சுதந்திர தின சிந்தனைகள்
இந்தியா அந்நிய ஆதிக்க ஆட்சியாளர்களிடமிருந்து சு(தந்திரம்)
அடைந்து அறுபத்திஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன
சுதந்திரம் நமக்கு
நம் நாட்டு மக்களுக்கு
நம் நாட்டு மக்களுக்கு
என்ன தந்திருக்கிறது ?
இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறிவிட்டது என்று ஒரு சிலரும்
முன்னேறவில்லை என்று ஒரு சிலரும் பட்டிமன்றம் மட்டும் சுதந்திர நாள் அன்று நடத்தி உண்மையை மறந்து மகிழ்ச்சி கடலில் மக்கள் துள்ளுவார்கள்
மற்றவர்கள் ,டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்கள் (குடும்பம்)வயிறு எரிய குடிப்பார்கள்
ஊடகங்கள் விளம்பரங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளை ஒளி பரப்பி மூலம் பல லட்சம் கோடிகளை அள்ளும்
அரசியல் தலைவர்கள் காந்தி சிலைகளுக்கு மாலையிட்டு கொடியேற்றி ,காவல்துறை, ராணுவ துறை ஆகியவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு சுற்றியிருப்பவர்களுக்கு (ஹல்வா)மிட்டாய் கொடுத்து ஏழைகளுக்கு உதவி என்ற பெயரில் பிச்சையிட்டு (ஹவாலா )வழியில் கொள்ளையடித்த பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் சேமித்து தங்கள் ஜனநாயக கடமைகளை முடித்து கொள்வார்கள்
ஆனால் நாடு என்ன நிலையில் இருக்கிறது?
எந்த திசையை நோக்கி போய்கொண்டிருக்கிறது?
யாருக்கும் விழிப்புணர்வு இல்லை
மக்களுக்கும் எந்த விஷயத்திலும் தெளிவான சிந்தனைஇல்லை அரசும் ஊடகங்களும் மக்களை குழப்புகின்றன
உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன
உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன
எதை பற்றியும் கவலைப்படாத மக்கள் பிரச்சினைகள் தங்களை நேரடியாக தாக்கும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன.பல உயிரிழப்புகளும் பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்ட பின் அவைகள் ஓயந்துவிடுகின்றன
இந்நிலை ஆண்டாண்டுகாலமாக அப்படியேதான் தொடர்கின்றன
எந்த பிரச்சினைக்கும் தீர்வென்பது கனல் நீராகிவிட்டது.
நாட்டில் வறுமை ஒழியவில்லை.மாறாக அதிகரித்துவிட்டது
நம் உயிர் காக்கும் விவசாயிகளின் உயிருக்கும் அவன் வளர்க்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை .அவனுக்கு நிலம் சொந்தம் இல்லை
அவன் உழைப்பையும் வருவாயையும் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் ,கடன் கொடுத்தவர்களும் பிடுங்கி தின்கிறார்கள்
அவன் உழைப்பையும் வருவாயையும் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் ,கடன் கொடுத்தவர்களும் பிடுங்கி தின்கிறார்கள்
சுகாதார சீர்கேடுகள் பெருகி மக்கள் பல்வேறு நோய்களினால்
மாண்டு போகின்றனர்
அரசு மருத்துவ மனைகளில் காசில்லா மனிதனுக்கு கடைசி யாத்திரை நிச்சயம் .அதுவும் பிணத்தை வாங்குவதற்குள் அங்குள்ள உயிருள்ள பிணங்கள் பணத்தை கறந்து விடும்
மருந்துகளும் போலி மருத்துவர்களும் போலி
அதை மறந்து மக்கள் கொண்டாடுகிறார்கள் ஹோலி
எங்கு பார்த்தாலும் லஞ்சம் எதிலும் லஞ்சம்
கருவிலிருந்து கல்லறை வரையிலும்
ஏன் ? அதற்க்கு பின்னும் லஞ்சம்
வஞ்சம் தீர்க்கும் கூட்டம் எதிரிகளை
கொன்று தீர்க்கிறது காசிற்காக
கொன்று தீர்க்கிறது காசிற்காக
பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை
பள்ளியிலும் இல்லை பொது இடங்களிலும் இல்லை
கல்வி போதிக்கும் ஆசிரியர்களைவிட விட கலவியை பற்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெருகிவிட்டார்கள்
பள்ளியிலும் இல்லை பொது இடங்களிலும் இல்லை
கல்வி போதிக்கும் ஆசிரியர்களைவிட விட கலவியை பற்றி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பெருகிவிட்டார்கள்
இந்தியர்களை வதைக்க வெள்ளையன் போட்ட கருப்பு சட்டங்கள் ஆட்சிகள் மாறினும் இன்னும் அப்படியே உள்ளன சட்டம் மட்டும்
மாற்றப்பட்ட பழைய படங்கள் போல் .அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்தி அப்பாவி மக்களை வதைக்கின்றன
ஊதாரித்தனமாக பொது பணத்தை வீணடிக்கும் அரசு யந்திரங்கள்
ஆளும் வர்க்கம் தட்டி கேட்பவர்களை இரக்கமின்றி கொன்று குவிக்கும் மனபோக்கு
ஆளும் வர்க்கம் தட்டி கேட்பவர்களை இரக்கமின்றி கொன்று குவிக்கும் மனபோக்கு
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர எந்த அரசும் தயாராக இல்லை
மக்களுக்கும் இந்த முக்கியமான சுகாதார பிரச்சினையை பற்றி
சிந்திக்கும் அறிவும் இல்லை
செயலை விட இன்று பேச்சுதான் அதிகமாக உள்ளது.அதை இன்னும் வளர்க்க மையா அரசு கைபேசிகளை இலவசமாக வழங்க போகிறதாம்.ஏற்கெனவே கைபேசியில் பேசிக்கொண்டே விபத்தில் சிக்கி மரணமடையும் கூட்டம் பெருகி கொண்டே போகிறது.
அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல் சுகாதார கேடு விளைவிக்கும்
சரியாக பராமரிக்கப்டாமல் சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின்
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு
ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும்
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும்
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்களென்றால் நல்லது
மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகளே,பன்னாட்டு நிறுவனங்களே
அரசியல்வாதிகளே,பன்னாட்டு நிறுவனங்களே
உழைத்து உழைத்து ஓய்ந்து போயிருக்கும் மக்கள்
உங்களை துவைத்து எடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
இப்படியே சென்றால் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் தயாராகும் நாள் வெகு தூரம் இல்லை
நாட்டில் நடக்கும் உண்மைகளை உரத்தி சொல்லி உள்ளீர்கள்...
பதிலளிநீக்குதொலைக்காட்சி முன் தவம் இருப்போர் பலர்... இதனால் மற்ற சிந்தனைகள் எல்லாம் எங்கே வரப்போகுது...?
/// இப்படியே சென்றால் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் தயாராகும் நாள் வெகு தூரம் இல்லை///
விரைவில் அந்த நாள் வரட்டும்...
நன்றி...