சனி, 18 ஆகஸ்ட், 2012

நம் நாடு உருப்படுமா

நம் நாடு உருப்படுமா?

நம் நாடு வல்லரசாகுமா?

ஒருவர் கனவு காண சொல்கிறார்

எல் கே ஜி மாணவன் முதல் கல்லூரி மாணவன் வரை
தங்கள் காதலியை பற்றிதான் கனவு காண செய்திருக்கிறது
திரைப்பட நடிகர்களும் நடிகைகளும்   

அரசியலில் இருப்பவர்கள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து கொண்டு புதிது புதிதாக ஊழல்களை  எவ்வாறு அரங்கேற்றி கொழுப்பது என்று கனவு காண்கின்றனர் 

பேராசைப்பட்டு கையில் இருக்கும் காசை அயோக்கியர்களிடம் கொடுத்துவிட்டு சில காலம் அவன் போடும் பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு முதல் முழுவதும் இழந்து ஐயோ ஐயோ என்று முறையிடும் முட்டாள்கள் நிறைந்த நம் நாடா வல்லரசாகும் ? 

நாம் எதற்கு வல்லரசாகவேண்டும்?

நமக்குதான் நாடு பிடிக்கும் ஆசை இல்லையே?

நமக்குதான் ராஜ  தந்திரம் இல்லையே?

நம் நாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அண்டை  நாடுகளிடம் அவற்றை திரும்ப பெற திராணியற்ற அரசியல் உறுதியற்ற தலைமையை பெற்ற பாக்கிய சாலிகளாயிற்றே 

நாம்தான் நம்மை சுற்றியுள்ள அனைத்து நாடுகளின் அகதிகளை வரவேற்று நம் நாடு மக்களை பட்டினி போடும் பண்புள்ளவர்கள் ஆயிற்றே 

நாம்தான் அண்டை நாட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்,படைக்கலம்  கொடுத்து பிறகு அவர்கள் பச்மாசூரன் போல் நம் தலையில் தீ வைத்தவுடன் அலறுவது வாடிக்கையாயிற்றே 

மாநில எல்லை பிரச்சினைகள், நதி நீர் பிரச்சினைகள்,ஜீவாதார உரிமை பிரச்சினைகள், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அகதிகள் பிரச்சினை சுற்றுப்புற மாசு பிரச்சினைகள் என அனைத்து பிரச்சினைகளையும் அப்படியே பல்லாண்டுகாலமாக கிடப்பில் போட்டு மக்களை தாங்களே மோதிக்கொண்டு மாள்வதர்க்கு வழி வகுப்பவர்களில் வல்லவர்கலாயிற்றே 

லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்தாலும் அவர்களை முதல் தர குடிமகனாக அங்கீகரித்து சகல வசதிகளோடும் வாழ அனுமதிக்கும் ஒரே நாடு என்ற பெயர் பெற்று பெருமை படைத்துள்ளது நம் நாடு 

சகட்டு மேனிக்கு சுற்றுபுறத்தை அசுத்தப்படுத்தும் பொறுப்பற்ற மக்கள் கூட்டம் குப்பைகளை போடுபவர்கள் பல கோடி .அதை அப்புரப்படுதுபவர்கள்  மட்டும் சில லட்சம் .குப்பையை பொறுக்கி  தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள் சில லட்சம் 
.நிலம்,நீர், ஆகாயம் அனைத்தையும் மாசுபடுத்தும் கொலைகார கூட்டம். அதை தடுக்க வழியில்லாத மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் 

மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தயாரிக்கும் போலி மருந்து நிறுவனங்கள் நிறைந்த நன்னாடு போலி மருத்துவர்கள் நிறைந்த பொன்னாடு நம் நாடு 

தொலைகாட்சியும்,திரைப்படங்களும்,குடியும்  பெரும்பாலான மக்களை கட்டி போட்டுள்ளன
அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மக்களின் சிந்தனை திறனை மங்க செய்துவிட்டன

கல்வியாளர்கள் கல்வியை விற்று காசாக்குகிறார்கள்.மேல்நாட்டில் அடிமைகளாக வேலை செய்ய கல்வி அளிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற புற்றீசல் போல் தனியார் கல்வி நிருவனங்கள் 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள் அரண்மனைகள் இன்னும் இருக்க கட்டிடம் கட்டி ஒப்பந்தகாரர் காசு வாங்குவதற்குள் விரிசல் விழுவதும்,அதி குடியிருப்பவர் தலையில் விழுவதும் இங்குதான் நடக்கும். லஞ்சமும், நேர்மையின்மையும், தரமற்ற பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டுவதும் இங்குதான் நடக்கும் 

தன் வீட்டை ,குடும்பத்தை,கல்வியை வாழ்வை ஏன் தன் உயிரையும் இழந்து நம் நாட்டிற்கு நம்மை சுரண்டி அடிமைபடுத்தியவர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகள் ஏமாளிகள் .

இன்று மக்கள் முன்பு கோமாளிகள்

பலர் மக்கள் மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்கள்
பலர் மண்ணில் மறைந்துவிட்டார்கள்

மற்றவர்கள் சிலைகளாகிவிட்டார்கள்.கோயில் சிலைகள் போல் வருடத்திற்கு இருமுறை மாலை மரியாதைகள் நடக்கும்.காக்கை பிடித்து காரியங்களை சாதிக்கும் சுயநல அரசியல் தலைவர்களால்  பிறகு வருடம் ம முழுவதும் காகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அவர்கள் இருப்பார்கள்

இவ்வாறு நன்றி மறந்த மக்கள் கூட்டம் உருப்படுமா?
அவர்கள் வாழும் நாடும்தான் உருப்படுமா?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
இல்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற குரல் அவர்கள் காதில் 
ஒலிக்கவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும். இல்லாவிடில் அவர்களும் அவர்களின் சந்ததிகளும் வருந்த வேண்டும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு.மற்றவர்களின் அடிமைகளாக  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக