பிஞ்சுகளின் மரணம்தான்
மாற்றத்தை கொண்டு வருமா?
சுருதி என்னும் மழலை பிஞ்சு பள்ளி வாகன
சக்கரத்தின் கீழ் பஞ்சாகிபோனநிகழ்விற்கு பிறகுதான்
ஆட்டுமந்தை கூட்டம் போல் வாகனங்களில் அடைத்து
குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வதை தடுக்க
விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது.
அதுபோல்தான் அரசு மருத்துவ மனையில் மரணித்த பிஞ்சுவின் உடலை
எலிகளும்,நாய்களும் சிதைத்த பின்தான் அங்கு சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டன,எலிகள் கொல்லப்பட்டன.மருத்துவ மனை சுத்தம் செய்யப்படுகிறது
.
இன்று சுகாதாரமற்ற உணவுகள்,சுகாதாரமற்ற குடிநீர், மாசுபட்ட சுற்றுப்புறம் இவைகள்தான் மக்கள் நோய்வாய்ப்பட காரணம் .இதற்க்கு மூல காரணம் மக்களே. அரசை மட்டும் குறை கூறி பயன் ஒன்றும் இல்லை
அரசு கோடிகணக்கான ரூபாய்களை மக்களின் நல்வாழ்விற்க்காக கொட்டுகிறது
அதை முறையாக பயன்படுத்தி கொள்ள மக்களும் ஒத்துழைப்பதில்லை
ஒதுக்கப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா என்று யாரும் கண்காணிப்பதில்லை. முறைகேடுகள் பற்றி தணிக்கை அறிக்கை வந்தபிறகுதான் இந்த விஷயத்தை ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன..
ஒதுக்கப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா என்று யாரும் கண்காணிப்பதில்லை. முறைகேடுகள் பற்றி தணிக்கை அறிக்கை வந்தபிறகுதான் இந்த விஷயத்தை ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன..
ஆனால் அந்த பணம் போலி மருந்து நிறுவனங்களுக்கும், லஞ்ச பேர்வழிகளுக்கும் பாதி போய்விடுகிறது.
பொறுப்பான சில பணியாளர்களிடையே பொறுப்பற்ற பணியாளர்களும் மருத்துவ மனையில் இருப்பதால்.சீர்கேடுகளும் முறைகேடுகளும் நடக்கின்றன
பொதுமக்களும் எதற்கெடுத்தாலும் மருத்துவர்களையும், மருத்துவமனை நிர்வாகிகளையும் ,அரசையும் மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அதிகரித்துவருகிறது .மக்கள் அவர்களின் நல்வாழ்விற்க்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை.சுயநலத்தின் காரணமாக மாறாக அதை மீறுவதையே தங்கள் கொள்கையாக கொண்டுள்ளனர். அரசுக்கு கோடிகணக்கில் பல துறைகள் மூலம் வரும் அபராத வருவாயே இதற்க்கு சான்று.
மக்கள்சுகாதார முறைகளை கடைபிடிப்பது கிடையாது .சுற்றுபுறத்தை அசிங்கபடுத்துவதில் அவர்களுக்கு ஈடு இணை கிடையாது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைத்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.
அதே நேரத்தில் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்களையும் முறைகேடு செய்பவர்களையும் கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற சீர்கேடுகளை தடுக்க இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக