வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உள் நாட்டு அகதிகள்

உள் நாட்டு அகதிகள் 

சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவு 
சிதறிக் கொண்டிருக்கிறது 

சிதறிப்போன இந்தியாவை ஒருங்கிணைந்து 
ஒரே நாடாக மாற்றிய அவர் முயற்சி நல்ல பலன்களை தந்தது நம் நாட்டை நல்ல தலைவர்கள்  ஆட்சி செய்த வரையில் 

இன்று நாம் நாட்டை ஊழல் பெருச்சாளிகள் கைப்பற்றிவிட்டனர் 
அவர்கள் நம் நாட்டை கொள்ளையிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் 
மக்களிடையே இணக்கத்தை வளர்க்காமல்பிணக்குகளை  வளர்த்துவிட்டு அவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிகொள்வதிலேயே குறியாய் இருக்கின்றனர் 

நம் நாடு பல மொழி பேசும் மக்கள்,பல  மதங்களை பின்பற்றும் பல இனங்கள்,பல ஜாதிகள் என இருந்தும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சிதைக்கும் வகையில் சமூக விரோதிகளும், அரசியல் வியாதிகளும், அரசுகளும், தேச துரோகிகளும் தொடர்ந்து சில ஆண்டுகளாக முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர் 

மைய அரசு மாநிலங்களிடையே உள்ள எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முயலுவதில்லை. மாறாக வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியினை கடைபிடித்து மோதல் போக்கையே  ஊக்குவிக்கின்றன 

நம் நாடு முழுவதும் உழைப்பவர்கள் சுரண்டப்படுகின்றனர்.ஊடகங்கள் சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி மக்களிடையே மோதல்களை ஊக்குவிக்கின்றன .சமீப காலமாக நம் நாட்டை கொள்ளைஅடித்த தேச துரோகிகள்,அரசியல்வாதிகள், நீதியையே விலைக்கு விற்ற நீதிபதிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தண்டிக்கபடுவார்களா அல்லது தப்பிவிடுவார்களா என்பது கேள்விக்குறியே 

வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு காட்டும் அக்கரையில் ஒரு சதவிகிதம் கூடஉள்நாட்டில் அகதிகளாய் போய்விட்ட மக்களின் மறுவாழ்விற்கு மைய அரசு கவனம் செலுத்துவதில்லை 

இன்று நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட லட்சகணக்கான இந்துக்கள் மீண்டும் அவர்கள் பிறப்பிடம் செல்ல வழியில்லாமல் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்
.
அசாமில் நடந்த கலவரம் இன்னும் ஓயவில்லை அதை காரணமாய் வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தங்கள் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கில் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

மாநில அரசுகளும், நம் பாரத பிரதமரும் வழக்கம்போல் அறிக்கை விட்டு கொண்டு காலத்தை கழித்து கொண்டிருக்கின்றன

பங்களா தேசம் அகதிகள் பிரச்சினைக்கு அளித்த முக்கியத்துவத்தை சிறிலங்காவில் லட்சகணக்கான தமிழ்மக்கள் கொன்று குவித்த நிகழ்விற்கு மைய அரசு காட்டவில்லை 

ஆனால் மைய அரசு ஒரு வட இந்தியன் வெளி நாட்டில் தாக்கபட்டால் மட்டும் அதை கண்டிக்க முழு மூச்சோடு செயல்படுவது அது தமிழர்கள் மீது வைத்துள்ள மாற்றந்தாய் மனப்பான்மையையே தெள்ள தெளிவாக காட்டுகிறது இதற்கு காரணம் தமிழக மக்களிடையே, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தோ ஒற்றுமையோ  கிடையாது என்பதுதான் உண்மை. 

நாடு முழுவதும் தீவிரவாத குழுக்களுக்கும் அரசு காவல் துறைக்கும் மோதல்கள் அதிகமாகிகொண்டிருக்கின்றன.

இந்த நிலை நீடித்தால் பாடுபட்டு நாம் அடைந்த சுதந்திரம் நம்மிடமிருந்து
பறிபோகும் நாள் வெகு தூரத்தில் இல்லை .அதற்குள் ஆட்சியாளர்களும் மக்களும் விழித்து கொண்டால் நல்லது   

1 கருத்து:

  1. சிறந்ததொரு விழிப்புணர்வு பகிர்வு...
    அனைவரும் அறிய வேண்டும்...
    நன்றி... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு