சனி, 4 ஆகஸ்ட், 2012

ஆறும் அதற்க்கு கீழே உள்ளதும்


ஆறும் அதற்க்கு கீழே உள்ளதும் 

மனிதன் தன்னை ஆறறிவு உடையவன் என்று பீற்றி(கொல்கிறான்)கொள்கிறான் 

அந்த அகம்பாவத்தினால் அவன் மற்ற உயிர்களை மட்டமாக எண்ணுகிறான் அவைகளுக்கு சொல்லொணா தீங்குகளை விளைவித்து மகிழ்கிறான்

தன்  சுயநலத்திற்காக அவைகளை முடமாக்கியும் கொடுமைப்படுத்தியும் 
வாயில்லாஅவைகளை பயன்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல் அவைகளை கொடூரமாக கொன்று தின்பதும் ,மதத்தின் பெயரால் சடங்குகள் என்று பல காரணங்களை கூறி அவைகளை கடவுள் பெயரால் பலியிட்டு உண்கின்றான் 

நிலைமை இவ்வாறிருக்க உலகம் முழுவதும் இன்று மனித உயிர்களுக்கும் மதிப்பில்லை மனிதர்களிடையே பகைமையை தூண்டிவிட்டு ஒருவரை ஒருவர் மிருகங்கள் போல் சண்டையிட்டு மாண்டு போய்கொண்டிருக்கின்றனர்

கூலிபடையை வைத்து வேண்டாத மனிதர்களை ஈவிரக்கமின்றி கொலை செய்வது மட்டுமன்றி  இதை தவிர சமூக விரோதிகள் தீவிரவாதிகள் மத வெறியர்கள் என இவர்களால் படுகொலைகள் தினம் அரங்கேறிக்கொண்டு வருகின்றன 
விபத்துகளாலும் போர்களாலும் மடியும்   மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் 

இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைந்து தான் தீரவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த மரணம் விதிப்படி வருகிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக் வருகிறது 

தவிர்க்க முடியாதஇந்த நிகழ்வை ஏற்றுகொள்ளும் பக்குவம் மனித குலத்திற்கு அறவே அற்று போய்விட்டது 
எல்லா அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பிணங்களை வைத்து ஆதாயம் தேடி அசிங்கமான பிழைப்பு நடத்துகின்றனர் 

ஒரு விபத்து நடந்தால் அதன் விளைவால் மரணம் சம்பவித்தால் உடனே மக்கள் கூட்டம் விபத்து விளைவித்த வாகனத்தையும் அதில் ஈடுபட்டவனையும்,சில நேரங்களில் அதில் பயணித்த அப்பாவி மனிதர்களையும் கொன்று அழிப்பதும் பொது சொத்துக்களை பாழ் படுத்துவதையும் தங்கள் தலையாய கடமையாக மக்கள் உலகம் முழுவதும் கொண்டு விட்டனர் 

தன் மீது கல்லை எறிந்த மனிதனைதான் நாய் கடிக்கிறதே தவிரகல்லை க்கடிப்பதில்லை அதற்க்கு இருக்கும் அறிவு கூட ஆறறிவுள்ள மனிதர்களுக்கு இல்லை  நிகழ்வுகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது தான் சரியான அணுகுமுறை அதை விடுத்து வாகனங்களை கொளுத்துவதோ பொது சொத்துக்களை அழிப்பதோ சட்டத்தைகையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதோ  அறிவுடையோர் செய்யும் செயலன்று என்பதை உணரவேண்டும் 

நாகரீகம் என்பது கல்வி கற்பதிலோ நடை உடை பாவனையிலோ இல்லை ஒழுக்கமுடன் ஒழுங்குடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்வதின்மூலம்தான்  மனிதர்கள் ஆறறிவுடைவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளமுடியும் 

1 கருத்து:

  1. ஒவ்வொரு வரிகளும் உரத்த சொல்லி உள்ளீர்கள்... நல்ல கருத்துடன் முடித்துள்ளது சிறப்பு ! பாராட்டுக்கள்... நன்றி...

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    பதிலளிநீக்கு