சபாஷ் சகானா
சபாஷ் சகானா
பெண்களை போக பொருளாக கருதி காலம் காலமாக
பாலியியல் கொடுமைகளை செய்து,துன்புறுத்தி,
மத கோட்பாடுகள் என்ற பெயரால், ஜாதியின் பெயரால்
அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க வெறியர்களுக்கு
சவுக்கடி கொடுத்திருக்கும் பெண் போராளியே நீ வாழ்க
இன்று உலகம் முழுவதும்வலைத்தளத்தில்
பெண் இனத்தை மூளைசலவை செய்து
அரை குறை ஆடைகளுடன் அழகிபோட்டி நடத்தியும்,
பெண்களை நிர்வாணமாக காட்டியும் காசு பார்க்கும் வக்கிர புத்தியுடையவர்கள் நிறைந்துவிட்டனர்.
காமவயப்பட்டு அலைந்துகொண்டிருக்கும்
பல ஆண் மிருகங்களுக்கு
பதிலடி கொடுக்க உன்னை போன்ற
வீராங்கனைகள் அவ்வப்போது தேவை.
சில மாதங்களுக்கு முன் ஒரு அயோக்கியன்
பல பெண்களை ஏமாற்றி அவர்களை தன் வலையில் வீழ்த்தி
அவர்களிடமிருந்து லட்சகணக்கில் பணம் சுருட்டி அவர்கள் வாழ்வை பாழடித்த கயவன் சிக்கியதை இதயமற்ற வெட்கங்கெட்ட
இதே ஊடகங்கள் வெளியிட்டு காசு சம்பாதித்து கொண்டன
தினமும் இதேபோன்று பல கயவர்கள்
திருமணமாகாத,மற்றும் திருமண பந்தம் முறிந்த
பெண்களை குறி வைத்து ஏமாற்றி லட்சகணக்கில்
பணம் பறித்து அவர்களின் வாழ்வை சூறையாடும் சூரர்களை பற்றிய செய்திகள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன
இதேபோல் போல் இன்னும் வெளி உலகிற்கு
வெளிவாராத செய்திகள் ஏராளம்
தான் பட்ட அவமானங்களை தனக்குள்ளே வைத்து
புழுங்கி மடிந்தவர்கள் ஏராளம் இன்னும் உண்மையை
வெளியில் சொல்ல முடியாமல் பலரின்
குடும்ப சூழ்நிலைகளை கருதி மன நோயாளிகளாக
இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.
பெண்ணே நீ யாரையும் ஏமாற சொல்ல வில்லை.?
நீ யாரையும் ஏமாற்றவில்லை
உன் மீது மோகம் கொண்டு உன் பேச்சை நம்பி
உன் காலடியில் பணத்தை கொட்டி ஏமாந்தவர்கள்
ஒன்று படிக்காத பாமரர்கள் அல்ல.
எல்லாம் கணினி பொறியாளர்கள்.
தாங்கள் வலையில் பார்த்ததை
உங்களை போன்ற ஒரு அழகான சிலை அழைத்ததும்
தங்கள் ஆசைகளை மறைமுகமாகதீர்த்து கொண்டனர்
இப்போது நீ மாட்டிகொண்டதும் அவர்கள்
உத்தமர்களை போல் தினம் புலம்பி தீர்க்கின்றனர்.
.
எனவே இந்த செய்தி பெண்கள் அமைப்புகள்
கொண்டாடி மகிழவேண்டும்.
.உண்மையாக ஒரு ஆண் ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமிருந்தால் அனாதை விடுதிகளில், அல்லது தங்கள் பகுதியில் வாழும் படித்த, ஏழை பெண்களை தேர்ந்தெடுத்து வாழ்வு கொடுக்கட்டும்.
திருட்டுத்தனமாக பெண்களை சொல்லுவதை எதையும் ஆராயாமல்
அவர்களின் பேச்சை அப்படியே நம்பி மணம் செய்துகொள்ளும்
ஆண் ஏமாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால்தான்
இது போன்ற செயல்கள் நிற்கும்
அவர்களின் பேச்சை அப்படியே நம்பி மணம் செய்துகொள்ளும்
ஆண் ஏமாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால்தான்
இது போன்ற செயல்கள் நிற்கும்
இல்லை என்றால் ஒருவரை ஒருவர் பழி வாங்கும்
படலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்
படலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்
ஆராயாது கண்டதும் காதல் கொண்டால் காசும் போகும் மரியாதையும் போகும் ,மானமும் போகும்
பருவ வயதில் வரும் காம படிப்பை
இப்போது எல் கே ஜி வகுப்பிலேயே
தொடங்கி வைத்த பெருமை
சில ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களையும்
நம் திரைப்பட தயாரிப்பளர்களையும்
நடிகர் நடிகைகளையே சாரும்
ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள்
இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
காம வெறி பிடித்தவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பதை மற்றவர்கள் உணரவேண்டும்.
பருவ வயதில் வரும் காம படிப்பை
இப்போது எல் கே ஜி வகுப்பிலேயே
தொடங்கி வைத்த பெருமை
சில ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களையும்
நம் திரைப்பட தயாரிப்பளர்களையும்
நடிகர் நடிகைகளையே சாரும்
ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள்
இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.
காம வெறி பிடித்தவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பதை மற்றவர்கள் உணரவேண்டும்.
அறியாமை தான் காரணம்...
பதிலளிநீக்கு///ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள்
இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ///
ஏமாறுபவர்கள் தான் குற்றவாளி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...