சனி, 18 ஆகஸ்ட், 2012

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றான் பாரதி

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத  நாடு என்றான் பாரதி

இன்று பாரததிற்க்குள்ளே  நல்ல மாநிலம் தமிழ் நாடு 

காஷ்மீரில் காஷ்மீர் மக்களை தவிர நிலம் வாங்கமுடியாது ஆனால் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து நிலம் வாங்கி போடலாம் .

மற்ற மாநிலங்களுக்கு சென்று தமிழன் குப்பை கொட்ட முடியாது 
ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம் தொழில் தொடங்கலாம், பேராசை பிடித்த தமிழர்களை தள்ளுபடி இலவசம் என்று ஏதாவது சொல்லி ஏமாற்றி கொழுக்கலாம். 

தண்ணீர் தர மறுக்கும் கேரளா அரசியல்வாதிகள் ,காவிரி நீரை விட மறுக்கும் கர்நாடக அரசியல் வெறியர்கள் இதை பற்றியெல்லாம் சராசரி தமிழனுக்கு அக்கறை கிடையாது.
கோடிகோடியாய் கொட்டும் திரைப்பட துறையை மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும்,தெலுங்கர்களுக்கும்  வடநாட்டவர்களுக்கும்,ஏன் வெளிநாட்டவர்களுக்கும் பட்டா போட்டு கொடுத்து விட்டான் .இவன் சம்பாதித்த காசை அவர்களுக்கும் டாஸ்மாக் கடைக்கும் மொய்  எழுதி மகிழும் பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்?

இங்கு கூலி வேலை செய்பவர்களும் பிழைக்கலாம் .கூலிக்கு ஆட்களை கொல்லும்  கூலி படையினரும் பிழைக்கலாம் 

பெண்கள் தங்க நகை சீட்டு கட்டி வாங்கி வீட்டில் வைத்த நகைகளை சீடிங் பண்ணி அபேஸ் செய்யும் திருடர்களும் இங்கு வசதியாக வாழலாம் 

காவி வேட்டி கட்டி விட்டு குறி சொல்ல தெரிந்தால் போதும் கத்தை கத்தையாக  பணத்தை கொண்டு கொட்டுவார்கள் தமிழக பக்தர்கள் 

உண்டியலுக்கு மஞ்சள் துணி சுற்றி குங்கும பொட்டு வைத்து வேப்பிலையை சொருகி  வைத்து உண்டி குலுக்கினால் ஏன் எதற்கு என்று கேட்காமல் பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார்கள் தமிழக பக்தர்கள் 

வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு  சூடம் காட்டி இங்கு சுயம்பு இருக்கிறது என்றால் போதும் மக்கள் வெள்ளம் காணிக்கையை கொண்டு கொட்டி விடும் கோயில் கட்ட

யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கலாம் .அவன் தமிழனாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த பாச்சா மற்ற மாநிலங்களில் நடக்காது 

தமிழன் காட்டுமிராண்டி,தமிழர்கள் மொழி காட்டுமிராண்டி பாஷை என்றாலும் கோபமே வராது அதையும் ரசிப்பார்கள் ஏனென்றால் இன்று உண்மை தமிழன் என்று எவனும் கிடையாது. எல்லாம் கலப்படம் அதனால்தான் தமிழ்நாட்டின் மக்கள்தொகை எட்டு கோடி என்று மார் தட்டினாலும் எந்த பிரச்சினைக்கும் எந்த கட்சிகளும் ஒன்று சேர்வதில்லை  



1 கருத்து: