வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வதந்திகளும் வன்முறைகளும்

வதந்திகளும் வன்முறைகளும்

வதந்தி மனித குலத்தை பீடித்து இவ்வுலகில் நிரந்தரமாக தங்கிவிட்ட 
ஆட்கொல்லி நோய் 

அது செல்லும் இடமெல்லாம் மக்கள் மனதில் பீதியை தோற்றுவித்து 
மக்களை வீதியில் போராட வைக்கிறது

வதந்திகள் பெரும்பாலும்  மதம் சார்ந்தும் மக்கள் இனம் சார்ந்தும் 
உள்ளன .மற்ற மதத்தினரால் அல்லது இனத்தினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற வகையில் வதந்திகள் உருவாக்கப்பட்டு விஷமிகளால் 
பரப்பபடுகின்றன .அரசும் காவல் துறையும் மெத்தனமாக இருப்பதால் பாதிக்கப்படும் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகிறார்கள்.

பன்னெடும் காலம் பல லட்சம் மக்கள்  பாடுபட்டு உருவாக்கிய சொத்துக்களையும் உறவுகளையும் ஒரு நொடி பொழுதில் அழித்து நாசமாகிவிடுகிறது 

ஒரு நொடியில் பல்லாண்டுகளாக நண்பர்களாக ,மத நல்லிணக்கம் கொண்டவர்களாக இருந்த  நண்பர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மாண்டு போகின்றனர் 

இந்த நோய்க்கு படித்தவரும், பாமரரும் ஏன் நாடுகளுமே பலியாகிவிடுகின்றன

இந்த அவ நம்பிக்கைகள் மக்களை அவர்கள் தோன்றி வாழ்ந்துவளர்ந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கிவிடுகின்றன 

அகதிகளாக ஆனவர்கள் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படுவதே கிடையாது 
அவர்கள் வாழ்க்கை சாலை ஓரங்களிலும் மற்ற மனிதர்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களினாலும்  எத்தகைய பாதுகாப்புமின்றி அவர்களின் துன்பங்கள் தொடர்ந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது 

உலகம் முழுவதும் இந்த அவல நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது
எந்த அரசுகளும் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை

வதந்திகளை பரப்பும் கொடியவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதுதான் பொருத்தம் ஆனால் அவர்களுக்கும் ஆதரவு தர ஒரு கூட்டம் காத்துகொண்டு இருக்கிறது. இவர்கள் வதந்திகளை பரப்புபவர்களை விட கொடியவர்கள் என்றுதான் கருதவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக