திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி


                                                                                 


                                                                                    


















உன் கண்ணில் நீர் வழிந்தால் 
என் கண்ணில் உதிரம் கொட்டுதடி 
என்றான் பாரதி 


இன்று உலகெங்கிலும் மக்கள் கோடிகணக்கில் அகதிகளாக 
நாடிழந்து,வீடிழந்து,உடைமைகளை இழந்து,உரிமைகளை இழந்து 
பாதுகாப்பு இல்லாமல் அலைகழிக்கபடுகின்றனர் 

இந்த கொடும் செயலை மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் 
அரசுகளும் இதயமற்ற பல அரக்க கூட்டங்களும் செய்து வருகின்றன 

இன்று கடலின் நீர் உப்பு கரிப்பதற்கு காரணம் இந்த அபலைகளின் கண்களிலிருந்து வழிந்து ஓடிகொண்டிருக்கும் கண்ணீர்தான் 
என்பது பலருக்கு தெரியாது 

உலகில் ஒரு பக்கம் செல்வத்தை  ஆடம்பரமாக 
செலவு செய்து வீணடிக்கிறது ஒரு கூட்டம் 

விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் 
கோடி கோடியாய் பாழடிக்கிறது ஒரு கூட்டம் 

வல்லரசுகள் ஆயுதங்களை தயாரித்து 
மனிதகுலத்தை கொன்று நாசம் செய்துகொண்டிருக்கின்றன 

மனித குலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காத 
ஆராய்ச்சிகள் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை விரயமாக்கிகொண்டிருக்கிறது சில நாடுகள் 

இந்த அபலைகள் கூட்டம், உரிமையற்ற கூட்டம்,
அப்பாவி கூட்டம் ,நாளுக்கு நாள் பெருகிகொண்டிருப்பதை 
இந்த உலக மக்கள்  கண்டும் காணாமல் இருப்பது 
மன்னிக்க  முடியாத குற்றமாகும் 

இந்த நிலை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் 
என்பதை வசதியாக வாழும் மனிதர்கள் உணரவேண்டும் 

மியன்மாரில், அன்பை போதித்த புத்த மதத்தை சேர்ந்த மக்களும் சகோதரத்துவத்தை போதித்த நபிகள் நாயகம் கண்ட இஸ்லாமிய மக்களும் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மாள்வது வருந்தத்தக்க செயலாகும் 

அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இயலாத நிலையில் அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை. 

1 கருத்து:

  1. வருத்தப்படும் நிலைமை...
    விரைவில் எல்லார் வாழ்வும் மாறி அமைதி நிலவட்டும்..

    பதிலளிநீக்கு