சனி, 18 ஆகஸ்ட், 2012

காவி உடையும் போலி சாமியார்களும்

காவி உடையும் போலி சாமியார்களும் 

காவி நிறம் புனிதமானது 

அந்த உடை உடுத்துவதற்கு பல தகுதிகள் வேண்டும் 

காமத்தை விட்டவன், காசின் மீது ஆசையை விட்டவன் ,கோபத்தை விட்டவன் அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி சேவை செய்பவன், சேவை செய்யாவிடில் பிறருக்கு துன்பம் இழைக்காதவன், தான் பிறருக்கு போதிப்பதை தன வாழ்வில் வாழ்ந்து காட்டுபவன், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தாதவன், பிறர் பொருளை அபகரிக்காதவன்,தன்கென்று எதையும் வைத்துக்கொள்ளா தவன், பொய் பேசாதவன், புறங் கூறாதவன் பிறர் மீது குறை காணாதவன், எந்த பாகுபாடும் பார்க்காது அனைவரின் மீதும் அன்பை பொழிபவன் பிறரை ஏமாற்றாதவன் ஆகிய நற்குணங்கள் கொண்டவன்தான் ,பணிவு கொண்டவன், ஆடம்பரமற்று எளிய தூய வாழ்க்கை வாழ்பவன் போன்றவர்கள் தான் காவி உடை உடுத்த தகுதி உடையவர்கள் 

ஆனால் இன்று சோம்பேறிகளும் உழைக்கும் திறன் இருந்தும் ,பிச்சைஎடுத்து வாழ்பவர்களும்  ,வறட்டு ஆன்மீகம் பேசி காசு பார்க்கும் வியாபாரிகளும், துன்மார்க்கர்களும் காவி உடை அணிந்து கொண்டு மக்களின் அறியாமையை மூலதனமாக கொண்டு சொகுசு கார்களில் வலம் வந்துகொண்டு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதுடன்,தான் செய்யும் தவறுகளுக்காக நீதிமன்றங்களின் படியேறி வழக்குகளை சந்தித்து கொண்டு ஆன்மீகத்தை கேலிக்குரிய பொருளாக ஆக்கிவிட்டனர் 

மக்களும் யார் உண்மையான ஆன்மீகவாதி,யார் போலி என்பதை பகுத்தறிந்து உண்மை வழி செல்லும் மார்க்கத்தை அறியாது தங்கள் உடைமைகளையும், காசையும் இழந்து தவிக்கின்றனர் 

மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஆத்மார்த்தமானது 
அவரவர் இதயத்தில் உள்ள கடவுளை உணர்வதற்கு அவரவர் உள்ளம் சுத்தமாக வேண்டுமேயன்றி இதைபோன்ற இடைத்தரகர்கள் தேவையில்லை 

பிறர் கையில் காசு வாங்கிகொண்டு தாங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்களால் கடவுளை என்றும் காட்ட முடியாது. ஏனென்றால் அவர்களே கடவுளின் பெயரை வைத்து பிழைக்கும் சுயநல வியாபாரிகள். அவர்களால் எந்தொரு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படாது என்பதை மக்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ?

1 கருத்து:

  1. நான்கைந்து வித்தைகள் தெரிந்தால், அவனுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்... ...ம்... மக்களின் அறியாமை நீங்க வேண்டும்... பகிர்வுக்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு