கற்பு
இந்த சொல் பற்றி விமர்சனம் செய்தால்
நாட்டில் பூகம்பமே வெடித்துவிடும்
போராட்டங்களும் ஊர்வலங்களும்
ஜாதி கலவரங்களும் இனக்கலவரங்களும்
பொது சொத்துக்களுக்கு சேதங்களும்
ஏன் பல உயிரிழப்புக்களும் கூட ஏற்பட்டுவிடும்
தமிழ்நாட்டில் இதற்காகவே சில தலைவர்களும்
அவர்களின் தொண்டர்களும்
யாராவது இது பற்றி பேசுகிறார்களா
என்று கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்
சாதாரணமாக பேச்சு வாக்கில்
ஏதாவது சொல்லி வைத்தால் கூட
சொல்லியவர்கள் தொலைந்தார்கள்
நீதிமன்றங்களும் காவல் துறையும்
வரிந்து கட்டி கொண்டு
நீதி சொல்ல புறப்பட்டுவிடும்
அப்படி என்ன சக்தி
அந்த சொல்லில் உள்ளது?
அதுதான் ஒழுக்கம் என்பது
அதை கடைப்பிடிக்கிறவர்களுக்கு கிடைக்கும்
மரியாதையை விட அதை காற்றில்
பறக்க விடுபவர்களுக்கு
மக்கள் மத்தியில்
மரியாதையும் செல்வாக்கும்
நிச்சயம் நம் நாட்டில் உண்டு
இன்று உலகில் தன் மனைவி, மகள்
கற்பு நெறி தவறாமல் இருக்க வேண்டுமென்று
கற்பை பற்றி மேடைகளில் பட்டி மன்றம் போட்டு
பேசுவோர் திரைப்படங்களில் கற்பழிப்பு காட்சிகளை
மட்டும் கண் கொட்டாமல் கண்டு ரசிப்பதேன்?
திரைப்பட தயாரிப்பாளர்கள்
இந்த காட்சிகளை ஒவ்வொரு படத்திலும்
முக்கியமாக திணிப்பதேன்?
நடிகர்களும் நடிகைகளும்
இந்த காட்சிகளில் நடிக்க சம்மதிப்பதேன்?
ஒழுக்கம் தவறியவர்கள்,
தவற்றுக்கு துணை போகிறவர்கள்,
அதை ரசிக்கிறவர்கள் அனைவருமே குற்றவாளிகளே.
ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்கள்
மற்றவர்களின் ஒழுங்கீனங்களை பற்றி
விமரிசிக்க அருகதை கிடையாது.
பாரதி எழுதி வைத்த "கற்பு நெறியை ஆண் பெண்
என்னும் இரு பாலருக்கு பொதுவில் வைப்போம்"
என்ற வரிகள் தவறு செய்யும் மனிதர்களுக்கு
நினைவில் வந்தால் நல்லது
/// கற்பு நெறியை ஆண் பெண் என்னும் இரு பாலருக்கு பொதுவில் வைப்போம் ///
பதிலளிநீக்குஉண்மை தான்... பகிர்வுக்கு நன்றி...