும் 
இடத்தை தேர்ந்தெடுத்தல்  

பல்வகை சிறப்புகள் பெற்ற 
தெய்வீக திருமணங்கள் நிகழும்
பங்குனி மாதத்தில்தான் 
கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு 
விழா எடுக்கப்பட்டது 

தமிழை கரைத்து குடித்த
தமிழறிஞர்களால் காரைக்குடியில் 
கம்பன் விழாதொடங்கி 

நாட்டரசன்கோட்டையில் 
ஹஸ்த நட்சத்திரத்தில்தான் 
முடிவடையும். 

சா.கணேசன் அவர்கள் 
இந்த நட்சத்திரத்தினை 
தேர்ந்தெடுத்தமைக்கு 
ஒரு காரணம் உண்டு. 

ஏனென்றால் கம்பராமாயணத்தை இந்த 
நட்சத்திரத்தில்தான் 
கம்பர் எழுத தொடங்கினாராம். 

மேலும் நாட்டரசன்கோட்டையில் 
விழா முடிவு நிகழ்ச்சியை 
நடத்த ஒரு காரணமும் உண்டு. 

ஏனென்றால் கம்பன் இவ்வுலக வாழ்வை 
நீத்து இறைவனோடு கலந்துவிட்ட பூமி 
என்பதே அது. 

சா. கணேசன் அவர்கள்  
நாட்டரசன்கோட்டைக்கு 
நேரில் சென்று அங்கு வினவ 
அப்போதுதான் தெரிந்தது 
அங்கு மக்கள் ஒரு இடத்தில்
வழிபாடு செய்வதை  கண்டார்.
அந்த இடத்தை பற்றி கேட்டதர்க்கு 
அது கம்பன் சமாதி என்று
ஊர் மக்கள் தெரிவித்தனர் 

அவ்வூர் மக்கள் அந்த சமாதியின் 
மண்ணை எடுத்து பள்ளி செல்லும் 
குழந்தைகளின் நாவில்தடவுவதை  கண்டார். 

கம்பனை போல் தங்கள் குழந்தைகளும்
கல்வியில் சிறந்து விளங்க  வேண்டும் 
என்ற அவர்களின் நம்பிக்கையை
பார்த்து மனம் நெகிழ்ந்து போனார் 
திரு கணேசன் 

இதை பார்த்ததும் அவர் தெரிந்துகொண்டார்  
இந்த இடந்தான் கம்பன் 
சமாதி கொண்ட இடம் என்று 

மேலும் கம்பன் விழாவின் 
நிறைவு நிகழ்ச்சியை நாட்டரசன்கோட்டையில்
நடத்த வேண்டும் என்றும் 
அன்றே தீர்மானித்தார். . 



ஆங்கில மூலம் 

The Kamban dream

SUGANTHY KRISHNAMACHARI

The Kamban Vizha is held in Karaikudi in the Tamil month of Panguni, and concludes in Nattarasankottai, in the star Hastham. Ganesan had a reason for choosing Hastham. There is a verse that says that Kamban inaugurated his work on Panguni Hastham. There is yet another verse that says Kamban died in Nattarasankottai. Ganesan visited Nattarasankottai, and found that the villagers there worshipped at a certain place, which they called Kamban Samadhi. Ganesan saw them taking mud from a pit near a rough hewn stone, beneath which Kamban was believed to have been buried, and applying this mud on the tongues of their school going children, in the belief that Kamban would bless their academic endeavours. Ganesan came to the conclusion that this must be Kamban’s burial place and so he decided to organise the last day of the celebrations at Nattarasankottai.

மரண தண்டனை தேவையா?


மரண தண்டனை தேவையா?





இன்று அறிவு ஜீவிகள்
என அழைத்துக்கொள்ளப்படும் ஒரு சாரார்
உலகெங்கிலும். மரண தண்டனை அறவே
ஒழிக்கப்படவேண்டும் என்று
கூக்குரல் எழுப்பி வருகிறார்கள்.

அவர்கள் கோரிக்கை சரியா அல்லது
ஏற்றுக்கொள்ளக்கூடாத கோரிக்கையா
என்பதை பற்றி பிறகு ஆராய்வோம்

ஆனால் இன்று அவர்கள்
மரண தண்டனைக்கு எதிராக
எழுப்பும் சம்பவங்கள்தான்
சர்சைக்கு உடையதாக இருக்கிறது.

ஜடமாக செயலற்று காய்ந்த மரம்
போல பிணமாக இருக்கும் 
ஒரு மனிதனுக்கோ அல்லது  
விலங்குகளுக்கோ உயிரை கொடுத்து 
இயங்கசெய்பவன் இறைவன். 

அதுபோல கொடுப்பவனுக்குத்தான் 
அதை எடுக்கும் உரிமையும் உள்ளது. 

ஆனால் அந்த உரிமையை பிறந்த கணத்திலிருந்து 
எந்த நேரத்திலும் மடிந்து போகக்கூடிய  நிலையில்
 உள்ள மனிதர்கள் அந்த உரிமையை 
தாங்களாகவே எடுத்துக்கொண்டதுடன் 
அதற்காக சட்டங்களை இயற்றி. 
அதன் துணை கொண்டு மற்றவர்களை 
அடிமைபடுத்தவும்,தங்கள் 
அடாத செயல்களுக்கு துணைபோகாதவர்களை,
 சிறையில் தள்ளி கொடுமைப்படுத்துவதும்  
அவர்களை கொன்று குவிப்பதும்
 பல்லாயிரம் ஆண்டுகளாக 
இன்றைய உலகெங்கும்.
 நடைபெறும் வாடிக்கையான செயல்கள். 

ஒரு கொலை நடந்தால் 
அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற 
கொலைகள் நடக்கின்றன. 

அதுவே ஒரு நாட்டோடு 
தொடர்புபடுத்தப்பட்டால் 
போர் ஏற்பட்டு பல்லாயிரம், 
என் லட்சக்கணக்கான
அப்பாவி மக்கள் 
படுகொலை செய்யப்படுகிறார்கள் 

இந்த படுகொலைகள்.
இது உலகம் தோன்றிய நாள்
முதற்கொண்டு நடைபெற்றுவருகிறது.

ஆனால் இந்த கேடு கேட்ட உலகம் 
லட்சக்கணக்கில் மாண்டவர்களை 
பற்றி. கவலைபடுவதில்லை. 

ஆனால் விளம்பரப்படுத்தப்பட்ட 
ஒருநபரின் குற்றத்தினை தீர பல ஆண்டுகள் 
நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு. 
மரண தண்டனை வழங்கபட்டால் மட்டுமே
முக்கியத்துவம் பெறுகிறது. 
மற்ற மரணங்கள் கால வெள்ளத்தில்
கரைந்து போகின்றன. 

வெறும் விளம்பரதிற்க்காக 
கோரிக்கைகள் வைக்கும் 
இவர்களின் நோக்கம்
 உண்மையானதுதானா 
என்றே சந்தேகம் எழுகிறது?

இன்னும் வரும்

Pic.coutesy-googleimages.

கடமையை செய் பலனை எதிர்பாராதே(பகுதி-2)


கடமையை செய்
பலனை எதிர்பாராதே(பகுதி-2)

கடமையை செய்
பலனை எதிர்பாராதே





சொல்வதற்கு எளிது.
ஆனால் நடைமுறையில்
அது சாத்தியப்படுவதில்லை.

இந்த உலகில் படிப்பதற்கு 
என்று சில நூல்கள் உண்டு.

தகவ்லுக்காகவோ அல்லது 
நேரத்தை வீணடிப்பதற்க்காகவோ
படித்துவிட்டு தூக்கி எறியப்படும் 
நூல்கள் எண்ணற்றவை. 

சில நூல்களை
தினமும் படிக்கவேண்டும். 

படிப்பதுமட்டுமல்லாது 
அதில் கூறப்பட்டுள்ள 
நல்ல கருத்துக்களை மனதில் 
பதியவைத்துக்கொண்டு,
வாழ்வில் நடைமுறைபடுத்தவேண்டும். 

இல்லாவிடில் அதுபோன்ற நூல்களை
இயக்க தொடங்கியவுடன்  ஒலிக்கும் taperecorder 
போல் சொல்லிவிட்டு மற்ற வேலைகளை
கவனிக்க போவதால் என்ன பயன்?

பல்லாயிரம் தடவை  taperecorder 
ஒலித்தாலும் அதனால் 
அதற்க்கு என்ன பயன்?

அதே நிலைமைதான் ஈடுபாடு 
இல்லாமல் செய்யப்படும் 
எந்த செயலும்.

இன்று எல்லோரும் 
அதைதான் செய்துகொண்டிருக்கிறார்கள்?

இன்று பகவத் கீதையை 
முழுவதுமாக தினமும் 
பாராயணம்  செய்கிறார்கள் பலர்

இன்னும் பலர் அதை அக்கு வேறாக 
ஆணி வேறாக புட்டு புட்டு ஆராய்ச்சி
 செய்து வியாக்கியானம் செய்து 
காசு சம்பாதித்து வயிற்ரை நிரப்புகிறார்கள். 

நாட்டில் உள்ள பல இரைச்சல்களோடு 
இவர்களின் இரைச்சல்களும்
சேர்ந்து கொண்டு 
ஆகாசத்தினை நிரப்பிகொண்டிருக்கின்றன. .

சிலர் செய்யும் பூஜைகளும், 
புனஸ்காரங்களும், 
விரதங்களும் அப்படியே.

எந்த நோக்கத்திற்காக அதை 
மேற்கொள்ளுகிரார்களோ 
அந்த நோக்கம் இறுதிவரை
 நிறைவேருவதேல்லை

ஏனென்றால் அவர்களிடம் 
பொறுமையில்லை, 
முழு நம்பிக்கை இல்லை. 

அதிலும் அவர்கள் செய்வதை 
பிறரிடம்தம்பட்டம் 
அடித்துக்கொள்ளுவதர்க்காகதான் 
அது பயன்படுகிறது.  
பலர் வெளி வேஷத்திற்காக 
இப்படி செய்கிறார்கள்.

அதனால்தான் ஆன்மீகத்தில் 
எந்தவிதமான் ஒரு முன்னேற்றமும் 
இல்லாமல் இந்த மனித இனம் 
பெரும் துன்பத்திற்குள்ளாகி 
இந்த உலகம் போட்டியும் 
பொறாமையும் நிறைந்து 
போர்க்களமாக 
காட்சியளிக்கிறது.

ஒவ்வொரு. மனிதன் மனதில் 
போட்டியும் பொறாமையும் 
இல்லாமல் இருந்தால்தான். 
இந்த உலகம் அமைதியாக இருக்கும். 

அதை விடுத்து வெளி உலகில் 
அதற்க்கான மேற்கொள்ளப்படும்
 எந்த முயற்சியும் தோல்வியில்தான்
 முடியும் என்பது கண்கூடு. .

Pic.courtesy-googleimages.