வியாழன், 16 ஆகஸ்ட், 2012

உண்மையான தமிழன் யார்?


உண்மையான தமிழன் யார்?

உண்மையான தமிழன் யார்?

மலையாளி என்றால் அவன் எங்கிருந்தாலும் ,எந்த பிரிவை சார்ந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் மலையாளியாக்தான் இருக்கிறான்.அப்படித்தான் தெலுங்கனும் மற்ற மொழி பேசுபவர்களும் 

ஆனால் தமிழனோ ஈழ தமிழன்,மலேசிய தமிழன், கேரளா தமிழன் ,என இருக்கும் இடத்தின் மற்றும் நாட்டின் பெயர்  இணைத்துதான் அறியபடுகிறான்

இதில் போதாகுறைக்கு உயர்சாதி,தாழ்த்தப்பட்டவர்கள்,மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர்,ஆத்திகர்கள்,நாத்திகர்கள், எந்த பிரிவிலும் சேராதவர்கள் என ஒருவரைஒருவர் எதிரியாக பார்க்கும் மனப்பான்மை வேறு

போதாகுறைக்கு தமிழனில் பல மொழி கலப்பு,இன கலப்பு, ஜாதி கலப்பு,அரசியல்கலப்பு,மத கலப்பு என எண்ணிலடங்கா பிரிவுகள்

ஒரு தலைவன் சொல்லுவதை மற்ற தலைவன் ஏற்றுகொள்ளுவதில்லை
அதைபோல் அவர்களை பின்பற்றும் ஆதரவாளர்களும் அப்படியே

தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டனைவர்களும் 
தமிழர்களாக அங்கிகரிக்கும் மனப்பான்மை வளரவேண்டும்
எத்தனை உள் வேறுபாடுகள் இருந்தாலும் அத்தனையும் மறந்துவிட்டு
பொதுநலனுக்காக தமிழர்கள் இணைந்தால்மட்டுமே தமிழனுக்கு எதிர்காலம் உண்டு

தமிழன் தங்களுக்குள்ளேயே ,தங்களுக்குதானே
குழி வெட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்
நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம்

ஆனால் அது நம்மையே கருவறுக்கும்
அருவறுக்கும் நிலமைக்கு செல்வதை
இனியாவது தவிக்க வேண்டும்

நம்மை நாமே எத்தனை  நூற்றாண்டுகள்
தாழ்வாக விமரிசித்து பிறரின்
கேலிபோருளாக ஆகவேண்டும்
.
குறையில்லாத மனிதனில்லை
குறை காண்போரிடமும் குறைகள் உண்டு
கடந்தகால கறை படிந்த வாழ்க்கையுண்டு
குறைகள் நிறைந்த இவ்வுலகில்நிறைகளை
காண முயற்சிப்போம் 

உண்மைகளை உணர முற்படாது
உணர்ச்சி வசப்பட்டு தமிழர்களையும் 
தமிழ்நாட்டையும் சிதைத்தது
போதும் .போதும்

நிகழ்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் கடந்த கால
கசப்பான் நிகழ்வுகளை மறப்பதுதான் அனைவருக்கும் நல்லது
அதை விடுத்து அதையே தோண்டி துருவி பகைமையை
வளர்ப்போர் தமிழ் மக்களுக்கு  செய்யும் தொண்டாகாது
அது அவர்கள் தங்களுக்கு  தானே வைத்துகொள்ளும் குண்டு


இந்த அடிப்படையில் விட்டுகொடுத்து அனைத்து தமிழர்களும்
தங்கள் மனதை விரிவாக்கி இணைந்தால்தான் தமிழர்கள் உலக அரங்கில் பாதுகாப்பாக வாழ முடியும்

பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்வோம் என்றன் பாரதி 
ஆனால் தமிழர்கள் யாருக்காகவாவது அல்லது போதைக்கு அடிமைகளாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறார்கள் 
தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிகொல்பவர்கள் இதை கருத்தில் கொள்ளாத வரையில் உலகில் எங்காவது தமிழ் ஆடுகள் பாதிக்கப்படும்போது மற்ற தமிழ் ஆடுகள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கதான் செய்யும் 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
என்ற பாரதியின் வாக்கு நமக்கு உலக அரங்கில் செல்வாக்கை தேடி தரும் 

1 கருத்து: